Tamil Selvi Serial: கஷ்டம் குடுக்கறதுன்னா வில்லிகள் விதவிதமா செய்யறாங்க!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில், சொல்ல வந்த கருத்துக்களை மறந்து திசை மாறி பயணிக்கிறார்களோ என்கிற எண்ணம் வருகிறது.
இல்லை சீரியலை மற்றவர்கள் போல ஜவ்வு மாதிரி இழுத்து, வன்மம், குரோதம் எல்லாம் காண்பிச்சு கதையை சொல்ல நினைக்கிறார்களோ என்னவோ.
ஆனால், நமக்கு பார்ப்பதையே பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுத்து. எரிச்சல் வருது. நல்ல நோக்கத்தை வரவேற்க முடியாதபடி கதையின் போக்கு இருக்கிறது.

விரதம் வேண்டுதல்
தமிழ்ச்செல்விக்கும், அமுதனுக்கும் முதலிரவு நடக்க, குல தெய்வம் கோயிலுக்கு போயி, வீட்டுக்கு வந்த மருமகள் கடுமையான விரதம் இருக்கணுமாம். புதுப் பொண்ணு என்னென்ன கனவுகளோடு வந்திருப்பாள், இப்படியாங்க அவங்களை வறுத்து எடுப்பீங்க?

தண்ணி குடிச்சாலும்
விரதம் மேற்கொண்டால் சாப்பிட்டால்தான் குத்தம்.. தண்ணீர் குடித்தால் கூடவா? இப்படிப்பட்ட சாமி எங்கே இருக்குது...கண்டிப்பா மக்கள் எல்லாரும் பார்க்கட்டும் கொஞ்சம் சொல்லி விடுங்கள்.இப்படி விரதம் இருந்து பெண்கள் சுபிட்சமாக முதலிரவு நடந்து குழந்தை குட்டிகள் பெற்று சந்தோஷமாக வாழட்டும்!

வேண்டுதல் நேர்த்தி கடன்
கல்லு உப்பு கால் மூட்டை அளவுக்கு இருக்குங்க. அதில் முட்டி போட்டு தமிழ்ச்செல்வி நிக்கணுமாம். பூஜை செய்து குடம் குடமா தண்ணீர் விட்டு, தமிழ்ச்செல்வி தலையில் ஊத்தணும். அப்போது கல் உப்பு கரைந்தவுடன் எழுந்துக்கலாம். இது ஒரு வகை வேண்டுதல் நிவர்த்தி.

வில்லி வேலை
வில்லி புத்தி இந்த இடத்துல எப்படி வேலை செய்யுது பாருங்க.மூத்த மருமகள்தான் வில்லி. இவங்க வில்லியானதுக்கு காரணம் என்ன தெரியுமா, அமுதனுக்கு தனது தங்கையை கல்யாணம் செய்து வைக்கலாம்னு இருந்தாங்க. அது நடக்கலை. இப்போ தமிழ்ச்செல்வியை துரத்திட்டு, தங்கையை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க.
கண்ணாடி பாட்டிலை உடைச்சு தூள் தூளாக்கி கல்லு உப்பில் கலந்துடறாங்க. அது மேல தமிழ்ச்செல்வி முட்டி போட்டுக்கிட்டு உட்கார்ந்து இருக்க, பூஜை செய்த தண்ணீரை தமிழ்ச் செல்வியின் தலையில் ஊத்தறாங்க.
காண கன கொடூரம்!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications