Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் ஓய்வு? கமலுடன் நடிப்பதுதான் கடைசி படமா? திகைத்து நின்ற கோடம்பாக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அருணாச்சலம் படத்தை சுந்தர். சி இயக்கியதுடன், ரஜினிகாந்த்துக்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தார்.. அதேபோல கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் படத்தையும் இயக்கி சபாஷ் பெயரை தட்டி சென்றார். இப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சம்பந்தப்பட்ட படம் ஒன்றை சுந்தர் சி இயக்க போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்தும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருமே ஆரம்ப கட்டங்களில் 16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது என பல படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள்..

Television Rajnikanth Kamal hassan

இருவருக்குமே ரசிகர் பட்டாளம் அதிகமாகி கொண்டே வந்த நிலையில், ஒருகட்டத்தில் நாம் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று இருவருமே பேசி முடிவெடுத்தனர்.. அதற்கு பிறகு இந்த 46 வருடங்களாக இருவருமே சேர்ந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.

பெரிய மார்க்கெட்

இப்படிப்பட்ட சூழலில்தான், இருவரும் இணைந்து நடிக்க போவதாகவும், இருவரும் சேர்ந்து நடிப்போம் என்ற முடிவை ரஜினியிடம் சொன்னதே கமல்தான் என்றும் செய்திகள் வெளியாகின.. ஆனால், இப்படியான பேச்சுவார்த்தை கடந்த, 2, 3 வருடங்களாகவே இருந்து வருவதால், இறுதியான முடிவு எதுவும் வெளியாகவில்லை.. எனினும், ரஜினியிடம் கமலும் தேதி கேட்டபடி இருந்தாராம்..

2 பேருக்குமே இன்றும் பெரிய மார்க்கெட் உள்ளதால், இதனை ஒன்றாக்கி பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து, வரும் லாபத்தையும் தாங்களே எடுத்துக் கொள்ளலாம் என்று ரஜினியிடம் கமல் சொன்னதாகவும், அதற்கு ரஜினி ஓகே சொன்னதாகவும்கூட கடந்த மாதம் மீடியாக்களில் செய்திகள் பரபரத்தன.

இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு சேனலுக்கு தந்திருந்த பேட்டியில், ரஜினி மாஸான நடிகர், கமல் கிளாஸான நடிகர்.. இருவருமே போட்டி நடிகர்களாக இன்றுவரை பார்க்கப்படும்போது, இருவரையுமே திருப்திப்படுத்தக்கூடிய கதை இருக்கா? என்பது கஷ்டம்தான்.. கதையை இனிமேல் உருவாக்கினாலும், இருவருக்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்குமா தெரியவில்லை..

கமல் - ரஜினி ஈகோ

கமலை பொறுத்தவரை, தன்னுடைய படங்களில் தன்னை மட்டுமே ஹைலைட் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.. வேறு யாருக்காவது முக்கியத்துவம் தரப்பட்டிருந்தால், அந்த சீன்களை எடிட்டிங்கில் தூக்கிவிட சொல்வார்..

அதேபோல ரஜினியை பொறுத்தவரை, தனக்கான இடத்தை வேறு யாருக்காகவும் விட்டுத்தந்ததில்லை.. படம் எடுக்கும்போதே, அந்த படத்தில் யார் யாருக்கு என்னென்ன முக்கியத்துவம், யார் யாருக்கு என்னென்ன டயலாக் உள்ளது? என்பதையெல்லாம் முன்கூட்டியே டைரக்டர்களிடம் ரஜினி தெளிவாக கேட்டு தெரிந்து கொள்வார்.

பிறகுதான் அந்த படத்தில் நடிக்கவே டைரக்டருக்கு அனுமதி தருவார் ரஜினி.. ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனை, ரஜினியின் மகன் கேரக்டருக்கு நடிக்க வைக்கலாம் என்று நெல்சன் சொன்னதற்கு, ரஜினி மறுத்துவிட்டார். கூலி படத்தில் சின்ன வயது ரஜினியாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என்று லோகேஷ் கனகராஜ் கேட்டதற்கும், ரஜினி மறுத்துவிட்டார்..

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

பான் இந்தியா படமாக இருந்தாலும், வேறு மாநில பிரபலங்கள் வந்து நடிக்க அனுமதி தந்தவர், சிவகார்த்திகேயனுக்கு அனுமதி தரவில்லை. ரஜினி படம் என்பது ரஜினியால்தான் ஓட வேண்டும் என்று நினைப்பவர்.. எனவே, கமல், ரஜினி இருவருமே ஒரே மாதிரியான எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் இருவருக்கும் உடன்படுவது போன்ற கதையை தயார் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்" என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார்.

இதனிடையே, ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது.. ஆனால், இந்த படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027ல் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கான ஆர்வமும், எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே வருகிறது..

இதுதான் கடைசி படம்?

இப்போது விஷயம் என்னவென்றால், இந்த படம்தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துடன் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறலாம் என்று ரஜினிகாந்த் முடிவு செய்திருக்கிறாராம். என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+