இசையமைப்பாளர் சிற்பியை ஞாபகம் இருக்கா? விஜய் டிவியில் அறிமுகம்.. அதுவும் கூட வந்தது யாரு தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் ராக்ஸ்டார் மனோ என்ற தலைப்பில் பாடகர் மனோவை பெருமைப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் இசையமைப்பாளர் சிற்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.
அதுபோல இசையமைப்பாளர் சிற்பியோடு சேர்ந்து பாடகி மால்குடி சுபாவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் நிலையில் மேடையில் மனோவை பாராட்டி சில வார்த்தைகளை பேசி இருக்கின்றனர். அதுபோல மனோ செய்த நெகிழ வைத்த செயல் குறித்தும் சிற்பி மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் இந்த வாரம் ராக் ஸ்டார் மனோ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் மனோ பாடிய பாடல்களை பாட இருக்கிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த பாடகர் மனோ சில சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்த வாரம் அவருடைய பெயரில் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் அவரும் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு அவருடைய நண்பர்கள் பலரும் அதில் கலந்து கொண்டிருக்கிறனர். அந்த வகையில் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பல வருடங்களுக்குப் பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அதுவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மேடையில் மனோவை பாராட்டி வெண்ணிற ஆடை மூர்த்தி பேசி அனைவரையும் பீல் பண்ண வைத்திருந்தார். அதுபோல மனோவின் மனைவியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் சிற்பியும் மனோவிற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அதோடு நிகழ்ச்சிக்கு வந்த சிற்பியிடம் தொகுப்பாளர் பிரியங்கா நீங்க மனோவை எப்படி கூப்பிடுவீங்க என்று கேட்க அதற்கு நானும் மனோவும் நெருங்கிய நண்பர்கள். அதனால் பேசிக் கொள்ளும்போது மாமா மச்சான் என்று பேசிக்கொள்வோம். ஆனால் மேடையில் அவரை சார் என்று கூப்பிடுவதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று என்று சிரித்தபடியே பேசி இருந்தார்.
அப்போது அவரோடு அந்த மேடைக்கு வந்த மால்குடி சுபா மனோவை குறித்து பெருமையாக பாடி இருந்தார். நீ எனக்கு தம்பியாகவும் நல்ல நண்பனாகவும் இருக்கிறாய் என்று மால்குடி சுபா பாட அவருக்கு மனோ பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தார். இந்த க்யூட்டான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதுபோல இந்த வாரம் மனோவிற்காக ஸ்பெஷல் ஆக பல பிரபலங்கள் பல வருடம் கழித்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறார்கள்.

அதுபோல இன்னொரு ப்ரோமோவில் இசையமைப்பாளர் சிற்பியின் இசையில் "அழகிய லைலா அது இவ்வளவு ஸ்டைலா" பாடல் மனோ பாடியிருந்தார். ஆனால் அந்த பாடல் பாடும்போது கடைசி நேரத்தில் தான் மனோவை வைத்து பாடலாம் என்று முடிவு செய்யப்பட்டதாம். அப்போது மனோவிடம் கேட்கும் போது உங்களுக்காக வந்து பாடுகிறேன் என்று சொல்லி வந்து மனோ கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குள் அந்த பாடலை முழுமையாக பாடி முடித்துவிட்டு போய்விட்டார் என்று அந்த மேடையில் சிற்பி சொல்ல, தொகுப்பாளர் பிரியங்கா மீண்டும் அந்த பாடலை மனோவை பாட சொல்லி இருந்தார். அந்த வீடியோவும் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications