Tamil Selvi Serial: படிக்காதவங்க வீட்டில் படிக்க வச்சுட்டாங்க... படிச்சவங்க வீட்டில்?
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில், தமிழ்ச்செல்வி கலெக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறாள். ஆனால், படிக்காத தமிழ்ச்செல்வி வீட்டில் முறை மாமன் சரவணனுக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்குது.
தாலி கட்டப் போகும் முன்னர் தமிழ்ச்செல்வி மயக்கம் போட்டு விழுந்துட்டா, கல்யாணம் நின்னு போயி, அமுதனின் சித்தப்பா டாக்டரும் தமிழ்ச்செல்வி படிக்க ஆசைப்படுவதை கேட்டு, இன்னும் நாலு வருஷத்துக்கு தமிழ்ச்செல்விக்கு கல்யாணம் செய்ய கூடாதுன்னு சொல்லிடறார்.
நாலு வருஷம் சும்மா எதுக்கு இருக்கணும்னு வெளியூர் போயி படிக்கட்டும்னு படிக்க வைக்கிறாங்க. தமிழ்ச்செல்வியும் படிச்சு கோல்ட் மெடல் வாங்கிட்டா. இப்போ கலெக்டருக்கு படிக்க வேண்டியதுதான் பாக்கி.

படிக்காதவன் சரவணன்
தமிழ்ச்செல்வியின் முறை மாமன் சரவணன் படிக்காதவன் என்றாலும், கொஞ்சமும் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் தான் தமிழ்ச்செல்வியை கல்யாணம் செய்துக்க காத்திருக்க, இவனுக்குள் அமுதனும், அவனின் சித்தியும் உண்டாக்கிய தாழ்வு மனப்பான்மை விருட்சமாகி விடுகிறது.

முறைப் பெண்ணை
சரவணன் தமிழ்ச்செல்விக்கு படிச்ச அமுதன்தான் சரி என்று கடைசி கட்டத்தில் நினைக்கிறான். அதற்குள் கொம்பன் பிரச்சனை வந்து, அவன் கையில் கத்திக் குத்து பட்டு சாகும் நிலையில் இருக்கிறான் சரவணன். அவனை ஆஸ்பத்திரிக்கு உடனடியாக அழைச்சுட்டு போகாமல், அவன் கடைசி ஆசை என்று தமிழ்ச் செல்விக்கும், அமுதனுக்கும் கல்யாணம் நடத்தி வைக்க சொல்றான்.

அமுதன் தமிழ்ச்செல்வி
அமுதனுக்கும் தமிழ்ச்செல்விக்கும் கல்யாணம் நடக்குது. சரவணன் பிழைச்சுக்கறான். இப்போது அமுதன் வீட்டில் இந்த கல்யாணத்தை ஏத்துக்க மறுக்கறாங்க. அமுதனின் பாட்டி மட்டும் அவளுக்கு உறுதுணையாக இருக்காங்க. சரவணன் அமுதனுக்கு கல்யாணம் செய்து வைக்க சொன்னபோதே ,அவளோட கலெக்டர் கனவை நீங்கதான் நிறைவேத்தி வைக்கணும்னு சொல்லி இருக்கான்.

பாட்டி அமுதன்
அமுதன் பாட்டி வந்து தமிழ்ச்செல்வியிடம் பேசிகிட்டு இருக்காங்க. அப்போது இலக்கியா வந்து அதை கேட்டுகிட்டு இருக்கா. இந்த வீட்டில் உன்னை ஏத்துக்க ரொம்ப நாளாகும்.. அதுவரை கொஞ்சம் பொறுமையா இருன்னு சொல்லி. அப்போதுதான் எனக்கு ஒரு ஆசை இருக்கு பாட்டி. நான் கலெக்டருக்கு படிக்கணும்னு தமிழ்ச்செல்வி சொல்ல.
எனக்கு தெரியும்..அமுது சொல்லி இருக்காரு. இதோ பாரு இந்த பீரோவில் நிறைய புக்ஸ் இருக்கு.உனக்கு எப்போ எது தேவையோ, அதை எடுத்து படின்னு சொல்றாங்க.
படிப்பறிவு இல்லாத வீட்டில் தமிழ்ச்செல்வியை படிக்க வச்சாங்க .படிப்பறிவு நிறைந்த அமுதன் வீட்டில் தமிழ்ச்செல்வியை சொன்னபடி கலெக்டருக்கு படிக்க வைப்பாங்களா?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications