40 நாட்களில்.. 15 கிலோவை சர்ருனு வெயிட் லாஸ் பண்ண நடிகை ஐஸ்வர்யா.. இப்படிதான் எடை குறைஞ்சுதாம்.. செம
சென்னை: உடல் எடையை விட, மனம் மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம் என்ற விஜய் சேதுபதி, தன்னுடைய வெயிட் லாஸ் பற்றி கூறியிருந்தார்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும்நிலையில், சவுண்டு சரோஜா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஐஸ்வர்யாவின் பேட்டியும் சோஷியல் மீடியாவில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஐஸ்வர்யா தந்த டயட் டிப்ஸ் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் சீனியர் நடிகை லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா பாஸ்கரன், கடந்த 1991ம் ஆண்டு ஒலியம்புகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்... இதைத்தொடர்ந்து மாமகரு, ராசுக்குட்டி, மீரா, கார்திஷ் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்..

எனினும், கடந்த 1999 ல் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ஹவுஸ்புல் படத்தின் மூலம் ஐஸ்வர்யா மீண்டும் ரீ-என்ட்ரி தந்தார்.. பிறகு பல படங்களில் அம்மா ரோல், உள்ளிட்ட ஏராளமான துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
அபாரமான நடிப்பு
சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் முக்கியமான ரோலில் ஐஸ்வர்யா நடித்திருந்தார்.. தற்போதும் தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதைத்தவிர, ஐஸ்வர்யாவின் யூடியூப் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துவிடுவது வாடிக்கையாகும்.. அவரது சமையல் வீடியோவாகட்டும், யூடியூப் பேட்டிகளாகட்டும், அனைத்துமே வைரலாகிவிடும்.
ஐஸ்வர்யாவின் கலகல மற்றும் துணிச்சலான பேச்சுக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.. இந்த ரசிகர் கூட்டத்தை வாக்குகளாக மாற்றும் யுக்தியாகவே, பிக்பாஸ் சீசன் 8ல் பிக்பாஸ் வீட்டுக்குள் ஐஸ்வர்யாவும் செல்வதாக பரபரப்பு கிளம்பியது..
பிரச்சார பீரங்கி
ஆறு படத்தில் மக்கள் கழகத்தின் பிரச்சார பீரங்கியாக மாறி ரசிகர்களை ஈர்த்தவர் ஐஸ்வர்யா.. எனவே, சவுண்டு சரோஜா கேரக்டர் பேசிய வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து, வெல்கம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். ஐஸ்வர்யா உள்ளே வந்துவிட்டால், பிக்பாஸ் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்றும் கமெண்ட் செய்தனர். ஆனால், ஐஸ்வர்யா பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஐஸ்வர்யா தந்த டயட் டிப்ஸ் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தற்போது 53 வயதாகும் ஐஸ்வர்யா, கடந்த 2018ல் 90 கிலோ உடல் எடையில் இருந்தாராம்.. இதையடுத்து, தன்னுடைய உடல் எடையை குறைக்க உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்திருக்கிறார்..
முறைப்படி யோகா முக்கியம்
அதன்படி, தாவரம் சார்ந்த உணவுகளை மட்டுமே சாப்பிட ஆரம்பித்தாராம் ஐஸ்வர்யா.. அதேசமயம், பால் பொருட்களை அறவே தவிர்த்துள்ளார்.. அதேபோல, அன்-ஹெல்த்தி என்று சொல்லக்கூடிய ஆரோக்கியமற்ற உணவுகளையும் தவிர்த்து வந்துள்ளார்.. இதற்கு நடுவில் யோகா பயிற்சியையும் மேற்கொண்டதால் வெறும் 40 நாட்களில் 15 கிலோ வெயிட் லாஸ் செய்தாராம்..
யோகாவை முறையாக கற்றால், வெயிட் போட வாய்ப்பே இல்லை, அதற்காக யூடியூப் வீடியோ, புத்தகம் பார்த்து யோகா செய்யாமல் முறைப்படி யோகா குருவிடம் கற்றுக் கொள்வது ஆரோக்கியமானது என்றெல்லாம் கூறியிருக்கிறார். வெறும் 40 நாளில் 15 கிலோ குறைந்ததா? என்று இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய் சேதுபதி
நேற்றுமுன்தினம் விஜய் சேதுபதி உடல் எடை குறைத்தது பற்றி கூறியிருந்தார்.. சென்னையிலுள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, எடை குறைத்தது எப்படி? என்று மாணவர்கள் விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளனர்..
அதற்கு விஜய் சேதுபதி, "எவ்வளவு வெயிட் இருக்கிறேன் என்பதை பார்க்க, வெயிட் மிஷினை பயன்படுத்துவதில்லை.. அப்படி பார்க்கும்போது, அதில் காட்டும் எண்கள் என்னை வெகுவாக சோர்வடைய செய்துவிடும். அந்த எண்களுக்கு பதிலாக, உடல் என்ன சொல்கிறது என்பதே முக்கியம். எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதே முக்கியம்..
எப்போதுமே நான் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால், அதுவே என்னுடைய உடல் எடை குறைப்பதற்கு போதுமானதாக உள்ளது.. உடல் எடையை விட மனம் மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications