சிவண்ணே, குணமாகி வாருங்கள்.. கண்ணில் கண்ணீர்.. கனத்த நம்பிக்கையுடன் அமெரிக்கா கிளம்பிய சிவராஜ்குமார்
பெங்களூரு: புற்றுநோய் என்றதும் நானும் என்னைச் சுற்றி இருப்பவர்களும் பதற்றமடைந்து விட்டோம். ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் பயப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை என்று தெரிய வந்துள்ளது. சிகிச்சை முடிந்து ஒருமாதம் கழித்து மறுபடியும் இந்தியாவுக்கு வருவேன் என்று நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ்குமார்.. கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார் சிவராஜ்குமார்.. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சிவராஜ்குமார் கன்னடம் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
ஆபரேஷன்: சமீபத்தில்தான் "பய்ரதி ரனகல்" என்ற கன்னடப் படம் வெளியானது. இந்தப் படத்தின் புரொமோஷன் பேட்டிகளில், "எனக்கு நோய் இருப்பது உண்மைதான். ஆனால் அது புற்று நோய் இல்லை. அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதும் உண்மைதான். அந்த நோய் என்ன என்று இன்னும் கண்டறியப்படவில்லை.. அதுகுறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி அச்சப்படுத்தவும் விரும்பவில்லை. சிகிச்சைக்காக டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால், சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் பரவியது.. ஆனால், இதனை சிவராஜ்குமார் இதுவரை சிவராஜ்குமார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்கா: இந்நிலையில், டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் சிவராஜ்குமார்... புளோரிடாவிலுள்ள மியாமி இன்ஸ்டியூட்டில் தொடர் சிகிச்சையை மேற்கொள்ளவிருக்கிறார். வரும் 24-ம் தேதி இவருக்கு ஆபரேஷன் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சிவராஜ்குமார் பெங்களூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது உணர்ச்சிவசப்பட்டு அவர் சொல்லும்போது, "இந்த செய்தியை மீடியா பெரிதுபடுத்தாமல் உள்ளமைக்கு என்னுடைய நன்றிகள்.. நடிகர்கள், ரசிகர்களிடமிருந்து எனக்கு வாழ்த்துகள் வந்தது எனக்கு மகிழ்ச்சி.
ரத்த பரிசோதனை: எனக்கு சிகிச்சை அளிக்க போகும் டாக்டர் பெயர் முருகேஷ் என் மனோகர். பிரபலமான புற்றுநோயியல் நிபுணர்... அவரிடம் பேசியபோது, "எதற்கும் கவலைப்பட வேண்டாம், எந்த சிக்கலும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நம்பிக்கை தந்திருக்கிறார். கடந்த 2 நாட்களில் இதயத்துடிப்பு, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை என நாங்கள் எடுத்த எல்லா டெஸ்ட்டுகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இந்த பாசிட்டிவ் முடிவுகள் எனக்கு பெருத்த நம்பிக்கையை தந்திருக்கிறது..
புற்றுநோய் என்றதும் நானும் என்னைச் சுற்றி இருப்பவர்களும் பதற்றமடைந்து விட்டோம். ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் பயப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை என்று தெரிய வந்துள்ளது. சிகிச்சை முடிந்து ஒருமாதம் கழித்து மறுபடியும் இந்தியாவுக்கு வருவேன்.. கண்டிப்பாக ஜனவரி 26-ம் தேதி நம்ம நாட்டில்தான் இருப்பேன். நிச்சயம் திரும்பி வருவேன். என் மனைவி கீதா, இளைய மகள் நிவேதா ஆகியோர் என்னுடன் அமெரிக்கா வருகிறார்கள்.
பெருத்த நம்பிக்கை: திடீரென ஆபரேஷனுக்காக செல்வது வீட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும்.. என்னுடைய குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்களை பார்க்கும்போது எனக்குமே சிறிது உணர்ச்சிவசப்படத் தோன்றுகிறது.. அவர்களை பார்க்கும்போதுதான் கவலையாக இருக்கிறது. மற்றபடி நான் நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்" என்றார்.
செய்தியாளர்களிடம் பேசியபோதே சிவராஜ்குமார் கண் கலங்கினார்... அவர் முழுமையாக குணமடைந்து திரும்பி வர வேண்டும் என ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications