Tamil selvi serial: ஏ புள்ளே தமிழ்ச்செல்வி..சரவணன் பாவம்.. கை விட்டுடாதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் பல விஷயங்களை முன் உதாரணமாக எடுத்துக்கலாம். முக்கியமா பெண் கல்வி , பெண் முன்னேற்றம் இதல்லாம் தேவையானதா இருக்கு.

தமிழ்ச்செல்வி பிறந்தப்பவே அவளது அத்தை மகன் சரவணனுக்குத்தான் என்று பெரியவர்கள் முடிவு செய்துடறாங்க. உறவில் திருமணம் செய்வது என்பது நடைமுறைதான் என்றாலும், அதை சிறு வயதிலிருந்து சொல்லி வளர்ப்பதும் நடைமுறையாகத்தான் இருக்கிறது.

ஆனால், அறிவியல் ரீதியாக உறவுக்குள் திருமணம் செய்வது என்பது தவறு என்றும் வலியுறுத்தப்பட்டு வருவது இந்த சீரியலில் காண்பிக்கப் படவில்லை. எல்லாருக்கும் இந்த அறிவியல் சாத்தியப்படுமா என்பதும் தெரியவில்லை.

சரவணன் தமிழ்ச்செல்வி

சரவணன் தமிழ்ச்செல்வி

தமிழ்ச்செல்வி பிளஸ் 2 முடித்த கையோடு சரவணனுடன் கல்யாணம் என்று முடிவு செய்துவிட, அவளுக்கு படிச்சு கலெக்டராகணும்னு ஆசை. அதை நிறைவேற்ற பாட்டியுடன் சேர்ந்து நாடகமாடி படிக்கவும் சென்றுவிடுகிறாள். நாலு வருஷம் படிப்பை முடிச்சுட்டு வந்தாச்சு. இப்போது கலெக்டருக்கு படிப்பது மட்டுமே பாக்கி. ஆனால், படிக்காத சரவணனை கல்யாணம் செய்துக்க தமிழ்ச்செல்விக்கு முழு சம்மதமாகத்தான் இருக்கிறது.

தமிழ்ச்செல்வி அமுதன்

தமிழ்ச்செல்வி அமுதன்

தமிழ்ச்செல்வி படிக்க போன இடத்தில் ஓரிரு தடவை சந்தித்த அமுதன், தமிழ்ச்செல்வியின் உள்ளூர் குடும்ப டாக்டர் அண்ணண் மகன். இவனுக்கு தமிழ்ச்செல்வி மீது காதல் வந்துருது. ஆனால், தமிழ்ச்செல்வி அவனை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்க, சந்தர்ப்ப சூழல் காரணமாக முதன் தமிழ்ச்செல்வி கல்யாணத்துக்கு வர நேர்வதோடு, கூடவே இருக்கவும் நேர்கிறது.

அமுதந்தன தமிழ்ச்செல்விக்கு

அமுதந்தன தமிழ்ச்செல்விக்கு

தமிழ்ச்செல்விக்கு அமுதன்தான் சரியான ஜோடியாக இருப்பான் என்று அமுதன் ஒரு நாள் கூறியது சரவணனுக்கு நினைவில் வந்து வந்து போகிறது. படிக்காத அவனுக்கு தன் மீது தாழ்வு மனப்பான்மை வருகிறது. அமுதன்தான் தமிழ்ச்செல்விக்கு பொருத்தமானவன், அவளை கலெக்டராக்க அவன் படிப்பளவில் உதவியாக இருந்து சொல்லித் தருவான் என்றும் நினைக்கிறான் சரவணன்.

சரவணன் சித்தப்பா

சரவணன் சித்தப்பா

அமுதனின் சித்தப்பா டாக்டரிடம் போயி, அவன் உண்மையை சொல்ல, அவர் ஒப்புக்க மறுக்கிறார். இதெல்லாம் முட்டாள்தனம் சரவணா.. கல்யாணத்துக்கு தயாராகுன்னு சொல்றார். ஆணாலும் மனம் இல்லாத சரவணன் என்னை மன்னிச்சுரு தமிழ்னு சொல்லி, மேலே சுத்திக்கு கொண்டு இருக்கும் மின் விசிறியை பார்த்து கதறி அழுகிறான்.

சரவணனை ஏமாற்றாமல், படிப்புக்கும், மனிதனின் பண்புக்கும் தொடர்பில்லை என்பதை இந்த சீரியல் நிரூபிக்க வேண்டும் என்பதே நமது ஆசை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+