சூப்பர் சிங்கர் சீசன் 11: மாகாபாவை மிஞ்சிய மிஷ்கின் - இளையராஜாவின் இசை மேஜிக்! நெகிழ்ச்சி காட்சி
சென்னை: விஜய் டிவியில், ரசிகர்களின் மனம் கவர்ந்த, பிரபல பாடல் ரியாலிட்டி நிகழ்ச்சியான, 'சூப்பர் சிங்கர்' சீசன் 11, புதிய அணிகள், புதிய நடுவர்கள், எனப் பல புதிய மாற்றங்களுடன், தொடங்கியுள்ளது. இந்த சீசனின், தொடக்க விழா, ஒரு பெரிய கொண்டாட்டமாக, இருந்தது.

பிரியங்காவை மிஞ்சிய மிஷ்கின்
இந்த சீசனின், முக்கியமான வித்தியாசம், நடுவர்களில் ஒருவராக, இயக்குநர் மிஷ்கின், இணைந்திருப்பதுதான். இளையராஜாவுடன் இணைந்து, மூன்று திரைப்படங்களில், மிஷ்கின் பணியாற்றியிருப்பதாலும், அவரே, ஒரு இசையமைப்பாளர், என்பதாலும், அவருக்கு, இசைக்கும், சம்மந்தம் இருக்கிறதா, என்று, கேட்கத் தேவையில்லை.
அலப்பறை
விஜய் டிவி நிகழ்ச்சிகளில், பிரியங்கா இருந்தால், அங்கு, 'ஹைடெசிபலில்', சத்தம் இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியில், பிரியங்காவையும் மீறி, அலப்பறைகள் செய்கிறார், மிஷ்கின். பெரும்பாலோனோரை, அடேய், வாடா, போடா என்று அழைத்து, அநியாயம் செய்கிறார். மற்றவர்களைக் கலாய்க்கும் மாகாபா ஆனந்த் கூட, மிஷ்கினின் அலப்பறைக்கு முன்னால், அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.
நடுவர்களின் நிலை உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் எல்லாம், இந்த நிகழ்ச்சியின், ஆஸ்தான வித்வான்கள். புதிதாக, தமனும், சேர்ந்திருக்கிறார். மிஷ்கினின் அலப்பறைக்கு, ஒரளவிற்கு, 'கவுன்டர்' தந்து, அடக்கும் திறமை, தமனுக்கு, இருக்கிறது.
போட்டியாளர்களின் அதிரடி
பழைய சீசன்களில், போட்டியாளர்கள், பவ்யமாக, பயந்து பயந்து, வருவார்கள். ஆனால், இந்த சீசனில், பெரும்பாலான போட்டியாளர்கள், உள்ளே நுழையும்போதே, பயங்கர தன்னம்பிக்கையுடன், வருகிறார்கள். போதாதற்கு, நன்றாகவே, பாடுகிறார்கள்.
தர்ஷனா என்ற, ஓர் இளம் பெண், 'காக்க காக்க' படத்திலிருந்து, 'தூது வருமா?' என்று பாடலைப் பாடினார். அட்டகாசமான 'attitude' உடன், அவர் பாடியது, அனைவரையும், கவர்ந்துள்ளது. அதேபோல 'சின்னத்தாயி' படத்திலிருந்து, 'நான் ஏரிக்கரை மேலிருந்து' என்ற பாடலை, சரண் கொஞ்சம் போட்டியாளர் பாட ஆரம்பித்தபோது, ஒட்டுமொத்த சூழலே, மாறிப் போனது. 'மனதிற்குள், திடீரென்று, ஏஸி காற்று, நுழைவதைப் போன்ற', ஒரு பிரமையை, ஏற்படுத்தியது.
ராஜா மேஜிக்
'நான் ஏரிக்கரை மேலிருந்து' பாடலோடு, 'சிங்களத்து சின்னக் குயிலே', 'வளையோசை கலகலவென' என்று, மூன்று இளையராஜா பாடல்கள், பாடப்பட்டன. மற்றவர்கள் பாடிய அனைத்தையும், 'ஓவர்டேக்' செய்து, இந்தப் பாடல்கள், மட்டும், காதில், தனியாக ஒலித்தன. நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு , கிராமத்தின் சூழல், என்னவென்று, தெரியாது. ஆனால், இந்தப் பாடலைக் கேட்க, ஆரம்பித்தவுடன், எங்கோ, ஆற்றங்கரையில் அமர்ந்து இயற்கையை ரசிப்பது போன்ற, உற்சாகம், வந்து விட்டது.
இந்த சீசனில் வந்திருக்கும், பெரும்பாலான போட்டியாளர்கள், இன்னும், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்குள், பல திரைப்படப் பாடல்களைப் பாடியிருப்பார்கள், அத்தனை 'புரொஃபஷனல்' பாடகர்களாக, இருக்கிறார்கள், என்று, விமர்சகர்கள், கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பக்தி சீசன் முடிவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சி புதியதாக தொடங்கப்பட்டாலும் அதுவும் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து இப்போது புதிய கான்செப்ட்டில் சூப்பர் சிங்கர் 11 வது நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications