மாலையும் கழுத்துமாக.. செம என்ஜாய்தான் போல.. கலக்கும் சுரேஷ், அனிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும் அதில் கொண்டாட்டங்களை வைத்து மீண்டும் பிக்பாஸ் பிரபலங்கள் வந்து ரசிகர்களை என்ஜாய்மென்ட் பண்ணி கொண்டு இருக்கின்றார்கள் .

அதிலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் தாத்தா என்று செல்லமாக அழைக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் .

அதில் அந்த வீட்டிற்குள் இருக்கும் வரைக்கும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதாவும் மாலையும் கழுத்துமாக வந்து நிற்கும் போட்டோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சண்டையே இல்லை

சண்டையே இல்லை

முதல் நாள் மட்டும் தான் இந்த வீட்டிற்குள் எந்த சண்டையும் இல்லாமல் ஜாலியாக ஆடிப் பாடிக் கொண்டிருந்த அனைவரும் அடுத்த நாளிலிருந்தே கலகத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அதிலயும் சுரேஷ் சக்கரவர்த்தியை கேட்கவே வேண்டாம் அனைவரின் முகத்திரையை கிழித்து ரசிகர்களின் ஹீரோவாக மாறிவிட்டார் .இவரை எதிர்க்க யாருமே இல்லை என்று பலரும் ஆர்ப்பரித்து வந்தனர் .

தாத்தா

தாத்தா

அந்த அளவிற்கு எந்த பிரச்சனையும் சண்டையை இழுத்துவிட்டு பிறகு ஒன்றுமே நடக்காத மாதிரி கூலாக சிரித்துக் கொண்டிருந்தவர். அதுமட்டுமில்லாமல் கேப்ரில்லாவால் செல்லமாக தாத்தா என்று அழைக்கப்பட்டு பிறகு அனைவராலும் தாத்தா என்று அழைக்கப்பட்டார். அந்த வீட்டுக்குள் இருந்தவர்களில் மட்டுமல்லாமல் அவருடைய வெறித்தனமான ரசிகர்கள் வரை அனைவருமே தாத்தா என்று தான் தற்போது வரைக்கும் அழைத்து வருகிறார்கள்.

சிங்கிள் சிங்கம்

சிங்கிள் சிங்கம்

எனக்கு எத்தனை வயசு ஆனாலும் அதைப் பற்றி கவலை இல்லை எனக்கு போட்டியின்னு வந்துவிட்டா நான் சிங்கம் என்று சிங்கிளாக கெத்து காட்டி இளைஞர்கள் முதல் அனைவரையுமே இம்ப்ரஸ் பண்ணி விட்டார். அதனால்தான் இவர் வெளியேறியதும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .பலரும் பிக்பாஸை திட்டி தீர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அனிதாவுடன் சண்டை

அனிதாவுடன் சண்டை

இந்த வீட்டிற்கு இவரும் அனிதாவும் போட்ட சண்டைக்கு அளவே கிடையாது .அடிக்கடி இவர்கள் சண்டை போட்டுக்கொண்டு எலியும் பூனையுமாக சுற்றிக்கொண்டு இருந்தாலும் போட்டியின்னு வந்து விட்டால் இரண்டு பேரும் வேற லெவல் பர்பாமன்ஸ் பண்ணி இருந்தார்கள். அதுவும் சின்ன மச்சான் பாட்டு வெறித்தனம் தான். இப்போது வரைக்கும் இவர்கள் ஆடிய ஆட்டம் பெரிதாகத்தான் பேசப்பட்டு வருகிறது .

சூப்பர் டான்ஸு

சூப்பர் டான்ஸு

சுரேஷ் சக்கரவர்த்தி அனிதாவுடன் மட்டுமல்லாமல் சனத்துடனும் பயங்கரமான சண்டை போட்டு அவரையும் நன்றாக கோபப்படுத்தி விட்டு இவர் கூலாக சிரித்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் அனைவரும் கோபமாக இருக்கும் நேரத்தில் காமெடி பண்ணி பெண்ணே கூலாக மாற்றியவர் இவர்தான்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு யாருக்கும் தெரியாத வகையில் தான் இருந்து கொண்டிருந்தார். ஆனால் இந்த பிக்பாஸில் இவர் கலந்து கொண்ட பிறகு பலருக்கும் தெரிந்த பிரபலமாக மாறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் இவர் சமையல் கலையில் வல்லுநராக இருந்தாலும் யூடியூப் சேனல் நடத்தி வந்தார் .

பிக் பாஸ் பைனல்

பிக் பாஸ் பைனல்

அந்த யூடியூப் சேனல் கூட முன்னாடி இருந்ததற்கும் இந்த பிக்பாஸில் இவர் கலந்து கொண்ட பிறகு அதிகமான பாலோவர்ஸ் வந்திருக்கின்றனர். மீண்டும் தற்போது இவர் யூடியூப் சேனலில் பிஸியாக தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலரும் இவரிடம் பிக்பாஸ் பற்றி கேள்வி கேட்டு வருகிறார்களாம்.

இன்ஸ்டாவில் பதில்

இன்ஸ்டாவில் பதில்

இவரும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். தற்போது பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம் விஜய் டிவியில் கொண்டாடப்பட்டு வருகிறது . அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி தங்களுடைய இன்ஸ்டாகிராம் , டுவிட்டரிலும் பதிவிட்டு வருகிறார்கள் .

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

அந்த மாதிரிதான் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தியும் தான் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதா சம்பத்தும் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோஸ் தான் அது. அதைப்பார்த்ததும் அவர்களுடைய ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து வருகிறார்கள். மீண்டும் நீங்கள் இருவரும் சேர்ந்து ஆட போகிறீர்களா என்று தான் பலரும் கேட்டு வருகிறார்கள் .

வெளியில் ஒற்றுமைதான்

வெளியில் ஒற்றுமைதான்

அந்த வீட்டிற்குள் தான் இவர்கள் சண்டை போட்டார்களே தவிர வெளியில் எல்லாம் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தத் தானா இந்த போட்டோஸ் என்றும் சிலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். அதுவுமில்லாமல் இவர் ரியோ உடன் மட்டும் எந்த போட்டோவும் வெளியிடவில்லை என்றும் ரியாவின் ரசிகர்களும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+