சூழ்ச்சி வலையில் சிக்கும் தமிழ்.. கோதை குடும்பத்திற்கு வரும் அடுத்த பிரச்சனை.. இது மோசமான முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் 30ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மேக்னா கல்யாணம் ஆனவர்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டா என்று மேக்னாவின் மாமா பேசியதை கேட்ட நமச்சி புது ப்ளான் போடுகிறார்.

அதே நேரத்தில் தமிழுக்கு திருமணமாகவில்லை என்று மேக்னா தமிழை காதலிக்க தொடங்குகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் நமச்சி வருவதை கவனித்த மேக்னாவின் மாமாவும் பையனும் நமச்சிக்கு கேட்பது போன்று மேக்னா கல்யாணமானவங்களுக்கு உதவி செய்ய மாட்டா. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று லட்சியத்தோடு இருக்கிறவங்களுக்கு தான் உதவி செய்வா. கல்யாணம் ஆகிட்டா பாதியிலேயே குழந்தை குட்டி என்று சொல்லி வேலையை விட்டுட்டு போயிருவாங்கன்னு அவ அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பா.

அவ கம்பெனியில் கூட இன்டர்வியூ அப்படித்தானே ஆள் எடுப்பா. ஆனா இப்ப வந்திருக்க இந்த தமிழ் பையனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா இல்லையா என்று தெரியவில்லை என்று பேசிக் கொண்டிருக்க இதையெல்லாம் கேட்டு நமச்சி ஒரு முடிவுக்கு வருகிறார். அதைத் தொடர்ந்து தமிழிடம் இதைப் பற்றி நமச்சி மறைக்கிறார்.
அதே நேரத்தில் வீட்டில் மேக்னா வீட்டில் அடுத்தடுத்து புடவைகளை மாற்றிக் கொண்டு தன்னுடைய அம்மாவிடம் காட்டிக்கொண்டு இருக்க அதற்கு அவர் உன்னிடம் நிறைய மாற்றம் இருக்கு. நீ எப்பவுமே இவ்வளவு நேரம் ஒரு புடவை மாத்திக்க எடுத்துக்க மாட்டா. ஆனால் இப்போ என்ன இவ்வளவு மாற்றம் என்று கேட்க அதற்கு மேக்னா சமாளிக்கிறார்.

கூடவே தமிழ் வருவதை எதிர்பார்த்து வீட்டு வாசலில் எதிர்பார்த்துக்கொண்டு மேக்னா நின்று கொண்டிருப்பதை பார்த்து இதற்கு முன்பு எத்தனையோ பேர் வீட்டுக்கு வந்து இருக்காங்க பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வரும்போது கூட நீ இப்படி எல்லாம் பரபரப்பு ஆனதில்லையே என்று அம்மா விசாரிக்க அதற்கு மேக்னா தெரியல ஏதோ ஒரு மாதிரி பீலா இருக்கு என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து தமிழ் வீட்டிற்கு வரும்போது தமிழிடம், மேக்னா வெட்கப்பட்டு கொண்டு பேசுவதை பார்த்து மாமாவும் அவருடைய பையனும் கோபப்படுகின்றனர். வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் போது மேக்னா நடந்ததுக்கு எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டு கொண்டு இருக்க அவருடைய அம்மா இது எல்லாமே கடவுள் ஏதோ பார்த்து தான் முடிச்சு போட்டு இருக்காரு என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து எல்லோரும் சாப்பிட உட்காருகின்றனர் அப்போது மேக்னா தமிழுக்கு ஜூஸ் கொடுத்து கொண்டு குடும்பத்தை பற்றி விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் தமிழ் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை பற்றி சொல்ல போகும்போது நமச்சி ஜூசை தமிழ் மீது கொட்டி விடுகிறார். அதனால் தமிழ் டிரஸ்ஸை வாஷ் பண்ணிட்டு வருகிறேன் என்று கிளம்பி போக அப்போது நமச்சி இடம் மேக்னாவின் அம்மா தமிழுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று விசாரிக்க அதற்கு நமச்சி இல்லை,வாழ்க்கையில் சாதிச்ச பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கான்.
மேக்னா மேடம் மாதிரி தான் அவனும் என்று சொல்ல அதைக்கேட்டு மேக்னாவும் அம்மாவும் சந்தோஷப்பட நமச்சி பொய் சொல்வதை பார்த்து மேக்னாவின் மாமாவும் அவருடைய பையனும் தங்களுடைய பிளான் சக்சஸ் ஆகிவிட்டது என்று சந்தோஷப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து தமிழுக்கு மேக்னா பார்த்து பார்த்து சாப்பாடு பரிமாற அதை பார்த்து மேக்னாவின் மாமா கோபப்படுகிறார்.
அதைத்தொடர்ந்து எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் தன்னுடைய கம்பெனி நிலவரம் குறித்து தமிழ் மேக்னாவிடம் பேசுகிறார். அப்போது தன்னுடைய அம்மா தான் தனக்கு எல்லாமே என்று கோதை பற்றி பேசிக் கொண்டிருக்க அதை கேட்டு மேக்னா நீங்க உங்க அம்மாவோட பேச்ச கேக்குறீங்க நான் என்னுடைய அம்மாவை பேச்சை கேட்கிறது கிடையாது என்று சொல்கிறார்.
அப்போது இவங்க தானே உங்க அம்மா என்று தமிழ் கேட்கும் போது அதற்கு மேக்னாவின் அம்மா நான் இந்த வீட்டு வேலைக்காரி. மேக்னா என்னை அம்மா என்று அழைத்து எனக்கு அப்படி ஒரு பாசத்தை காட்டுனா என்று சொல்லிப் பெருமைப்பட, அதைப்பற்றி தமிழ் கை கொடுத்து பாராட்ட மேக்னா சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications