எப்படி இந்த வார்த்தை சொல்லலாம்? வளர்ப்பு சரியில்ல.. பெண்ணை கதறவிட்ட வடிவுக்கரசி, சத்திய பிரியா
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் நாத்தனார் VS அண்ணி என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வடிவுக்கரசி மற்றும் நடிகை சத்யபிரியா இருவரும் கலந்து கொண்டனர். அந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக இந்த மாதிரி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிலர் கலந்து கொண்டு பேசுவதை பார்க்கும் போது பலருக்கும் வேடிக்கையாக இருக்கும். இவர்கள் நிஜத்தில் இப்படி பேசுகிறார்களா? அல்லது கண்டன்டுக்காக இப்படி பேசுகிறார்களா? என்று யோசிக்க தோணும். காரணம் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் நாம் பேசும் வார்த்தை சரிதானா? பலபேர் பார்க்கும் நிகழ்ச்சியாக இருக்கும் நிலையில் இதில் நாம் இப்படி பேசுவதால் நமக்கு ஏதுன்னு பிரச்சனை வருமா? என்று யோசிக்காமல் பலர் பேசி விடுகிறார்கள்.

அந்த மாதிரி தான் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூட ஒரு பெண் பேசியிருக்கிறார். அதாவது அந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து காரசாரமாகவே போய்க்கொண்டிருந்தது. அதில் அண்ணிமார்கள் எல்லோரும் எங்களுடைய நாத்தனார்கள் எங்களை கொடுமைப்படுத்துகிறார்கள் அடுத்த மாமியார்கள் போல நடத்துகிறார்கள் என்று கம்ப்ளைன்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சில நாத்தனார் நாங்கள் இப்படித்தான் இருப்போம்.
இதுதான் எங்களுக்கு கெத்து என்று வீம்புக்கு பெருமை பேசி என்னடா இவங்க இப்படி பேசுறாங்க என்று பலரையும் முகம் சுளிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த மாதிரி தான் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் ஆவுடையப்பன் உங்க அண்ணன்மார்கள் கல்யாணத்துக்கு முன்னாடி எந்த விஷயத்தில் கெத்தாக இருந்தார்கள்? ஆனால் இப்போது அந்த கெத்து காணாமல் போனது எந்த விஷயத்தில் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை சொல்லுங்க என்று கேட்டார்.
அதற்கு நாத்தனார் அணியில் இருந்த ஒரு பெண், எங்க அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி சாப்ட தட்டை கழுவ மாட்டான்... தண்ணி கூட எடுத்து குடிக்க மாட்டான். ஆனால் இப்போ எங்க அண்ணி வந்த பிறகு சமையல் செய்கிறான். பாத்திரம் கழுவி வைக்கிறான். வீட்டு வேலை எல்லாம் செய்கிறான் என்று புலம்பி கொண்டு இருக்க அதற்கு இந்த வார இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை வடிவுக்கரசி மற்றும் சத்திய பிரியா இருவரும் வந்திருந்த நிலையில் இவர்கள் இருவருமே அந்த பெண்ணை வாய் அடைக்க வைத்திருக்கிறார்கள்.
அதாவது நாத்தனார் பெண் பேசிய வார்த்தையை கேட்டதும் கோபமான வடிவுக்கரசி நான் உங்க அணியில் இருக்கிறேன். ஆனால் என்னுடைய சப்போர்ட் உங்களுக்கு கிடையவே கிடையாது. நீங்க உங்க அண்ணன் எந்த வேலையும் செய்யல இப்போ பொண்டாட்டிக்கு வேலை செய்கிறான்னு சொல்லுறீங்க. இது தவறான வார்த்தை. உங்க அண்ணனை நீங்க அப்போ சரியா வளக்கல. இப்போ அந்த பொண்ணு பாசத்தால தனக்காக சின்ன வேலைகளை செய்ய பழக்கப்படுத்தி இருக்காங்க.
நீங்க தவற விட்டதை அவங்க சரியா எடுத்து இருக்காங்க. ஒரு ஆண் வீட்டு வேலை செய்கிறது கேவலம் அது செய்ய வேண்டாம் என்று அலட்சியம் உங்களிடம் இருந்து இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இல்லை அதனால அந்த பொண்ணு தன்னுடைய பாசத்தால் தன்னுடைய கணவரை தனக்கு வேலை செய்ய வச்சிருக்காங்க அவ்வளவுதான். ஆனால் நீங்க எப்படி அண்ணன் வேலை செய்யக்கூடாது என்று சொல்லலாம் என்று வடிவுக்கரசி கேள்வி கேட்டிருக்கிறார்.
அப்போது எதிர் அணியில் இருந்த நடிகை சத்திய பிரியா உங்க அண்ணன் ஆரம்பத்தில் இருந்ததற்கு இன்னொரு பெயர் என்றால் சோம்பேறி தனம் என்று சொல்ல, அதற்கு அந்த நாத்தனார் பெண் எங்க அண்ணனை பெற்றெடுத்த அம்மாவுக்கு அவன் வேலை செய்து கொடுக்கல, அவன் கூட பிறந்த சகோதரிக்கு எனக்கு எதுவும் வேலை செஞ்சு தரல ஆனா பொண்டாட்டிக்கு மட்டும் எப்படி வேலை செஞ்சு கொடுக்கலாம் என்று மீண்டும் விதண்டாவாதம் பேசுகிறார்.
அதற்கு சத்யபிரியா உங்களுக்கு அந்த சாமர்த்தியம் பத்தல, இன்னைக்கு உங்க அண்ணன் உன் பொண்டாட்டிக்காகவும் குழந்தைகளுக்காகவும் வேலை செய்றாங்கனா அது பெரிய விஷயம். முடிஞ்சா நீங்க உங்க அண்ணிக்கு உங்க அண்ணன் செஞ்சது போல உங்க கணவரிடம் நீங்க வேலை வாங்க கத்துக்கோங்க... உங்களுக்கு உங்க கணவர் வேலை செஞ்சு தந்தா சந்தோஷம், ஆனால் உங்க அண்ணன் அவன் மனைவிக்கு செஞ்சு கொடுத்தா அது உங்களுக்கு கஷ்டமா இருக்கா? என்று கேள்வி கேட்கிறார் .
அதற்கு அந்தப் பெண் தன்னுடைய அண்ணியிடம் ரொம்ப சந்தோஷம் நீங்க எங்க அண்ணனை மாத்துனதுக்கு என்று சொல்ல அதை கேட்டு வடிவுக்கரசி நீங்க இப்ப பேசுறது அப்படியே மனம் முழுக்க கோபத்தை வச்சிட்டு வெளியே பல்ல கடிச்சுட்டு பேசுற மாதிரி இருக்கு என்று சொல்ல அதற்கு அந்த நாத்தனார் இல்ல முதல்ல நான் வேற மாதிரி நினைச்சுட்டு இருந்தேன்.
இப்போ இவங்க சொன்ன மாதிரி எங்க அண்ணன் மாறினதுக்கு நீங்கதான் காரணம்னா ரொம்ப சந்தோசம் என்று மீண்டும் அந்த பொண்ணு பேச அதற்கு வடிவுக்கரசி உங்க அண்ணன் மாறினதுக்கு அந்த பொண்ணு மட்டும் எனக்கு காரணம் இல்லமா உங்க அண்ணன் அந்த பொண்ணு மேல வச்சிருக்கிற காதல் நம்பிக்கை தான் என்று சொல்ல அதற்கு அந்த நாத்தனார் சரி என்று அரை மனதோடு ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இதை பார்க்கும் போது இதை வைத்து இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்க போகிறது என்பது தெரிகிறது.
-
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்!












Click it and Unblock the Notifications