Super Singer: அடடா.. மூக்குத்தி முருகன் அபாயக் கட்டத்தில் இருக்காராமே!
சென்னை: டார்ச்சர்னா டார்ச்சர் அப்படி ஒரு டார்ச்சர்.. ஆனால் அதையும் தாண்டி தனது பாடல்களால் கட்டிப் போட்டவர் நம்ம மூக்குத்தி முருகன்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் ஹிட் ரியாலிட்டி ஷோ என்றாலும் கூட, நிகழ்ச்சியை சன் சிங்கர் ஷோ மாதிரி விரைவில் முடித்துவிட மாட்டார்கள் விஜய் டிவி.
அதிகமாக கேரளாவைச் சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் என்றுதான் இதுவரை இந்த ஷோவில் கலந்து கொண்டு இருந்தார்கள். இப்போது, கேள்வி ஞானத்தால் நன்றாகப் பாடும் பாடகர்களும் போட்டியில் கலந்துகொண்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சீசனில் பாடல், ஆடல் என்று களைக் கட்டி, இப்போது போட்டி இறுதிக் கட்டத்தை எட்ட துவங்கி உள்ளது. இப்போதைக்கு மூக்குத்தி முருகன் டேஞ்சரஸ் ஷோனில் இருக்காராம்.

ரியாலிட்டி ஷோ
இப்படியும் ரியாலிட்டி ஷோ நடத்தலாம் என்கிற அளவுக்கு இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் மாகாபா, ப்ரியங்கா இருவரும் நடத்தி வருகிறார்கள். ப்ரியங்கா எவ்வளவு கலாய்த்தாலும் தாங்குவார் என்பது போல பெரிய மனம் கொண்ட அவரை அனைவரும் காமெடி பீஸாக்கி விளையாடுகிறார்கள்.

மட்டும் இல்லை
வெறும் சிங்கிங் ஷோ மட்டும் நடக்காது. இடையிடையில் காமெடி பண்ணுகிறோம் என்று பிரியங்காவை மூக்குத்தி முருகன் சைட் அடிப்பது போலவும், ஆனால்,பிரியங்கா செந்தில் ராஜாலட்சுமி தம்பதியில் செந்திலை சைட் அடிப்பதாகவும் காண்பித்து ,உலகம் முழுக்கக் தெரியும் இந்த டிவியின், எங்களின் பண்பாடு இதுதான் என்பது போல நாறடித்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்கள்.

அவங்களே கலாய்ச்சு
அவங்க டிவியை அவங்களே கலாய்ச்சுக்குவாங்க. ஒரே படத்தை திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதை இவர்களே கலாய்த்துக் கொள்வார்கள். நகைச்சுவை ரியாலிட்டி ஷோவில் டயலாக் பேசாமல் ஒருவர் தடுமாறினால், போதும் உனக்கு இந்த டயலாக்கே அதிகம்னு சொல்லி கலாய்க்கற மாதிரி கலாய்ச்சு , சமாளிச்சுக்குவாங்க. அப்புறம் இந்த சீனில் உனக்கு டயலாக்கே இல்லையே எதுக்கு வந்தேன்னு கேட்டுக்குவாங்க.

மூக்குத்தி முருகன்
சரி சரி மூக்குத்தி முருகன் விஷயத்துக்கு வருவோம். இவர் கேள்வி ஞானத்தில் இதுவரை பாடல்கள் பாடி அசத்தி வந்தார்.இப்போது இறுதிச் சுற்று நெருங்கும் தருவாயில் சிலப் பேரே உள்ள நிலையில் மூக்குத்தி முருகன் டேஞ்சரஸ் ஷோனில் இருக்கார். நிகழ்ச்சியில் தொடர்ந்து பாடி,ஜெயிக்க வேண்டும் என்றால் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கிறார். மூக்குத்தி முருகனும் , ப்ரியங்காவும் அடிக்கும் லூட்டி பிடித்து இருப்பவர்கள் வாக்கு நிச்சயம் மூக்குத்தி முருகனுக்குத்தான்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications