நான் படிப்புல ஃபெயில் தான்.. இப்போ 8,000 பேரை படிக்க வைக்கிறேன்! நெகிழ்ந்த சூர்யா, சிவகுமார் சொன்ன ஜாதகம் ரகசியம்
சென்னை: நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பேசிய சூர்யா நான் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் இறுதி எக்ஸாமை தவிர எல்லா பரிட்சையிலும் பெயில் ஆகிவிட்டேன். ஆனால் இப்போ 8000 பேரை படிக்க வைக்கிறேன் என்று நெகிழ்ந்து பேசி இருக்கிறார். அப்போது சூர்யா பற்றிய ஜாதக ரகசியத்தை சிவக்குமார் பேசி இருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற "கனிமா" பாடல் தான் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த பாடல்களுக்கு ரீல்ஸ்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சூர்யா பேட்டி
அதுபோல இந்த திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, நாசர், சிவகுமார், பூஜா ஹெட்டே உட்பட பலர் கலந்து கொண்டு பேசியிருந்தனர். அப்போது சூர்யா பேசும் போது நான் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் ஆனுவல் எக்ஸாம் தவிர மற்ற எல்லா எக்ஸாமில் பெயில் ஆகிவிடுவேன். நான் படிப்பில் பெயில் தான் எனக்கு படிப்பு பெரிய அளவில் வராது. ஆனால் நான் இப்போது 8000 மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.
சூர்யா நெகிழ்ச்சி
என்னுடைய அகரம் அறக்கட்டளையில் படிக்கும் சகோதர சகோதரிகள் இப்போது டாக்டராகவும் வழக்கறிஞராகவும் பல்வேறு துறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த படத்தின் பிரமோஷன் வேலைக்கு வந்தது கூட ஒரு நடிகராக இல்லை அகரம் நிறுவனத்தின் சார்பாக தான் கலந்து கொள்கிறேன்.

படிப்பு முக்கியம்
இந்த உலகத்தில் படிப்பு தான் முக்கியம். இதை என்னுடைய அப்பா பல நேரம் சொல்லி இருக்கிறார். அப்போது அந்த அருமை எனக்கு தெரியவில்லை நாட்கள் செல்ல செல்ல தான் படிப்பின் அருமை எனக்கு தெரிந்தது. அதை மையப்படுத்தி தான் ரெட்ரோ திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் மே 1ஆம் தேதி இந்த திரைப்படத்தை எல்லோரும் பார்த்து விடுங்க என்று சொல்லி இருக்கிறார்.
ஜாதகம் பலித்தது
அதைத் தொடர்ந்து நடிகரும் சூர்யாவின் அப்பாபோதுன சிவகுமார் பேசும் போது சூர்யாவுக்கு சினிமாவில் வருவதற்கு ஆரம்பத்தில் விருப்பம் கிடையாது. அப்போது சூர்யா ஒரு கார்மெண்ட் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தார் ஒரு முறை என்னுடைய நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் ஒரு ஜோசியர் அவர்களிடம் சூர்யா மற்றும் கார்த்தியின் ஜாதகத்தை கொடுத்திருந்தேன். அவர் பார்த்து சூர்யா பெரிய நடிகராவார் என்று கூறினார்.

சிவகுமார் சொன்ன விஷயம்
அந்த நேரத்தில் அவர் சொன்ன வார்த்தை மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. பிறகு இயக்குனர் வசந்த் சூர்யாவை நேருக்கு நேர் படத்தில் நடிக்க வைத்தார். அதற்கு பிறகு சூர்யாவின் நடிப்பை கண்டு பலர் வியர்ந்தார்கள். ஒவ்வொரு இயக்குனரும் சூர்யாவை செதுக்கி இன்று இந்த இடத்திற்கு சூர்யா வளர்வதற்கு காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாராட்டி பேசி இருந்தார்.
கார்த்திக் சுப்புராஜ் எடுத்த ரிஸ்க்
அதுபோல சூர்யா பேசும் போது எல்லோருமே ஒரு இடத்தில் இருக்கிறோம் என்றால் அதைவிட இன்னொரு இடத்திற்கு போனால் பெஸ்டாக இருக்கும் என்றால் ரிஸ்க் எடுப்பது தப்பு கிடையாது. இந்த படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் கூட ஆரம்பத்தில் ஐடியில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு இருந்தபடி தான் இவருக்கு சினிமாவை இயக்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதனால் அவர் ரிஸ்க் எடுத்து அங்கிருந்து வெளியே வந்து இயக்குனராக பல தடைகளை தாண்டி சாதித்து இருக்கிறார். அதுபோல நம்முடைய கனவு எது என்று நான் பிக்ஸ் பண்ணி விட்டால் அதை சார்ந்து நம்முடைய பயணம் இருக்க வேண்டும் என்று சூர்யா பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications