அடி தாங்க முடியாமல் உண்மையை உளறிய பரமு..ஸ்டேஷனில் ரோகிணி கொடுத்த அதிர்ச்சி..தமிழுக்கு தெரிந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 9ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் சரஸ்வதியை வார்டன் கொடுமைப்படுத்துவதற்கு காரணம் அர்ஜுன்தான் என்பதை தெரிந்து கொண்ட தமிழ் அர்ஜுனை அடித்து வண்டியில் கடத்தி கொண்டு போகிறார்.
ஆனால் அதைப் பார்த்த நபர் ராகினி இடம் போட்டுக் கொடுக்க ராகினி போலீஸிடம் தமிழை அரெஸ்ட் செய்ய சொல்கிறார். அதே நேரத்தில் தமிழ் அடித்த அடி தாங்க முடியாமல் பரமு மேக்னாவை கொலை செய்தது யார் என்ற உண்மையை உளறி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தமிழும் நமச்சியும் சரஸ்வதி ஜெயிலில் அனுபவிக்கும் சித்திரவதைகளை பற்றி பேசிக்கொண்டு வருகின்றனர். அப்போது எதிரே வரும் அர்ஜுனும் பரமுவும் சரஸ்வதியின் நிலைமையை சொல்லி கிண்டல் செய்கின்றனர். இதனால் சரஸ்வதியை வார்டன் கொடுமை படுத்துவதற்கு காரணம் அர்ஜுன்தான் என்று புரிந்து கொண்ட தமிழ், அர்ஜுன் மற்றும் பரமுவை போட்டு அடித்து விளாசி எடுக்கிறார்.
அதோடு அர்ஜுனை தன்னுடைய காரின் டிக்கியில் ஏற்றி கடத்திக் கொண்டு போகிறார். இதை எல்லாம் தெருவில் போகும் ஒரு நபர் பார்த்து ராகினியிடம் போட்டுக் கொடுக்கிறார். மறுபக்கத்தில் அர்ஜுன் மற்றும் பரமுவை கட்டி வைத்து தமிழும் நமச்சியும் போட்டு அடித்து துவைக்கின்றனர் அப்போது பரமு அடி தாங்க முடியாமல் மேக்னா இறந்த இடத்தில் கிடந்த கண்ணாடி துண்டு என்னுடையதுதான்.

ஆனால் நாங்க அவரை கொலை செய்யல என்று அது கொலை செய்தது யார் தெரியுமா என்று உண்மையை சொல்ல வர அந்த நேரத்திற்குள் ராகிணி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலீஸ் இடம் என்னுடைய கணவரை என்னோட தமிழ் அண்ணன் கடத்திக் கொண்டுட்டு போயிட்டாரு என்று கம்ப்ளைன்ட் கொடுத்து போலீசை கூட்டிக்கொண்டு அந்த இடத்திற்கு சரியாக வந்து விடுகிறார்.
பரமு உண்மையை சொல்வதற்குள் போலீஸ் வந்து விட்டதால் அர்ஜுன் இந்த முறையும் தப்பித்து விடுகிறார். அதோடு ராகினி முன்பு மீண்டும் தான் நல்லவன் என்பது போல நாடகமாடுகிறார். ராகினி உன்னுடைய அண்ணன் எப்படி அடித்திருக்கிறார் என்று பார் என்று மேலும் ராகினியை ஏற்றி விட ராகினி கோபத்தில் வழக்கம் போல கத்தி கொண்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து போலீஸ் எல்லோரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகின்றனர்.

அங்கு தமிழ் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்று ராகினி சொல்ல அதற்கு அர்ஜுன் வேண்டாம் அவருடைய நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாரு சரஸ்வதி போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதால்தான் இவரு இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார். அதனால் நாம இவரை மன்னித்து விடலாம் என்று பெருந்தன்மையாக இருப்பது போல ராகினியிடம் நடிக்க போலீஸ் தமிழை வார்னிங் கொடுத்து வெளியே அனுப்புகிறது.
போலீஸ் ஸ்டேஷனில் நின்றபடி தமிழும் நமச்சியும் புலம்பி கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த பரமு நாங்க கொலை பண்ணல கொலை பண்ணுனது வேற ஆளுன்னு சொன்னானே அப்போ இவங்க இல்லனா அது யாருன்னு நாம கண்டுபிடிக்கணும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இனி அடுத்ததாக மேக்னாவின் மாமா கலியமூர்த்தி மீது தமிழுக்கு சந்தேகம் வந்து அவருடைய நடவடிக்கைகளை கவனித்தால் உண்மை வெளியே வந்து விடும்... என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications