அம்மாடியோவ் மீண்டும் அதே இளமையோடு.. துள்ளிக் கொண்டு வந்த சொர்ணமால்யா!
சென்னை: சொர்ணமால்யாவை ஞாபகம் இருக்கா.. இளமை புதுமை.. அதேதாங்க. அவர்தான் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த லாக்டோன் டைம்ல எல்லாரும் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் நேரம் போகாமல் போனையே நோண்டிட்டு இருக்காங்க. சாதாரண மக்களுடைய நிலைமை இப்படி என்றால் இந்த சூழல் திரைப்பட துறையினரையும் விட்டுவைக்கவில்லை.
அவர்கள் வீட்டில் இருப்பதால் கதாநாயகிகள் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய அழகுகளை மெருகேற்றி வருகிறார்கள். அந்த வகையில்தான் அலைபாயுதே படத்தில் ஷாலினியின் அக்காவாக நடித்திருந்த சொர்ணமால்யா தற்போது தன்னுடைய அழகை கூட்டி ஸ்லிம்மாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி புதுப் பொலிவு கண்டுள்ளார்.

ஷாலினியின் நிழல் அக்கா
அலைபாயுதே படத்தில் ஷாலினியின் அக்காவாக நடித்திருப்பார் என்று சொல்வதைவிட இருவரும் அக்கா தங்கையாக வாழ்ந்தார்கள் என்று தான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு கியூட் ஆக இருவரும் இருப்பார்கள். ஷாலினி மாதவனின் திருமண வாழ்க்கை புதியதாக அமைந்திருந்தாலும் அந்தப் படத்தில் சொர்ணமால்யாவின் நடிப்பு அவருடைய கேரக்டரின் தாக்கம் ரசிகர்களின் மனதில் ஆழமாக ஒட்டிக்கொண்டார் .

அதை மறக்க முடியுமா
குறிப்பாக ஷாலினியும் இவரும் ட்ரெயின்ல போயிட்டு இருக்கும்போது மாதவன் வந்து லவ் ப்ரொபோஸ் பண்றது சீன் சூப்பர் ஹிட். அதே போல அதே டயலாக்கை ஷாலினியிடம் பேசி கிண்டல் பண்ணுவார் சொர்ணால்யா. இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. சொர்ணமால்யா ஒரு நடிகை மட்டும் இல்லைங்க அவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார். சிறந்த பரதநாட்டியக் கலைஞரும் ஆவார்.

90ஸ் கிட்ஸ்களின் செல்லம்
சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர் 17 வயசுல யுவ கலா பாரத் எனும் விருதினை பெற்றிருக்கிறார். இது மட்டுமில்ல பரதநாட்டியத்தில் பிஎச்டி முடித்திருக்கிறாராம். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அதன்பிறகுதான் மணிரத்தினத்தின் அலைபாயுதே நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

நடி்போடு படிப்பும்
விஜய் டிவி கலக்கப்போவது யாரு அன்புள்ள சிநேகிதி அப்படியே பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாம சீரியல்களில் அதன்பிறகு சேர்த்திருக்கிறார். வந்தாளே மகராசி, தெக்கத்தி பொண்ணு யாதுமாகி நின்றாள் ,தங்கம் அப்படி நிறைய சீரியல்களில் நடித்து இருக்காங்க. இவர் சினிமா லைஃப்ல ரொம்ப பிசியா இருந்தாலும் படிப்பில் கெட்டிக்காரர். காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போதுதான் அலைபாயுதேல நடிச்சிருக்காங்க.

பழைய அழகு
நடிப்பு ஒரு போதும் தன்னுடைய படிப்புக்கு தடையாக இருக்க கூடாது என்று பார்த்துதான் நடித்து இருக்காங்க. பொதுவாக நடனம் பரதநாட்டியம் கற்பவர்கள் ரொம்ப அழகாக இருப்பார்கள், அதாவது தங்களை அழகாக வைத்துக் கொள்வார்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் ஆனால் இவர் இடையில் புசுபுசுன்னு மாறிவிட்டார். ஆனால் இந்த லாக்டோன் டைம்ல வீட்டில் இருந்து தன்னுடைய அழகை டோட்டலா சேஞ்ச் பண்ணி இருக்கிறார். பார்க்க பழைய சொர்ணமால்யா போல க்யூட்டாக மாறி விட்டார்.

சொர்ணாவுக்கும் ஹேப்பிதான்
இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய புகைப்படத்தை அப்லோட் பண்ணி இருக்கிறார் அதை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அப்படியே அலைபாயுதே பூர்ணிமாவாக மாறியிருக்கிறீர்கள் என்று பலரும் சிலாகித்துக் கூறியுள்ளனர். இதனைப் பார்த்து ரசிகர்கள் லைக்குகளை கொட்டுகின்றனர். இளமை புதுமையாக மாறி மறுபடியும் வந்து இருக்கிறீர்கள் அப்படின்னு வாழ்த்துக்களையும் கூறியிருக்கிறார்கள்.. சொர்ணாவும் ரொம்ப ஹேப்பிதானாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications