Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்போ அர்ஜுன் குடும்பத்தின் முன்பு ராகினி போட்டது நாடகமா? இப்படி ஆகும்னு நினைக்கலையே! செம டூவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 8ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் நடேசன் புது வீடு வாங்க வேண்டும் என்று சொன்ன காரணத்திற்காக தமிழ் மிகப்பெரிய ஒரு வீட்டை வாங்கி எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதே நேரத்தில் அர்ஜுனை தமிழ் போலீசில் பிடித்துக் கொடுக்கப் போகிறார் என்று சொன்னதற்காக கோபத்தில் இருந்த ராகினி மீண்டும் தன்னுடைய அண்ணன் குடும்பத்தினருக்காக எதிர்பாராத செயலை செய்து இருக்கிறார். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

tamilum saraswathiyum serial march 8th episode and promo full update

அந்த வகையில் எபிசோடின் ஆரம்பத்தில் தமிழ் புது வீடு வாங்குவதற்காக பில்டிங் காண்ட்ராக்டரை வந்து பார்க்க அவர் ஒரு வீட்டை காட்டுகிறார். அந்த வீடு தமிழுக்கு ரொம்ப பிடித்து விடுகிறது. அதை பார்த்ததும் இங்க ஒரு ஆபீஸ் கூட நடத்தலாமே என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு அந்த வீட்டின் டாக்குமெண்டை கொடுத்தீங்கன்னா பேங்க்ல கொடுத்து எவ்வளவு லோன் கிடைக்கும் என்று விசாரிக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து நமச்சி அந்த வீட்டை பார்த்து இவ்வளவு பெரிய வீடு நமக்கு இப்ப தேவையா? என்று கேட்க அதற்கு தமிழ் கண்டிப்பா தேவை என்று சொல்லி விடுகிறார். அதைத் தொடர்ந்து கார்த்திக்கும் அதையே கேட்கிறார். இவ்வளவு பெரிய வீடு நமக்கு தேவையா என்று அவரும் கேட்க அதற்கும் தமிழ் அதே பதிலை சொல்கிறார். அதைத் தொடர்ந்து வீட்டில் எல்லோரும் பெரிய வீடு வாங்குவது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

tamilum saraswathiyum serial march 8th episode and promo full update

அப்போது நடேசன் இவ்வளவு பெருசா வீடு வாங்கணுமா என்று கேட்க அதற்கு தமிழ் நீங்க ஆசைப்பட்டுட்டீங்கல்ல கண்டிப்பா வாங்கணும் என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் கோதை ராகினி கிட்ட இந்த விஷயத்தை சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா என்று சொல்லி ராகினிக்கு ஃபோன் பண்ணுகிறார். ஆனால் மூன்று முறை போன் பண்ணிய பிறகும் ராகினி போனை எடுக்கவில்லை.

இதனால் கோதை அபிக்கு போன் பண்ணி வீடு வாங்க போற விஷயத்தை சொல்கிறார். உடனே அபி உனக்கு அம்மா போன் பண்ணாங்கலாமே நீ எடுக்கலையா என்று ராகினியிடம் கேட்க அதற்கு ராகினி அவங்க கிட்ட பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பிகு பண்ணுகிறார். ஆனாலும் என்ன விஷயம் என்று கேட்கிறார். அதற்கு அபி முதலில் ராகினியை கிண்டல் செய்துவிட்டு பிறகு தமிழன்னா புது வீடு வாங்க போகிறார் என்று சொல்ல அதற்கு ராகினி சந்தோஷப்படுகிறார்.

அதோடு அந்த அட்ரஸை வாங்கி நாம போய் பாத்துட்டு வந்துடலாம் என்று பரமுனை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார். அங்கு போய் வீட்டைப் பார்த்ததும் ராகினி வீடு ரொம்ப பெருசா இருக்கு இங்கேயே ஒரு அழகா ஒரு கிளினிக் வச்சுக்கலாம். ஆனா என்னால அது இப்போ முடியாது. நான் டாக்டருக்கு படிக்காமலே இருந்திருக்கலாம். நான் படிக்காமல் இருந்தால் கூட அந்த சீட்டு இன்னொருத்தருக்கு உதவி செயலாக இருந்திருக்கும் என்று ஃபீல் பண்ணுகிறார்.

tamilum saraswathiyum serial march 8th episode and promo full update

அந்த நேரத்தில் அர்ஜுன் ஃபோன் பண்ணி எதுக்காக வீடு பார்க்க போன என்று திட்டுகிறார். அதோடு நான் அவசரமா பாம்பேக்கு போறேன்... வரதுக்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். அடுத்ததாக சரஸ்வதி தமிழிடம் நீங்க ராகினிக்கு எதுவுமே செய்ய மாட்டீங்களா? மாமா தான் ஆசைப்படுறார்ல்ல அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? என்று கேட்க அதற்கு தமிழ் நீ சொல்லிட்டல்ல நான் பார்த்துக்கிறேன் என்று கூறிவிடுகிறார்.

அடுத்தநாள் காலையில் ராகினிக்கு பிறந்தநாள் என்பதால் அர்ஜுன் குடும்பம் எல்லோரும் வாழ்த்துகின்றனர். அதோடு ராகினி தன்னுடைய அம்மா வீட்டில் இருந்து யாருமே வாழ்த்தவில்லையே என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எல்லோரும் கோவிலுக்கு போவதற்காக வீட்டுக்கு வெளியே வரும்போது ராகினியை இரண்டு பேர் கடத்திக் கொண்டு போகிறார்கள். அப்போது ராகினி என்னுடைய அண்ணனுக்கு தெரிஞ்சா உங்க நிலைமை என்ன ஆகும்னு தெரியுமா? என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+