தேவா வீட்டுக்கு நேரில் சென்ற சூர்யா.. ஸ்ரீகாந்த் தேவாவை அணைத்து ஆறுதல்! நெகிழ வைத்த காட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனிசை தென்றல் தேவாவின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனது இசையால் பல தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்த தேவா, இன்று நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே பலருக்கும் கடினமாக இருக்கிறது. அவருடன் பழகியவர்கள், அவருடைய இசையில் வளர்ந்தவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யா தேவாவின் வீட்டுக்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவாவின் மறைவுக்கு பிறகு அவருடைய வீட்டுக்கு சென்ற சூர்யா, அங்கு வைக்கப்பட்டிருந்த தேவாவின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு தேவாவின் மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவாவை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது இருவரும் கட்டியணைத்துக் கொண்ட காட்சி பார்ப்பவர்களையும் நெகிழ வைத்துள்ளது.

Surya visits Deva home

ஆறுதல் சொன்ன சூர்யா

ஒரு கலைஞர் மறைந்துவிட்டால் அவருடைய படைப்புகளும் இசையும் மட்டுமே நம்மிடம் மிஞ்சும். ஆனால், அவருடைய குடும்பத்தினருக்கு அந்த இழப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. தந்தையை இழந்து நிற்கும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு இந்த நேரத்தில் ஆறுதல் சொல்வதற்காக சூர்யா நேரில் சென்றிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தேவாவின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்தபடி சூர்யா ஆறுதல் கூறும் காட்சி தற்போது கவனம் பெற்று வருகிறது. ஏற்கனவே தேவாவின் குடும்பத்தினர் சோகத்தில் இருக்கிறார்கள். அடுத்தடுத்த இழப்புகளால் அவர்களுடைய குடும்பமே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் தேவாவின் தம்பியான சபேஸ் உடல்நிலை குறைவால் காரணமானார். அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த சனிக்கிழமை தேவாவும் காலமாகிவிட்டார். இப்போது அவருடைய தம்பி மகன் 37 வயதில் காலமாகி இருக்கிறார். இதனால் இவருடைய குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள்.

Surya visits Deva home

தேவாவின் ஸ்பெஷல்

தேவா என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் அவருடைய உற்சாகமான பாடல்களும் தனித்துவமான இசையும் நினைவுக்கு வரும். கானா பாடல்களை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியதில் அவருக்கு முக்கியமான இடம் உண்டு. காதல் பாடல்கள், மெலடி, குத்து பாடல்கள் என பல வகைகளிலும் ரசிகர்களுக்கு பிடித்தமான இசையை வழங்கியவர் அவர்.

இப்படிப்பட்ட சூழலில் சூர்யா நேரில் சென்று தேவாவுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவாவையும் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. திரையில் பார்க்கும் நட்சத்திரங்களை தாண்டி, துயரமான நேரத்தில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் இந்த மனிதநேயமான தருணங்கள்தான் ரசிகர்களின் மனதிலும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+