என் சோகக் கதையை கேளு தாய்க்குலமே.. செட் ஃபினாலே சுற்றாமே!
சென்னை: விஜய் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவின் கிராண்ட் ஃபினாலே இசை அமைப்பாளர் அனிருத் மத்தியில் கோவையில் நடக்க இருக்கிறது.
இந்த இறுதி போட்டி நேரலையில் ஒளிபரப்பாக இருக்கிறது. போட்டியில் வென்று கோப்பையை வெல்பவர்கள் இசை அமைப்பாளர் அனிருத் இசையில் அவருடன் பாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
அனைவருக்கும் பிடித்த மூக்குத்தி முருகன் உட்பட நான்கு ஆண்கள் தேர்வாகி இருப்பதோடு ஒரு பெண்ணும் தேர்வாகி உள்ளார். இவர் டாக்டருக்கு படித்தவர் என்பது கூடுதல் தகவல்.

முருகன் ப்ரியங்கா
ப்ரியங்கா, மகாபா இருவரும் மிகச் சிறப்பாக சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர். இதில் மூக்குத்தி முருகனுடன் பரியங்கா அடிக்கும் லூட்டிகள் பலருக்கும் பிடித்து இருந்தது.ரொம்ப ஜாலியா ஸ்போட்டிவா ப்ரியங்கா எதையும் எடுத்துக்கொண்டு ஷோவை நடத்தி வருகிறார்.

செட் ஃபினாலே
இன்று இரவு செட் ஃ பினாலே சுற்று என்று ஷூட் செய்து ஒளிபரப்ப உள்ளார்கள்.இதில் இறுதிப் போட்டிக்கு செல்லும் போட்டியாளர்கள் மனத்துக்குப் பிடித்த பாடல்களை பாடி அசத்தி உள்ளனர்.

முருகன் திவாகர்
திவாகரும் முருகனும் சேர்ந்து பாக்கியராஜின் தூறல் நின்னு போச்சு படத்தில் வரும் என் சோகக் கதையை கேளு தாய்க்குலமே பாடலை வெகு அற்புதமாகப் பாடி உள்ளனர். மலேசியா வாசுதேவன் குரலுக்காகவே .இந்த பாடலை எத்தனை முறை வேணும்னாலும் கேட்கலாம்.

பல நினைவுகள்
மூக்குத்தி முருகனும், திவாகரும் சேர்ந்து பாடிய இந்த பாடல் காதில் இனிமையாக நுழைந்து பல நினைவுகளை கிளறி விட்டு உள்ளது. எப்போதும் வில்லனாகவே நடித்து வந்த நம்பியார் இளம் தலைமுறையினரோடு சேர்ந்து குஸ்தி வாத்தியாராகவும், மிகவும் நல்ல மனிதராகவும் இந்த படத்தில் நடித்து இருப்பார்.இயக்குநர் பாக்கியராஜ் நம்பியாருக்கு அளித்த அருமையான வாய்ப்பு என்று கூட இதை கூறலாம்.
இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை பாருங்கள் உங்களுக்கே புரியும்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications