Tamil Selvi Serial: சீரியல்களில் இந்த பூக்காரங்க தொல்லை தாங்க முடியலையே!
சென்னை: தொலைக்காட்சி சேனல்களில் சீரியல்கள் இன்றியமையாததாகி இருக்கிறது. அதானல், சீரியல்களில் வரும் சில தேவை இல்லாத காட்சிகளையும் அவசியம் என்று அவர்கள் காண்பிக்கும் போது அதை நாமும் பார்க்க வேண்டி இருக்கிறது.
சீரியலில் யாருக்குமே தேவை இல்லாத சில பொதுமக்கள் கதாபாத்திரங்கள் வந்து நாயகன் நாயகிக்கு அறிவுரை சொல்வதும், கட்டளை இடுவதும் என்று, திணிக்கப்படும் காட்சிகள் நிறைய இருக்கின்றன.
உண்மையில் பொது மக்களுக்கு இந்த மாதிரி அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது நாகரீகமல்ல என்று எல்லாருக்கும் தெரியும்.

அமுதன் தமிழ்ச்செல்வி
அமுதன் தமிழ்ச்செல்வியை காதலிச்சு, கல்யாணம் செய்துகிட்டு வர்றான். தமிழ்ச்செல்விக்கு சரவணன் மாமா மீதுதான் பல வருஷ காதல்.இப்படி இருவரின் மனதுக்குள்ளும் பல போராட்டங்கள். குறிப்பாக இத்தனை வருஷம் தனக்காக காத்திருந்த சரவணன் மாமாவை கல்யாணம் செய்துக்கணும்னு ஆசையில் வளர்ந்தவள் தமிழ்ச்செல்வி.

தமிழ்ச்செல்விக்கு பூ
தமிழ்ச்செல்வியும், அமுதனும் கலெக்டர் பயிற்சி கூடத்துக்கு சென்றுவிட்டு வரும்போது, அங்கே தேவையில்லாமல் தனியாக ஒரு பூக்கடையை வைத்து இருக்கிறார்கள்.அப்போதே ஆடியன்ஸுக்கு தெரிந்துவிடுகிறது. இந்த அம்மா பொண்டாட்டிக்கு பூ வாங்கிக் குடுப்பான்னு கேட்க போறாங்கன்னு.

காப்பி காட்சி
இது ஒரு காட்சி ஒன்று விடாமல் எல்லா சேனல்களிலும், எல்லா சீரியல்களிலும் வரும் அப்பட்டமான காப்பி காட்சி. அப்படித்தான் இருவரும் ஒன்றும் பேசாமல் நடந்து கொண்டே வர, அந்த பூக்கார அம்மா ஏம்ப்பா.. உன் பொண்டாட்டி தலை வெறுமனே இருக்குது பாரு.ஒரு முழம் பூ முப்பது ரூபாய்தான் வாங்கி குடு. அந்த பொண்ணு தலையில பூ வச்சுக்கும்னு சொல்றாங்க.

புருஷன் பொண்டாட்டி
ஐயோ அம்மா நீங்க நினைக்கற மாதிரி நாங்க புருஷன் பொண்டாட்டி இல்லைன்னு அமுதன் சொல்றான்.பொய் சொல்லாதீங்க தம்பி. முப்பது ரூபாய் பூ வாங்கிக் குடுக்க பயந்து புருஷன் பொண்டாட்டி இல்லைன்னு சொல்றீங்களேன்னு பேசி பூவை வாங்க வச்சுடறாங்க.
உண்மையில் பூ விக்றவங்க நாங்க புருஷன் பொண்டாட்டி இல்லேன்னு சொன்னா, சாரிப்பா தெரியாம சொல்லிட்டேன்னு விலகிப் போறதைத்தான் நாம பார்த்து இருக்கோம். என்னங்க பொது மக்களை நீங்க புரிஞ்சு வச்சு இருக்கறது!
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications