Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tamil Selvi Serial: வர வர இந்த சீரியல் வில்லிகளுக்கு இதே வேலையாப் போச்சுபா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியல் எப்படியோ ஆரம்பிச்சு வேறு வழியில் பயணிக்குது. தமிழ்ச்செல்வி படிக்கட்டும் என்று காத்திருந்தான் முறை மாமன் சரவணன்.

அவனுடன் நடக்க இருந்த கல்யாணம் நின்னு, தமிழ்ச் செல்விக்கு பணக்கார படித்த அமுதனை கல்யாணம் செய்து வைப்பது, கதைப்படி சரியோ தவறோ... ஆனால், அதை காண்பித்த சூழல், காரணம் ரொம்ப சாதாரணமாக இருந்தது.

ஒரு விவசாயி தன் பொண்டாட்டி கலெக்டருக்கு படிப்பதை பார்த்து ரசிப்பான் என்கிற வியூவர்ஸ் ஆசை நிறைவேறவில்லை.

இலக்கியா தமிழ்ச்செல்வி

இலக்கியா தமிழ்ச்செல்வி

தமிழ்ச்செல்வி கல்லூரியிகள் படிக்கும்போது, இலக்கியாவும் தமிழ்ச்செல்வியின் கிளாஸ்மேட். ஆனால், இவளின் அண்ணன் அமுதன் என்று தமிழ்ச்செல்விக்கும் தெரியாது. தன் தோழி தமிழ்ச்செல்வியைத்தான் அண்ணன் காதலிக்கிறான் என்று இலக்கியாவுக்கும் தெரியாது. படிக்கும்போதே இலக்கியாவுடன் போட்டி போட்டு கோல்ட் மெடல் வாங்கியதில் இலக்கியாவுக்கு தமிழ்ச்செல்வி மீது ரொம்ப கோபம்.

யாருக்கும் பிடிக்கலை

யாருக்கும் பிடிக்கலை

அமுதன் தான் நினைத்தபடி, பாட்டியிடம் சொல்லிவிட்டு சென்றபடி தமிழ்ச்செல்வியை கல்யாணம் செய்துகிட்டு வீட்டுக்கு அவளை அழைச்சுக்கிட்டு வந்துடறான். ஆனால், தமிழ்ச்செல்வியை அமுதன் கல்யாணம் செய்துக்கிட்டது பாட்டியைத் தவிர யாருக்கும் பிடிக்கலை. இலக்கியாவுக்கு கேட்கவே வேண்டாம் தமிழ்ச்செல்வியை தனது அண்ணியாக பார்க்க விருப்பம் இல்லை.

தங்கை அண்ணி

தங்கை அண்ணி

இலக்கியாவின் முதல் அண்ணி தனது தங்கையை அமுதனுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று நினைத்து இருக்க.அமுதன் இலக்கியாவின் தோழியை கல்யாணம் செய்துகிட்டு வந்துட்டானேன்னு அவளும் வெறுப்பில் இருக்க, அந்த வெறுப்பில் இன்னும் தூபம் போடுவது போல பேசுகிறாள் இலக்கியா.

துரத்திட்டு கல்யாணம்

துரத்திட்டு கல்யாணம்

கவலைப்படாதீங்க அண்ணி...எனக்கு காலேஜில் இருந்தே தமிழ்ச்செல்விதான் எதிரி.அவளை இந்த வீட்டில் நான் வாழ விட மாட்டேன். அவள் வீட்டுக்கே அவளை துரத்திட்டு, உங்க தங்கச்சியை அமுதனுக்கு நிச்சயமா கல்யாணம் பண்ணிவைக்கலாம் அண்ணின்னு சொல்றா.

பெண்ணை துரத்தறது

பெண்ணை துரத்தறது

ஒரு பெண்ணை கல்யாணம் செய்து அழைச்சுட்டு வந்த பின்னர் அவளை வீட்டை விட்டு துரத்திட்டு, இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கறதே எல்லா சீரியல்களின் வில்லிகள் செய்யும் வேலையா இருக்கே.. தாலி கட்டின பெண்ணை துரத்தறது அவ்ளோ சுலபமா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+