எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. டிஜே பிளாக்கை எச்சரித்த சூப்பர் சிங்கர் பூஜாவின் தாய்! பரபரப்பு
சூப்பர் சிங்கர் போட்டியாளர் பூஜாவின் தாய் டிஜே பிளாக்கை எச்சரித்த வீடியோ
சென்னை: சூப்பர் சிங்கர் போட்டியாளர் பூஜாவின் தாய் டிஜே பிளாக்கை கடுமையாக எச்சரித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் போட்டியாளர்களும் அங்கிருந்த நடுவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
80, 90 கிட்ஸ் காலத்தில் பொழுதுபோக்கு என்றால் அது சினிமா, இல்லாவிட்டால் சினிமா பாடல்களின் கேசட்டை ஒலிக்க விடுவது, அதையும் தாண்டி கிரிக்கெட் விளையாடுவது இப்படித்தான் பொழுதை கழித்தனர். டிவிக்கள் பெரும்பாலானோர் வீடுகளில் இல்லாத நிலையில் இதுதான் பொழுதுபோக்காக இருந்தது.
அதிலும் டிவியிருந்தால் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி வெளியாகும். அதன் பின்னர் கேபிள் டிவி முறை வந்த பிறகும் அந்த அளவுக்கு நிகழ்ச்சிகளில் வெரைட்டி இல்லாமல் இருந்தது.

சேனல்கள்
இந்த நிலையில் தற்போது பெரும்பாலான சேனல்களில் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதிலும் விஜய் டிவியில் பல்வேறு காமெடி ஷோக்கள், குக்கரி ஷோக்கள், டான்ஸ் ஷோக்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதில் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் தனித்தனியே நடத்தப்படுகிறது.

ஷோக்கள்
இந்த ஷோக்களில் பாடியவர்களுக்கு சினிமாக்களில் வாய்ப்புகளும் கிடைக்கின்றன என்பதால் நல்ல குரல் வளம் இருப்பவர்கள் இதில் ஆடிஷன் போய் இந்த நிகழ்ச்சிக்கு தேர்வாக மாட்டோமா என பலரை ஏங்க வைக்கிறது இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 8 சீசன்களை கடந்து தற்போது 9ஆவது சீசன் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிரியங்கா
இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த், பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள். இதில் நடுவர்களாக ஸ்வேதா மோகன், பென்னி தயல், அனுராதா ஸ்ரீராம், சரண், மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். சில நேரங்களில் சிறப்பு அழைப்பாளர்களும் அழைக்கப்படுவார்கள். அவர்கள் முன்னிலையில் பாடும் போதும் சிறப்பாக பாடுவோருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.

விறுவிறுப்பு
இந்த சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே டிஜே பிளாக். இந்த நிகழ்ச்சியில் வரும் காமெடிகளுக்கு இவரும் ஒரு காரணம். அதிலும் இந்த சீசன் தொடங்கியதில் இருந்து போட்டியாளர் பூஜாவை இவர் காதலிப்பதாக கூறி இவர் போடும் பாடல்கள் செமையாக இருக்கும்.

எடிட்டட் வீடியோ
இந்த பாடல்களை சமூகவலைதளங்களில் எடிட் செய்யப்பட்டு வெளியிடுகிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பூஜாவின் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருகிறார்கள். அப்போது பூஜை, தனது பாட்டி, பெரியம்மா, அம்மா உள்ளிட்டோரை அறிமுகப்படுத்துகிறார். அப்போது நான் கூட உன்ன சின்னப்புள்ளன்னுதான் நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனால் சேலையில் பார்த்த பிறகு தான் என்ற வரிகளை பிளே செய்துவிட்டு டிஜே பிளாக் மேடைக்கு வருகிறார்.

சூப்பர் சிங்கர் பூஜா
அப்போது பூஜாவின் தாய், சூப்பர் சிங்கர் பூஜா என போட்டாலே டிஜே பிளாக் பூஜா இப்படித்தான் கூகுளில் வருகிறது. அதில் எனக்கு கொஞ்சம் மன வருத்தம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு லிமிட் இருக்கிறது இல்லையா? அவ ஒரு பெண் குழந்தை, எல்லாத்தையும் எல்லா மனசிலயும் வச்சிக்கணும் இல்லையா என தாய் கேட்க, அதற்கு பிளாக் , எல்லாருக்கும் போடுற மாதிரிதான் டிஜே பிளே செய்கிறேன் என சொல்ல அதற்கு பூஜாவின் அம்மா எனக்கென்னவே கொஞ்சம் ஜாஸ்தியாக இருப்பதாக ஒரு பீல் வருகிறது என சொல்கிறார்.

அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்
இதை கேட்டு பிளாக், நடுவர்கள், போட்டியாளர்கள் எல்லாம் அதிர்ந்து போகிறார்கள். ஆனால் நெட்டிசன்களோ இது ப்ராங்க் என்கிறார்கள். சிலர் பூஜா சிரித்து கொண்டே இருப்பதால் பூஜாவின் அம்மா ப்ராங்க் செய்கிறார் என்கிறார்கள். எனவே இது ப்ராங்கா இல்லை நிஜமாகவே பூஜா அம்மா கண்டித்ததா என்பது நிகழ்ச்சியில் தெரியவரும். இதுவரை நடுவருக்கும் போட்டியாளருக்கும் சண்டை, நடுவர்களுக்குள்ளேயே சண்டை போட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பது போன்ற ப்ரோமோக்களை பார்த்துள்ள நிலையில் அவை ப்ராங்க்காகவே இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications