அர்ஜுன் பிளான் தெரியாமல் தமிழ் செய்த செயல்.. கண்ணீர் வடிக்கும் கோதை.. ராகினி இப்படி மாறிட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் அர்ஜுன் ஊருக்கு கிளம்பி போனதும் ராகினியை தமிழ் கடத்திக் கொண்டு வந்திருக்கிறார்.
அதோடு ராகினியின் பிறந்த நாளுக்காக புது மருத்துவமனை ஒன்றை தமிழ் பரிசளித்திருக்கும் நிலையில் தன்னுடைய அண்ணனின் அன்பை பார்த்து ராகினி மெய் சிலிர்த்து போயிருக்கிறார்.

அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகினி அர்ஜுன் சொன்ன பொய்யை நம்பி தமிழ் மீது கோபப்படுகிறார். அதாவது அர்ஜுன் சரஸ்வதியின் உடல்நிலை இவ்வளவு மோசமாவதற்கு காரணமாக வார்டன் இருந்த நிலையில் வார்டனுக்கு யார் பணம் கொடுத்து அப்படி நடந்துகொள்ள சொன்னார்களோ அவர்களை ஜெயிலில் தூக்கி வைக்காமல் விடமாட்டேன் என்று சொன்னதை வைத்து,
உங்க அண்ணன் கலிவரதனை அடித்து நான் தான் மேக்னாவை கொலை செய்தேன் என்று சொல்ல வைத்து என்னை ஜெயிலில் தூக்கி வைத்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அர்ஜுன் சொன்னதை நம்பி ராகினி தமிழ் வீட்டிற்கு சென்று தமிழுடன் சண்டை போட்டுக் கொண்டு வந்து இருக்கிறார்.
இப்படியான நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் ராகினியை வீட்டு வாசலில் வைத்து தமிழும் நமச்சியும் முகமூடி அணிந்தபடி கடத்திக் கொண்டு வருகின்றனர். பிறகு தமிழ் புதியதாக வாங்க இருக்கும் வீட்டில் ராகினிக்காக கோதை மருத்துவமனை என்று ஒரு ஹாஸ்பிடல் திறந்து இருக்கின்றனர்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான ராகினி தன்னுடைய அண்ணனை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார். ஏற்கனவே ராகினி வெளியே வேலைக்கு செல்லக்கூடாது, தனியாக ராகினி வேலை பார்த்தால் இன்னும் நிறைய அவளுக்கு தெரிய வந்துவிடும். அப்போ நம்மிடம் கேள்வி கேட்பால் என்று பிளான் போட்டு தான் அர்ஜுன் ராகினியிடம் நீ ஒரு கம்பெனிக்கு ஓனர் நீ பல பேருக்கு சம்பளம் கொடுக்கிறா.. நீ இன்னொருத்தங்க கிட்ட வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்.
இப்படியான நிலையில் இப்போது தமிழ் புதியதாக மருத்துவமனை கட்டிக் கொடுத்திருக்கும் நிலையில் இனி இதை வைத்து அர்ஜுன் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விகள் எழுகிறது. அர்ஜுன் மூன்று நாட்களுக்கு அவசரமாக ஊருக்கு போயிருக்கும் நிலையில் அதற்குள் ராகினிக்கு மருத்துவமனை கிடைத்திருக்கிறது. இதனால் வந்ததும் அர்ஜுன் இதை வைத்து பிரச்சனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் அர்ஜுன் ஜெயிலில் சரஸ்வதியை கொடுமை செய்த வார்டனை சமாளிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தார். இதனால் ராகினி குடும்பத்திற்கு தெரியாமல் என்ன வேலை செய்வதற்காக அர்ஜுன் கிளம்பி போயிருக்கிறார் என்று பல்வேறு கேள்விகள் எழும்பி வருகிறது. அடுத்த வாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications