சூப்பர் சிங்கரில் சக்சஸ்.. அடுத்து பாடகி ராஜலட்சுமிக்கு வந்த குபீர் ஆசை.. அதிர்ஷ்டம்னா எது தெரியுமா?
சென்னை: பிரபல நாட்டுப்புற பாடகியான, சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி, மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றியும், தன்னுடைய 2 லட்சியம் குறித்தும் சொல்லி உள்ளார்.. பேட்டி ஒன்றில் பேசும்போது, தன்னுடைய உறவினர்கள் குறித்தும் பெருமிதமாக கூறியிருக்கிறார்.
Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு பாடகி ராஜலட்சுமி தந்துள்ள பேட்டியில், "எங்கள் சொந்தக்காரர்களை பற்றி சொல்லி ஆகணும்.. தூரத்து சொந்தக்காரர்களுடன் நாங்கள் எப்போதுமே நெருக்கமாகவும் இல்லை, தூரமாகவும் இல்லை.. ஆனால், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே எங்களுக்கு உதவுபவர்கள். நாங்கள் கஷ்டப்படும் காலத்திலிருந்தே எங்களுக்கு இவர்கள்தான் உதவினார்கள்..

பொருளாதார ரீதியாகவும், அடையாளத்தின் அடிப்படையிலும் நாங்கள்தான் இன்று அடுத்த லெவலுக்கு வந்துள்ள முல்தலைமுறையே நாங்கள்தான்.. அதனால் எங்கள் சொந்தக்காரர்களுக்கு கடன் பிரச்சனை உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் சரி, நாங்கள் 2 பேரும் அவர்களை பார்த்துப்போம் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் நிறையவே வளர்ந்திருக்கு. இது எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.
பொதுவாக, சொந்தக்காரர்களால் பிரச்சனை என்றெல்லாம் சொல்வார்கள்.. அப்படி எங்களுக்கு நடந்ததில்லை.. எங்களது வளர்ச்சியை பார்த்து யாரும் பொறாமைப்பட்டதும் இல்லை. நம்ம பிள்ளைங்க மேல வருவது சந்தோஷம் என்றுதான் எல்லாருமே எங்களை பார்க்கிறார்கள்.
கணவரின் காதல்: என் கணவர் என்னை, முன்பைவிட இப்போதுதான் அதிகமாக லவ் பண்றாரு.. அதுக்காக மத்தவங்கள மாதிரி லவ் சொல்றது, போனில் கொஞ்சுவது, சாப்பிட்டியான்னு கேட்டுட்டு இருக்கிறது இதெல்லாம் செய்ய மாட்டாரு.. ஆனால், பக்கத்துல இருக்கும்போது, வேற லெவல்ல சூப்பரா லவ் செய்வாரு..
எனக்கே ஆச்சரியமா இருக்கும்.. 4 வருஷம் நாங்கள் லவ் பண்ணோம்.. கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆச்சு .. ஆனாலும், காலையில் தூங்கி எழுந்தது முதல் நைட் தூங்கற வரைக்கும், ஒருத்தரை எதிர்பார்த்துட்டே இருந்து, அவங்க நேர்ல இருக்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ, அதே மனநிலைமையில்தான் என்னிடம் இருப்பார்.
சந்தோஷம்: என் பொண்டாட்டி இருந்தாலே, சந்தோஷம்தான் என்பார். ஒரு சினிமாவுக்கு போனால்கூட பக்கத்திலயே இருக்கணும்னு நினைப்பார். அவங்க அப்பா, அம்மாகூட ஊர்ல போய் இருந்தாலும்கூட 2 நாள்தான் அங்கே இருப்பார்.. உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துடுவார.
மீடியாவை பற்றி சொல்லும்போது, இப்போது அனைத்தையும் நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் பெற்று வருகிறோம். ஆனால் எங்கள் வீடுகளில் தான், ஏதாவது ஒரு செய்தி தவறாக வந்துவிட்டாலும், அதை ஏற்றுக் கொள்வதில்லை.. உடனே பதறிப்போய்விடுறாங்க.. சிலர் போன் பண்ணியே கேட்டுருவாங்க..
அதிர்ஷ்டம்: எப்போதுமே அனைவருக்குமே அதிர்ஷ்டம் இருக்கும்.. அதிர்ஷ்டம் எல்லார்கிட்டயும் போகவே செய்யும்.. ராம்கி சார்கூட இதை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதிர்ஷ்டம் வரும்போது, அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய திறமை நம்மிடம் இருந்தால்தான், அந்த அதிர்ஷ்டம் ஒர்க் ஆகும்.. அதுக்காக வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்க கூடாது..
விஜயகாந்த் சாரை எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்.. எங்க குடும்பத்துக்கும் அவரை பிடிக்கும்.. ஒரு விழாவில் விஜய பிரபாகரன் சாரை பார்த்தோம்.. "அப்பா உங்க சீசன் ஷோவை பார்த்துட்டே இருப்பார்" என்று சொன்னதுமே, எங்களுக்கு ஆச்சரியமாகிவிட்டது.. ஒருமுறையாவது அவரை நேரில் பார்த்துட மாட்டோமான்னு ஏங்கிட்டு இருந்தோம். ஆனால், அவர் டிவியில எங்கள் நிகழ்ச்சியை பார்த்திருக்காருன்னு சொன்னதும், அவ்வளவு மகிழ்ச்சியை தந்தது.
லட்சியம் : எனக்கு பெரிய லட்சியம் எல்லாம் இல்லை.. எப்போதும் இயங்கிக்கிட்டே இருக்கணும், தேங்கி நிற்க கூடாது.. அதேபோல, பிஎச்.டி செய்யணும், இந்த வருஷமே ஆரம்பிக்கணும்.. எம்ஃபில் வரை முடிச்சிட்டேன்.. இன்னும் 2 வருஷத்தில் பி.எச்.டி. முடிச்சிடணும், முனைவர் பட்டமும் வாங்கிடணும்.. இதுதான் என்னுடைய ஆசை" என்று கூறியிருக்கிறார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications