தமிழ் சினிமா பாடல் உலகின் பொற்காலம் 2000! ஓவர் டைம் பார்த்த கேசட் கடைகளை மறக்க முடியுமா
சென்னை: 2000-ம் ஆண்டு... அடடே, கேசட் கடைகளில் பாட்டு போடும் சத்தம் ஊரையே அதிர வைத்த காலம்! அந்த வருஷம் வந்த பாட்டெல்லாம் சும்மா தெறிக்க விட்டதுங்க! பாடலுக்காகவே இப்போவரை பேசப்படும் படங்கள் வெளியான வருஷமும் அதுதான். வருஷம் ஆரம்பிச்சதுமே "வானத்தைப் போல"வும் "கண்ணுக்குள் நிலவு"வும் மாறி மாறி கேசட்ல பதிஞ்சு ஓடிட்டே இருந்துச்சு. A சைடுல "வானத்தைப் போல", B சைடுல "கண்ணுக்குள் நிலவு"... என்ன ஒரு காம்பினேஷன்! நெட்டிசன் டீக்கடை இதைப்பற்றி ஒரு இழை எழுதியதுமே, நாமும் அந்த காலத்திற்குள் ஒரு ரவுண்ட் போகலாம்னு முடிவு பண்ணினோம். இதோ நீங்களும் வாங்க, டைம் மிஷினுக்கு.
பிப்ரவரி மாசம் வந்த "ஹேராம்" படத்துல "நீ பார்த்த பார்வைக்கு" பாட்டும், "இசையில் தொடங்குதம்மா" பாட்டும் வேற லெவல்ல ஹிட். மீதி இருந்த கேசட்ல இதையும் போட்டு நிரப்பிட்டாங்க. அதுக்கு அடுத்த வாரமே "முகவரி" படத்தோட பாட்டு கேசட் ரிலீஸ் ஆகி, அதுவும் பயங்கரமா காப்பி பண்ணி வித்தாங்க.

அப்பதான் வந்துச்சு அந்த மேஜிக்... "அலைபாயுதே"! ப்ரூ காஃபி விளம்பரத்துல இந்த பாட்ட போட்டதுதான் தாமதம், பி.சி. ஸ்ரீராம் சாரோட கலர்ஃபுல் காட்சியும், நம்ம ஏ.ஆர். ரஹ்மான் சாரோட மயக்கும் இசையும் எல்லாரையும் அப்படியே உருக வச்சிடுச்சு. ஒரிஜினல் கேசட் வந்ததும் பாருங்க, பதிவு போடுற கடைக்காரங்களுக்கு ஒரே கொண்டாட்டம்! அடுத்த ரெண்டு வாரத்துலயே "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" பாட்டும் வந்து சேர்ந்துச்சு. அப்புறம் என்னங்க, A சைடுல "அலைபாயுதே", B சைடுல "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்"னு போட்டு போட்டு கேசட்டே தேஞ்சு போச்சு!

குஷி திரைப்பட ஆல்பம்
இந்த சூடு ஆறதுக்குள்ள "குஷி" படத்தோட பாட்டுங்க வந்து விழுந்துச்சு. இது தேவா இசைதானா என கேட்க வைத்த டிராக்குகளை குஷி படத்தில் அடுக்கியிருந்தார் நம்ம தேனிசை தென்றல். அதுவும், மெக்கரினா பாட்டெல்லாம் யாரோ வெளிநாட்டுக்காரர் மியூசிக் போட்ட மாதிரியே இருக்கும். சுந்தர் சி இயக்கத்துல சிற்பி இசையமைச்ச "கண்ணன் வருவான்" படமும் அப்போ ரிலீஸ் ஆச்சு. இந்த ரெண்டு படத்தோட பாட்டுமே படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் பயங்கரமான ஹிட்டுங்க!
அதுக்கப்புறம் "பெண்ணின் மனதை தொட்டு", "பார்த்தேன் ரசித்தேன்"னு வரிசையா நல்ல பாட்டுங்க வந்துச்சு. வசந்த் இயக்கத்துல பிரசாந்த் நடிச்ச "அப்பு", கஸ்தூரி ராஜா இயக்கத்துல வந்த "கரிசக்காட்டு பூவே" பட பாட்டுங்களும் செமத்தியா ஓடுச்சு.
நம்ம இளையராஜா சாரும் சும்மா இருப்பாரா? "பாரதி" படத்துல "நிற்பதுவே நடப்பதுவே"ன்னு ஒரு பாட்ட இறக்கி விட்டாரு பாருங்க... அடடா, என்ன ஒரு பாட்டு!

ரிதம் வந்தது பாருங்க
அடுத்து நம்ம ரஹ்மான் சார் "பஞ்சபூதங்கள்"ன்னு ஒரு புதுவிதமான ஐடியாவோட ரிதம் படத்தில் கலக்கியிருப்பாரு. இதுவும் பாடலுக்காகவே புகழ் பெற்ற படமாக மாறியது... ஏற்கனவே விடிய விடிய பாட்டு போட்டுக்கிட்டு இருந்த கேசட் கடைங்களுக்கு இது அடுத்த ஜாக்பாட்! அதுக்கப்புறம் "தெனாலி" பட பாட்டுங்க வேற வந்துச்சு. ஏ.ஆர்.ரஹ்மான் இதில் வித்தியாசமான இசை நுணுக்கங்களை பயன்படுத்தியிருப்பார். இதுவும் ஹிட்.

இன்னும் ஒலிக்கும் ராதை மனதில்
இந்த சமயத்துல "சினேகிதியே" படத்துல வந்த "ராதை மனதில்" பாட்டு இருக்கே... அது இன்னிக்கும் பல பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள்ல டான்ஸுக்காக போடுறாங்கன்னா பாருங்களேன்! அந்த பாட்டுல இருக்கிற துள்ளல் பெண்களுக்கும் அப்படி ஒரு ஃபீல் கொடுக்கும்! இந்த வருஷம் முழுக்க ஒவ்வொரு படத்துலயும் ஏதாவது ஒரு பாட்டு ஹிட் அடிச்சுக்கிட்டே இருந்துச்சு. "ஏழையின் சிரிப்பில்" படத்துல "எப்பா எப்பா ஐயப்பா", "காதல் ரோஜாவே" படத்துல "இளவேனில் இது வைகாசி மாதம்", "சந்தித்த வேளை" படத்துல "பெண்கிளியே பெண்கிளியே", "வல்லரசு" படத்துல "அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு", "வெற்றிக் கொடி கட்டு" படத்துல "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு", "பிரியமானவளே" படத்துல "எனக்கு ஒரு சினேகிதி"... லிஸ்ட் போட்டுக்கிட்டே போகலாம்!
எல்லா இசையமைப்பாளர்களும், சொல்லப்போனா எல்லா டைரக்டர்களும், நடிகர்களும் அந்த வருஷம் அட்டகாசமான படங்களை கொடுத்தாங்க. இதே மாதிரி ஒரு வருஷம் 1996-ம் வருஷமும் தமிழ் பாட்டுங்க பயங்கரமா ஹிட் அடிச்சுச்சுன்னு சொன்னா நம்புவீங்களா? அந்த வருஷம் வந்த, "காலமெல்லாம் காதல் வாழ்க" படத்துல "ஒரு மணி அடித்தால்", "மிஸ்டர் ரோமியோ" படத்துல "மோனா லிசா", "அவ்வை சண்முகி", "இந்தியன்".. அடேங்கப்பா, அந்த வருஷமும் பாட்டு மழைதான்! அந்த காலமே ஒரு பொற்காலம்ங்க! இப்ப நினைச்சாலும் அந்த கேசட் போட்ட சத்தமும், பாட்டு கேட்ட சந்தோஷமும் மனசுக்குள்ள அப்படியே நிக்குது!
எல்லா வருடமும் பாடல்கள் ஹிட் ஆகத்தான் செய்கிறது. ஆனால் 2000மாவது வருடம் வெளியான படங்கள் பாடல்களுக்காகவே நினைவில் நிற்கிறது. அதுதான் வித்தியாசம்..
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications