சூர்யாவுக்கு சுள்ளுனு கோபம்? சும்மா சும்மா கேட்டால்? இதுதான் "வணங்கான்" பிரச்சனையா? சமுத்திரகனி நச்
சென்னை: ஏதோ ஒரு காரணத்தால் வணங்கான் படத்திலிருந்து, நடிகர் சூர்யா விலகியதாக கூறப்படுகிறது.. எனினும் சமீபத்தில், இதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலா சொல்லியிருந்தார்.. இப்போது, பிரபல நடிகர் சமுத்திரகனி இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
வணங்கான் படத்திலிருந்து சூர்யா ஏன் விலகினார் என்பது குறித்து, இயக்குனர் பாலா நேர்காணல் ஒன்றில் விளக்கம் தந்திருந்தார். அதில், "வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகவில்லை. கன்னியாகுமரியில் நேரடியாக ஷூட்டிங் நடத்தியதால் சூர்யாவை பார்ப்பதற்காக பல ரசிகர்கள் கூடிவிட்டனர். அதனால், ஷூட்டிங்கை சரியாக நடத்த முடியவில்லை. பிறகு நானும் சூர்யாவும் ஆலோசித்துதான் அந்த முடிவை எடுத்தோம். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது" என்று கூறியிருந்தார்,

என்ன காரணம்: ஆனால், பாலா தந்த விளக்கத்தை சோஷியல் மீடியாவில் பலரும் ஏற்கவில்லை. இதில் வேறு ஏதோ காரணம் உள்ளதால்தான் சூர்யா அப்படத்திலிருந்து விலகியிருக்கலாம் என்று கமெண்ட்களை தெரிவித்திருந்தனர்..
அதிலும், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தந்திருந்த பேட்டியில், "பாலா சில பொய்யும் பேசுகிறார் என்பதுஆச்சரியமாக உள்ளது. "வணங்கான்" படத்திலிருந்து சூர்யா வெளியேறியதற்கு பாலா சொல்லும் காரணம் ஏற்க முடியல. தற்போதுகூட, RJ பாலாஜி டைரக்ஷனில் சூர்யா நடித்து கொண்டிருக்கிறார்.. தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் ரசிகர்கள் திரண்டு வரும்நிலையில, சூர்யா நடிக்காமலா இருக்கிறார்?
ஷூட்டிங் ஸ்பாட்: சூப்பர் ஸ்டார் ரஜினி ஷூட்டிங் போனால், கூட்டத்தை கன்ட்ரோல் பண்ண முடியாது. ஆனாலும் ஷூட்டிங் நடக்கதானே செய்யுது? கூட்டத்தை ஒழுங்குப்படுத்த முடியலேன்னா, அவரென்ன பெரிய டைரக்டர்?அந்த காரணத்தை கேட்டால் குழந்தை கூட சிரித்துவிடும். இதையெல்லாம் யாராவது நம்புவாங்களா? பாலாவுக்கு உண்மையான காரணத்தை சொல்ல முடியல" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பாலாவின் மிக நெருங்கிய நண்பரான சமுத்திரக்கனி இதுகுறித்த ரகசியத்தை உடைத்திருக்கிறார்.. "எனக்கு என்ன மன கஷ்டம் வந்தாலும் அதை பாலா சரியாக புரிந்து கொள்வார். அதைப்போல, நான் சோகமாக இருந்தால், உடனே அவருடைய ஆபீசுககு போயிடுவேன்.
வணங்கான்: அப்படித்தான் ஒருநாள், தம்பி சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகி விட்டார் என தெரிந்ததுமே உடனே பாலா ஆபீசுக்கு போனேன். அப்போது 2 பேருமே அரை மணி நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்..
உடனே பாலா, "நம்ம மேலதான் தப்பு.. திருப்பி திருப்பி தேதி கேட்டால் அவரால் தரமுடியுமா? அதனால் தான் அண்ணன் தம்பிகளாக இருந்து விடுவோம்ன்னு சொல்லி விலகிட்டோம், சரியா?" என்று சொல்லி என் மனசை பாலா லேசாக்கினார். சரி, நீ கிளம்பு, அடுத்து என்ன ஏதென்று பார்ப்போம்"ன்னு சொல்லிட்டார். அதுக்கப்பறம்தான் அருண் விஜய் இந்த படத்தை செய்வதாக எனக்கு தகவல் வந்தது" என்று சமுத்திரகனி கூறியிருக்கிறார்.
உண்மை என்ன?: ஏதோ ஒரு காரணத்தால் சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டு வரும்நிலையில், பாலா ஒரு காரணத்தை ஏற்கனவே சொல்லியிருந்தார்.. இப்போது கால்சீட், தேதி பிரச்சனை என்று சமுத்திரகனி சொல்லி உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications