தமிழுக்கு கல்யாணம் ஆனதை தெரிந்து கொண்ட மேக்னா.. சரஸ்வதி கேட்ட கேள்வி.. இனி நடக்கப்போவது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் டிசம்பர் 7ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழுக்கு கல்யாணம் ஆனதை தெரிந்து மேக்னா அதிர்ச்சியாகி தன்னிடம் நமச்சி ஏமாற்றிய விஷயத்தை எல்லோரிடமும் போட்டுக் கொடுக்கிறார்.
அப்போது சரஸ்வதி மற்றும் கோதை குடும்பத்தினர் என்ன முடிவெடுத்தனர் என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் மேக்னா மற்றும் கமலா அம்மா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கமலா இங்கிருந்து பெங்களூர் செல்வதற்குள் உங்கள் திருமணத்தை பற்றி பேச வேண்டும் என்று சொல்ல, அதற்கு மேக்னா திருமணம் ஆகிவிட்டால் நான் ஏன் பெங்களூர் வரப்போகிறேன் என்று சொல்ல அதற்கு கமலா ஆசைய பாரு என்று கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.
அடுத்த காட்சியில் தமிழ் வீட்டில் மேக்னா எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு தமிழ் அவருடைய உடல்நிலை நன்றாக தான் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு உன் உயிரை காப்பாற்றிய மேக்னாவை அழைத்து விருந்து வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். உடனே தமிழ் மேக்னாவுக்கு போன் பண்ணி நாளைக்கு விருந்துக்கு வர சொல்லி போன் பண்ணி கூப்பிடுகிறார்.

பிறகு மேக்னாவும் கமலா அம்மாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது தமிழ் வீட்டிற்கு போனதும் திருமணத்தை பற்றி பேச வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை தொடர்ந்து காலையில் நமச்சி மேக்னாவை கூட்டிட்டு போக வருகிறார். அப்போது தமிழ் வீட்டிற்கு போகாமல் மேக்னாவை தடுக்க பார்க்கிறார். ஆனால் மேக்னா பிடிவாதமாக 12 மணிக்குள் போக வேண்டும். எதற்காக இப்படி நடந்து கொள்வீர்கள் என்பது போல கேட்க பிறகு வழியில்லாமல் நமச்சி மேக்னாவை தமிழ் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.
அப்போது சரஸ்வதி மற்றும் தமிழுக்கு திருமணமான புகைப்படத்தை பார்த்து அந்த புகைப்படத்தை நமச்சி மறைத்து வைக்கிறார். பிறகு மேக்னா வீட்டில் எல்லோரிடமும் நலம் விசாரித்து சாப்பிட்டு முடிகின்றனர். அப்போது கமலா கோதையிடம் பையனை நல்லா வளர்த்து இருக்கீங்க. உங்க பையனுக்கு ஒரு நல்ல பொண்ணு இருக்கு என்று சொல்ல, அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது இவனுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு எதற்காக மறுபடியும் கல்யாணம் பண்ணனும் என்று கோதை கேட்க, அதைக் கேட்டு மேக்னா மற்றும் கமலா இருவரும் என்ன விளையாடுறீங்களா என்று கேட்கின்றனர். அதற்கு இல்லை நிஜத்தில் தமிழுக்கு கல்யாணம் முடிந்து விட்டது. சரஸ்வதி தான் பொண்டாட்டி என்று சொல்ல அதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கூடவே தமிழுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என நமச்சி சொன்னதை கமலா அம்மா போட்டு கொடுக்கிறார். அதோடு மேக்னா தமிழிடம் உண்மையாகவே நீங்களும் சரஸ்வதியும் ஹஸ்பண்ட் அண்ட் வைப்பா இல்ல பிராங்க் பண்றீங்களா? என்று கேட்க, நான் ஏன் பிளான் பண்ண போறேன் சரஸ்வதி தான் என்னுடைய வைஃப் சரஸ்வதி பெயர் தான் கம்பெனியில் இருக்கிறது அதோடு எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று தமிழ் பேச இதைக் கேட்டு அதிர்ச்சியான கமலா நமச்சி இடம் எதற்காக அப்போ தமிழுக்கு கல்யாணம் ஆகல என்று பொய் சொன்னா என்று அதட்டி கேட்க,, அதற்கு நமச்சி நான்தான் பொய் சொன்னேன்.. என்று பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications