Tamilselvi serial: அட மக்குகளா.. எத்தனை நாளைக்கு த்தான் தாம்பத்ய உறவை....!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமுதனின் ஜாதகத்தில் அவனுக்கு குழந்தை பிறந்தால் அவனின் உயிருக்கு ஆபத்து என்று இருக்கிறதாம். இதனால் தாம்பத்ய உறவை தவிர்க்க சொல்கிறார் மாமியார்.

மாமியார் என்றால் அந்த காலத்து மனுஷியாக இருப்பார்கள் என்பது எத்தனை உண்மையாகி இருக்கிறது பாருங்கள் இந்த சீரியலில்.

எந்த சீரியல் என்று குழம்பாதீர்கள்...சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நேர சீரியலான தமிழ்ச்செல்வி சீரியலில்தாங்க இந்த அநியாயம் அரங்கேறுது.

அம்மா பார்க்கறாங்க

அம்மா பார்க்கறாங்க

அமுதனின் ஜாதகத்தை அவனின் அம்மாவும், அப்பாவும் ஜோதிடரிடம் எடுத்துக்கிட்டு போறாங்க. அந்த ஜோதிடர் சொல்றார்..உங்க பையனுக்கு எதிர்பாராத விதமா உங்களுக்கே தெரியாம கல்யாணம் நடக்கும். அப்படி கல்யாணம் நடந்து அவங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்தா அமுதன் உயிரோட இருக்க மாட்டான்னு.

ஒரு மாமியாருக்கு

ஒரு மாமியாருக்கு

ஜோதிடரின் இந்த வாக்கு போதாதா ஒரு மாமியாருக்கு. தமிழ்ச்செல்வியை அமுதனுடன் சேரவிடாமல் கொடுமைப படுத்தறாங்க மாமியார். ஒரு நாள் மருமகளுக்கு சூப்பில் விஷத்தையே கலந்து கொடுத்துவிட.தமிழ்ச்செல்வி அப்போதுதான் ஏன் அத்தை என் உயிரை எடுக்கற அளவுக்கு துணிஞ்சுட்டீங்கன்னு கேட்கிறாள்.

தமிழ்ச்செல்வியும் ஜோதிடம்

தமிழ்ச்செல்வியும் ஜோதிடம்

அத்தை உண்மையை சொல்லி கதறி அழுதும் கமிழ்ச்செல்வியும் அமுதனின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் போறா.அவர் சொல்றார்..நீங்க ரெண்டு பேரும் தாம்பத்திய உறவு வச்சுக்கலாம்.ஆனால் குழந்தை பிறந்தால் அமுதனின் உயிருக்கு ஆபத்து என்று.

உறவையே தவிர்க்க

உறவையே தவிர்க்க

இதனால் ஆசையாக தன்னை நெருங்கும் அமுதனை நெருங்க விடாமல் தடுக்கிறாள். ஒவ்வொரு நாளும் ஒரு காரணம் சொல்றா தமிழ்ச்செல்வி. இதனால், தமிழ்ச் செல்வியை வெறுப்பேத்த அமுதன்,தனது அண்ணியின் தங்கச்சி ருத்ராவிடம் நெருங்கிப் பழகுவது போல பாவ்லா செய்து தமிழ்ச்செல்வியை வெறுப்பேத்தறான்.

அட மக்குகளா..உண்மையை தெரிஞ்சுக்க கூடாத சின்னக் குழந்தையா அமுதன்? அவனிடம் உண்மையை சொல்லி.தாம்பத்ய உறவை குழந்தை பிறக்கதவாறு வச்சுக்க ஆலோசனை செய்து தற்போதைக்கு சந்தோஷமாக வாழக் கூடாதா?

கொஞ்ச நஞ்சம் அறிவு இருக்கறவங்களையும், அறிவியல் வசதி தெரிஞ்சவங்களையும் ஏமாத்தி சீரியல் எடுப்பீங்க போல இருக்கே...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+