Tamil selvi serial: நான் இட்லி சுட்டா அது இட்லிதான்னு சட்னி கூட நம்பாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் கலெக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட பெண்ணுக்கு எதிர்பாராத நபருடன் திடீர் கல்யாணம் நடந்து விடுகிறது.

தமிழ்ச்செல்விக்கு அத்தை மகன் சரவணன் மாமாவுடன்தான் கல்யாணம் நடக்க இருந்துச்சு. கடைசியில் தட்டிகிட்டு போனவன் அமுதன். சரவணன் கல்யாணம் பண்ணி வைக்கும்போதே தமிழ்ச்செல்வியை அவள் ஆசைப்படி கலெக்டருக்கு படிக்க வைக்கணும் என்று அமுதனிடம் சத்தியம் வாங்கிக்கறான்.

இங்கே பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு வந்தால், சமையல்காரி லீவு என்று தமிழ்ச்செல்வியை சமைக்க சொல்கிறார்கள்.

திட்டு சமையல்

திட்டு சமையல்

சமையல் செய்து ஒவ்வொன்றையும் ருசித்து பார்க்கையில் சூப்பரா இருக்குது. சரி, சமையல் முடிஞ்சுருச்சு சாப்பிட வாங்கன்னு எல்லாரையும் கூப்பிட்டு பரிமாறினால், ஒருத்தர் இருமறாங்க, ஒருத்தருக்கு புரை ஏறுது.மீதி பேர் தூன்னு துப்பறாங்க. பார்த்தால் சாப்பாட்டில் அவ்ளோ காரம், உப்பு.

சமைக்கலேன்னு யார் அழுதா?

சமைக்கலேன்னு யார் அழுதா?

இதுதான் உன் சமையல் லட்சணமா? வீட்டில் எல்லாருக்கும் நான்தான் சமைப்பேன்னு சொன்னியே... இப்படித்தான் சமைச்சு போட்டியா? இதைத்தான் சமையலுன்னு உங்க வீட்டுல சொல்லிக் குடுத்தாங்களா? அப்படி இப்படின்னு மாமியார் திட்டறாங்க. உன்னை யாரு சமைக்க சொன்னது..நீ சமைக்கலேன்னு யார் அழுதான்னு அமுதனும் திட்ட, தமிழ்ச்செல்வி அழுதுகிட்டே ஓடி வந்துடறா.

நாந்தான் காரம்

நாந்தான் காரம்

தமிழ்ச்செல்வி நீங்க என்ன நினைச்சுகிட்டு அழறீங்கன்னு எனக்கு தெரியும். ருசி பார்க்கும்போது நல்லாத்தானே இருந்துச்சு. இப்போ எப்படி உப்பு காரம் அதிகமாச்சுன்னுதான் நினைக்கறீங்க. நான்தான் உப்பு காரம் அள்ளிப் போட்டேன்னு சொல்றான்.தமிழ்ச்செல்வி அதிர்ச்சியாகப் பார்க்கிறாள்.

சமையல் செல்வி

சமையல் செல்வி

நான் உங்க சாப்பாட்டை டேஸ்ட் பார்த்தேங்க. ரொம்ப நல்லாருந்துச்சு. இப்படியே நீங்க சமைச்சா, வேலைக்காரியை நிறுத்திட்டு உங்களை சமைக்க சொல்லிடுவாங்க. சமைக்கவா என்னை கல்யாணம் செய்துகிட்டீங்க. கலெக்டராகணும்னு உங்க கனவு இப்படியே போனா நிறைவேறாது. தமிழ்ச்செல்வி சமையல் செல்வி ஆக கூடாதுன்னுதான் நான் அப்படி செய்தென்னு சொல்றான்.

கிச்சன் பயம்

கிச்சன் பயம்

அமுதன் வீட்டில் எல்லாருக்கும் கிச்சன் பயம். என்னால சமைக்க முடியாது அத்தை.நான் இட்லி சுட்டால் அது இட்லிதான்னு சட்னி கூட நம்பாத்துன்னு தப்பிக்க ஒரு டயலாக் பேசறாங்க பாருங்க... நல்ல காமெடி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+