பேய் இருக்குதா இல்லையா.. பொட்டுன்னு ஒரு கேள்வி.. பொளேர் விவாதம்.. தமிழா தமிழா!
சென்னை: பேய், பூதம், பில்லி சூனியம், ஏவல் என்று பல விஷயங்கள் மீதான நம்பிக்கை மனிதர்களை ஆட்டுவிக்குது. இதை மூட நம்பிக்கை என்று பலரும் சொன்னாலும் அதை மட்டுமே யாரும் எடுத்துக் கொள்வதில்லை.
இதை சாதாரணமானவர்கள் உரத்த குரலில் சொல்லிவிட முடியாது. அதை இந்த சமுதாயம் ஏத்துக்காது. ஆனால், விவேக் போன்ற பிரபலங்கள் காமெடியாக சந்தடி சாக்கில் இதை காட்சியாகவும் வைத்து இருக்கிறார்கள்.
பேய் இருக்குதா இல்லையான்னு நடிகர் வடிவேலு சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டாரிடம் பொட்டில் அடிச்சாப் போல ஒரே வரியில் கேட்டு இருப்பார். இருந்தாலும், அந்த கேள்விக்கு என்ன பதில் கிடைத்தது?

தமிழா தமிழா
ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா டிபேட் நிகழ்ச்சியை இயக்குநர் கரு.பழனியப்பன் நடத்தி வருகிறாரா. வாரா வாரம் ஞாயிற்று கிழமைகளில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. வாரத்திற்கு ஒரு சுவாரஸ்ய விஷயம் எடுத்துக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

திகில் பயம்
ஜாலியான விஷயங்கள், சுவாரஸ்யமான விஷயங்களென்று இருந்தாலும், ஆரம்பமே படு அமர்க்களம் என்று இந்த வார ப்ரோமோ ஒன்று வெளியிட்டு வருகிறது ஜீ தமிழ் டிவி. அதாவது இந்த வாரம் பில்லி சூனியத்தில் கை தேர்ந்தவர்கள் சோதனைக்கு தயார்.. என்றும் ஒரு திகிலான அனுபத்திற்கு தயார் ஆகுங்கள் என்று நம்மையும் தயாராக சொல்லி ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.

ஞாயிறு இரவு
பில்லி சூனியயத்தால் என்னவெல்லாம் பண்ண முடியும். நீங்க என்னவெல்லாம் பண்ணி இருக்கீங்க என்கிற கரு.பழனியப்பன் கேள்விக்கு ஆளையே காலி பண்ணலாம் என்று ஒருத்தர் அதிரடியா பதில் சொல்லி பார்ப்பவர்களை திகிலாக்கி இருக்காருங்க. இன்னொருத்தர் சொல்றார் எத்தனை லட்சம் வேணும்னாலும் நான் கட்டறேன்..என்மேலே ஏவல் விட சொல்லுங்க என்று சவாலாக.

பார்க்கலாம் வீடியோ
வீடியோவை பார்த்துட்டு வந்துடலாம்னு கரு.பழனியப்பன் சொல்ல, வீடியோவில் ஒருத்தர் சொல்றார்.. காலடி மண்ணை மட்டும் எடுத்துட்டு வாங்க.பில்லி சூனியம் வைப்பதில் 7 நாட்களில் கை கால் சரி இல்லாமல் போகலாம் , புத்தி பேதலிச்சு போகலாம்..ஆளே கூட இல்லாமல் போகலாம் என்று கூறும் வீடியோ அது.
7 நாட்களுக்குப் பிறகு என்ன நடந்தது? ஜீ தமிழ் டிவியில் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு பாருங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications