Suzhal 2 Review: தமிழ் வெப்சீரிஸ் வரலாற்றில், பிரமாண்டத்தின் புது உச்சம்! சுழல் 2 விமர்சனம்
சென்னை: இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி எழுத்தில் உருவான சுழல்' வெப் சீரிஸின் முதல் சீசன் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது சீசன் 'சுழல் - தி வோர்டெக்ஸ் - சீசன் 2', (suzhal 2 the vortex) என்ற பெயருடன் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டாவது சீசனின் எபிசோடுகளை இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளனர். வாங்க.. நேரடியாக விமர்சனத்திற்குள் (Review) போகலாம்.
அஷ்ட காளிகள் பெயர்களை 8 பெண்கள் கதாப்பாத்திரங்களுக்கும் சூட்டியிருப்பதும், புராணத்தில் அரக்கனை அழிக்கும் தேவிகளை இவர்கள் கதையோடு இழைத்துக் கொடுத்திருப்பதற்கும் இயக்குநருக்கு தனிப் பாராட்டுகள். அதிலும் இரண்டாவது எபிசோடின் இறுதியில் 8 பேரையும் பாடலோடு சேர்த்து அறிமுகம் செய்யும், அஷ்டகாளி என்ற பாடல் காட்சி கூஸ்பம்ப் வகை. பாடல் இடம் பெற்ற காட்சிக்காகவும், அதன் வரிகளுக்காகவும், பாடியவரின் உச்ச ஸ்தாபிக்காகவும், இசைக்காகவும் பாராட்டத் தக்கது. அம்மன் கோவில்களில் இனிமேல் இந்த பாடல்களையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களுடன் சேர்த்து ஒலிக்கவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

முட்டையிலிருந்து முத்தாரம்மன் உட்பட 8 அம்மன் பிறக்கும் காட்சியை விவரிக்கும் பாடல், சுடலை மாடனுக்கான பாடல் ஆகியவற்றிலும் காந்தாராவின் "வராஹ ரூபம்" பாடலை போல கிராம தெய்வ வழிபாட்டில் ஈடுபாடுடையவர்களை வேறு உலகிற்கே அழைத்துச் செல்கிறது காந்தக் குரல்களும், விஸ்வரூப இசையும். பாடல்கள், யூட்யூப்பில் இருக்கிறது பார்த்துக்கொள்ளுங்கள்.
பாடல்கள்தான் ஹீரோ
பாடல்களுக்கு மட்டுமில்லை, பின்னணி இசைக்காகவும் சபாஷ் பெறுகிறார் இசையமைப்பாளர், பாடலாசிரியரான சாம்.சி.எஸ். பகல், இரவு என மாறி மாறி வரும் காட்சிகளை கண கட்சிதமாக பதிவு செய்துள்ளது ஒளிப்பதிவாளர் கேமரா. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாப்பாத்திரம், ஒரு நாள் இரவு, 8 பெண்களை ஃபாலோ செய்து ஒளிந்திருந்து பார்க்கும் திக் திக் காட்சியமைப்பு, பொன்னியின் செல்வன் சதியாலோசனை-ஆழ்வார்க்கடியான் காட்சிக்கு சற்றும் குறைவில்லாதது. அந்த பிரமாண்டச் சுரங்கப் பாதை கூட பொன்னியின் செல்வனை நினைவுபடுத்தியது.

மஞ்சிமா சபாஷ்மா
மஞ்சிமா மோகன் ஒரு எபிசோடில் வந்தாலும் முழு தொடருக்கமான அடித்தளம் அமைத்துள்ளார். காதல், பழிவாங்குதல், குழந்தைகளுக்காக சில உச்சகட்ட விஷயங்களையும் செய்வது என ஒரே எபிசோடில் பல பரிணாமங்கள் காட்டி கடைசியில் அனுதாபத்தையும் வரவைத்துவிட்டார். இவரது காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும், லொகேசனும் சினிமாவுக்கு ஈடான தரம். நாகம்மா என்ற பெயர் கொண்ட அவர் 8 குழந்தைகளை காப்பாற்றியது, நாகக்கன்னி 8 முட்டைகளை அடைகாத்த புராணத்தை அப்படியே பிரதிபலித்தது டைரக்டர் "டச்."
சுழல் 2 பாசிட்டிவ்கள்
"அவரா, இவரா.." என முக்கிய வில்லன் யாராக இருக்கும் என எபிசோடுக்கு எபிசோட் ட்விஸ்ட் வைத்தபடியே சென்றுள்ளார் இயக்குநர். முன்முடிவுக்கு வரவிடாமல் சஸ்பென்ஸ்சை கொண்டு சென்றதற்காகவே இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்கலாம். சுழல் 1 மற்றும் சுழல் 2 ஆகிய இரு வெப் சீரிசுமே பெண் குழந்தைகளின் பாதுகாப்பை பேசுவது நல்ல முன்னெடுப்பு. சுழல் 1 லொகேஷன் மலைவாசஸ்தலம் என்றால், சுழல் 2 கடற்கரை. வித்தியாசம் அவ்வளவுதான்.

சில காட்சிகளை கத்தரி போட்டிருக்கலாம் என்பதை சிலர் குறையாக சொல்லக்கூடும். ஆனால் இது இரண்டரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய சினிமா கிடையாது என்பதை அவர்கள் உணர வேண்டும். தினசரி ஒரு எபிசோடு என பொழுதுபோக்கிற்காக பார்ப்பவர்களுக்கு எவ்வளவு அதிகம் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்பதில் தவறு இல்லை. அப்போதுதான் அந்த வாழ்விடத்திற்கே நாம் பயணித்துச்செல்ல முடியும். அப்படியும் கூடுதல் காட்சிகள் தேவையில்லை என்பவர்களுக்கு கையில் ரிமோட் இருக்க பயமேன்.
சுழல் 2 வெப்சீரிஸ் குறைகள்
குறைகள் என்று பார்த்தால் சிலவற்றை சொல்லலாம்: வசனங்கள் நறுக் ரகமாக இருந்தபோதிலும், சில இடங்களில் வலிந்து திணித்தது போல உள்ளது. மாதவிடாய் குறிப்பிட்ட வயதினருக்கான தடைதான், பெண்களுக்கான தடையில்லை என்பது தெரிந்தும், வைத்த வசனமாகட்டும், திருநங்கைகள் பற்றிய பார்வை மாறிவிட்ட சூழ்நிலையிலும் ஒரு கதாபாத்திரத்தை வலிந்து வைத்து சில வசனங்களை வைத்ததாகட்டும், "பூமராகவே இருக்காதீங்க பாஸ்.." எனச் சொல்ல தோன்றியது.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிப்பு ஸ்டீரியோ டைப்பாகிவிட்டது. கதையை கதிர் தோளில் சுமந்தாலும், சில இடங்களில் அவரும் ஸ்டீரியோ டைப்பாகவே தோன்றுகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் ரியாக்ஷன்களோடு ஒப்பிட்டால் இவர் ரொம்பவே பெட்டர். பெரும்பாலான இடங்களில் பாஸ் ஆகிவிடுகிறார்.

சீனியர் நடிகர் சரவணன், காவல்துறையில் போலீஸ்காரர்கள் சந்திக்கும் தினசரி சவால்களை நடிப்பில் நன்கு வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு சீனியர் நடிகர் லால், வழக்கறிஞராகவும் கிட்டத்தட்ட கதையின் அடிநாதமாகவும் செயல்பட்டு கலக்கியுள்ளார்.
நல்லா போய்க் கொண்டிருந்த கதையில், 8 பெண்களையும் பெண் போலீஸ் அதிகாரி, சோதனைபோடும் ஆபாச காட்சி தேவையற்றதாகிவிட்டது. தேவையற்ற கெட்ட வார்த்தைகளும் குடும்பத்தோடு பார்க்க முடியாத வெப்சீரிசில் ஒன்றாக்கிவிட்டது.
சுழல் 2 பார்க்கலாமா?
அதேநேரம், தமிழ் சீரிஸ் உலகில் இவ்வளவு பிரமாண்டமான காட்சிகளை எடுக்க முடியுமா என கேட்கும் அளவுக்கு ஃப்ரேம் முழுக்க ஆட்களாக தென்படுகிறார்கள். அதற்கு சரியான நீதிபெற்றுத் தரும் வகையில் இசையிலும், பாடல் காட்சிகளிலும் பிரமாண்டம் தொனிக்கிறது. இயக்குநர் ஷங்கர் கூட இப்போதெல்லாம் இப்படி பிரமாண்டத்தை காட்டுவதில்லை, ஆனால் சுழல் 2 அதைச் செய்துள்ளது. நாட்டார் வழிபாட்டுடன் கூடவே, பிரமாண்டம், திரில்லர் என அனைத்தையும் விரும்புவர்கள் தவற விடக்கூடாத தொடர் சுழல் 2.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications