1982 இல் ஓம் சக்தி படத்தில் நடித்த போது "அந்த" நடிகர் சொன்ன ஜோதிடம்.. தமிழா தமிழாவில் பகிர்ந்த நளினி
சென்னை: ஓம் சத்தி என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த போது நளினி நடந்த சில சம்பவங்களை அவர் தமிழா தமிழாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஜய் டிவியில் நீயா நானாவை போல் ஜீ தமிழில் தமிழா தமிழா எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை கரு பழனியப்பன் நடத்திய நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை கடந்த சில வாரங்களாக பத்திரிகையாளர் ஆவுடையப்பன் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் சினிமா, சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த வாரம் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் வெர்சஸ் சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

அதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மாரிமுத்து, நடிகை நளினி, விஜே அர்ச்சனா, ஜானகி, சுபத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் மாரிமுத்து ஜோதிடத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். தனக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இல்லை என்றார். ஜோதிடம் உண்மை என்றால் கொரோனா வந்த போது ஏன் எந்த ஜோதிடரும் அலர்ட் செய்யலை.
சென்னை பெருவெள்ளம் வந்த போது ஏன் எதையும் சொல்லலை. தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகமே இல்லை என சொன்னீர்களே இப்போது முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்கள் என சரமாரியாக கேள்விகளை கேட்டார். அதற்கு ஜோதிடர்களும் தங்கள் பதிலடிகளை கொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் நடிகர் மாரிமுத்து ஆதி குணசேகரனாகவே மாறி ஜோதிடர்களை ஒருமையில் பேசியது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த நிலையில் நடிகை நளினி கூறுகையில் ஓம் சக்தி என்ற திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது நடிப்பதில் எனக்கு விருப்பமில்லாமல் இருந்தேன். ராஜராஜ சோழன் என்ற நடிகர் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது என் அம்மாவிடம் வந்து நளினி என்ன ராசி, நட்சத்திரம் என கேட்டார்.
அவர் நியூமராலஜி, நேமாலஜி, ஜாதகம் எல்லாத்தையும் பார்த்துவிட்டு சொன்னார். நீ வேண்டாம் என சொன்னாலும் உனக்கு சினிமா சாப்பாடுதான். நீ கல்யாணம் செய்துகிட்டு போனாலும் திருப்பி ஓடி வந்துடுவே. நீ ஔவையார் மாதிரி இருந்தாலும் நடிக்கணும். நீ கே.ஆர்.விஜயா மாதிரி நிறைய சாமி வேஷம் போடுவேன்னு சொன்னார். எனவே அவரை நான் நம்பித்தானே ஆக வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நடிகை நளினி தன்னுடன் நடித்த ராமராஜனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் சில ஆண்டுகள் சுமூகமாக சென்ற மண வாழ்க்கை ஒரு கட்டத்தில் இவர்கள் பிரியும் சூழலுக்கு தள்ளியது. தற்போது வரை இருவரும் பிரிந்தே இருக்கிறார்கள். ஆனாலும் நளினிக்கு ராமராஜன் மீது காதல் அப்படியே இருப்பதாக பல தருணங்களில் தெரிவித்துள்ளார்.
இருவரும் தங்கள் மகன், மகள் திருமணத்தின் போது பாத பூஜை செய்ய ஒன்றாக நின்றனர். அது போல் சிங்கப்பூரில் இருந்து பேரன் ராமராஜனுக்கு ஒரு பாட்டை வாசித்து டெடிகேட் செய்தார். இப்படியாக இவர்களது வாழ்க்கை உள்ளது. ராமராஜன் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். நளினி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications