மம்முக்கா, உங்களுக்கு கேன்சரா? ஆடிப்போன கேரளா.. மம்முட்டி பட பிஆர் டீம் தந்த விளக்கம்.. இப்ப நிம்மதி
திருவனந்தபுரம்: மம்முட்டிக்கு கேன்சரா என்று உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு ஆளானது கேரள திரையுலகம்.. ரசிகர்களும் பதற்றமும், குழப்பமும் அடைந்து, மும்முடிக்கு என்னாச்சு? இணையத்தை துளைத்தெடுத்து விட்டனர்.. இந்நிலையில், மம்முட்டியின் உடல்நிலை குறித்து படக்குழுவினர் விளக்கம் ஒன்றை தந்துள்ளனர்.. இதையடுத்து, மல்லுவுட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.
மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மம்மூட்டி... மலையாள உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி கொண்டிருப்பவர்.. தமிழில் அழகன், ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மறுமலர்ச்சி, தளபதி, பேரன்பு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர்.

தமிழ்நாடு, கேரளா, மட்டுமின்றி, உலகளவில் தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியிருப்பவர் மம்முட்டி.. எந்தவிதமான கிசுகிசுக்களிலும் சிக்காதவர்.. இப்போது அவருக்கு 73 வயதாகியும், இளம் நடிகர்களுக்கே டஃப் தந்து கொண்டிருப்பவர்.. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பிரமயுகம் என்ற படம் சூப்பர் ஹிட்டானது.. இப்போதும் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார்.
யார் கிளப்பி விட்ட வதந்தி இது
தற்போது. மகேஷ் நாராயணன் இயக்கி வரும் "MMMN" என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மம்முட்டிக்கு லேசாக உடல்நல குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதற்குள் "மம்முட்டிக்கு புற்றுநோய்" என்று யாரோ வதந்தியை கிளப்பிவிட்டார்கள்.. இந்த தகவல், காட்டுத்தீ போல பரவி, இந்திய ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
மம்மூட்டிக்கு என்ன ஆச்சு என்று நேற்றிரவு முதலே சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்ப துவங்கிவிட்டனர்.. இப்போதுதான் கன்னட நடிகர் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தார். அதற்குள் மம்முட்டிக்கு கேன்சரா? என்று ரசிகர்கள் இடிந்துபோனார்கள்..
படக்குழுவினர் விளக்கம் - தெளிவு
இந்நிலையில், இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் ஒன்றை தந்துள்ளனர். அதில், மம்முட்டிக்கு கேன்சர் இல்லை என்பதையும் பி.ஆர் டீம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
அதில், "மம்முட்டிக்கு கேன்சர் இல்லை.. அவர் நலமுடன் இருக்கிறார்.. இப்போது ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார.. அவருக்கு புற்றுநோய் என்று வெளியாகும் செய்தி பொய்யானது..
அவர் இப்போது லீவு எடுத்துக்கொண்டு, ரெஸ்ட்டில் உள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.. ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால், ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார்.. பிரேக் முடிந்ததுமே, டைரக்டர் மகேஷ் நாராயணன் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பார்" என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். பிஆர் டீம் தந்த இந்த விளக்கத்தையடுத்து, ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
நிம்மதி பெருமூச்சு
இப்படித்தான் நேற்றைய தினமும், லேசான உடல்நல குறைவு காரணமாக, ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.. அதற்குள் அவருக்கு ஹார்ட் அட்டாக், ஆஞ்சியோ, ஆபரேஷன் என்றெல்லாம் வதந்தியை கிளப்பிவிட ஆரம்பித்துவிட்டனர்.. இந்த வதந்தி தீயாய் பரவி முடிப்பதற்குள், ரஹ்மான் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கே வந்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications