tamilselvi serial: பிளாஸ்டிக் சர்ஜரின்னு சொல்லி அழகான பொண்ணை மாத்திட்டாங்க!
சென்னை: சன் டிவியில் மதிய நேர சீரியலான தமிழ்செல்வி சீரியலில் தமிழ்ச்செல்வியா நடிச்ச நடிகையை, பிளாஸ்டிக் சர்ஜரின்னு சொல்லி மாத்திபுட்டாங்க.
அவங்க நல்ல அழகு...புதுசா நடிச்சு இருக்கும் இந்த நடிகை சுமார் ரகம்தான்.
டைட்டில் கேரக்டர் நடிகை என்பதால்... ஏத்துக்க முடியலைங்க..என்னங்க நீங்க இப்படி பண்றீங்களே...!

மூட நம்பிக்கைகள்
தமிழ்செல்வி சீரியலில் அளவுக்கு அதிகமான மூட நம்பிக்கைகள், விளையாடிகிட்டு இருக்குதுன்னு சொல்லி இருந்தோம். ஜாதகத்தில் அமுதனுக்கும் தமிழ்ச்செலிக்கும் குழந்தை பிறந்தால் அமுதன் உயிருக்கு ஆபத்துன்னு இருக்குதாம். அப்போ பரிகாரம் கேட்காம விட்டுடறாங்க.

நிலா தமிழ்ச்செல்வி
நிலா தமிழ்ச்செல்வி சீரியல் சங்கமத்தின் போதுதான் பரிகாரம் என்று ஒன்று இருப்பதை நிலவின் அம்மா மூலமா தெரிஞ்சுக்கிட்டு அய்யரை கேட்கும்போது அக்கினியில் அடிபிரதட்சணம் செய்யறதுன்னு ஐயர் சொல்றார். தமிழ்ச்செல்வியும் அதே போல செய்யும்போது தீயில் விழுந்துடறா.இது எல்லாம் எந்த வழக்கத்திலும் இல்லாதது.

பொறுப்பு துறப்பு
இதை யாராவது கடைப்பிடித்தால் என்ன செய்வீர்கள் என்கிற கேள்வியைக் கூட எழுப்பியாயிற்று. இனி இது போல கற்பனையாக வழக்கில் இல்லாத காட்சிகளை அதாவது மூட நம்பிக்கை காட்சிகளை வைக்கும்போது இது வெறும் கற்பனைதான்.. இதை யாரும் முயற்சிக்காதீர்கள் அப்படி முயற்சித்தால் நாங்கள் பொறுப்பல்ல என்கிற பொறுப்பு துறப்பையும் ஸ்க்ரோலிங்கில் ஒளிபரப்ப செய்ய வேண்டும்.

இவருக்கு பதில்
தமிழ்ச்செல்வி தீக்காயத்தில் இருக்கும்போதே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யறாங்களாம். செய்தவுடனே முகம் மாறிப்போகுது. இப்போ சீரியல் எடுக்கறவங்க நினைச்சு இருந்தா அதே முகம் வந்துருக்கும். இதில் நடிக்கும் பெண் நடிக்க வரலியா.இல்லை கதையில் ஏதாச்சும் டிவிஸ்டோ தெரியலை. முகம் மாறிப்போச்சுன்னு வேறு நடிகையை காண்பிச்சுட்டாங்க.
இப்போ இவருக்கு பதில் இவர்னு போட வேண்டிய அவசியம் இல்லாம போயிருச்சு! ஆனல், அந்த பொண்ணு நல்ல அழகுங்க...என்னங்க இப்படி பண்றீங்களே!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications