OTT App: வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தங்களா...இல்லை வெயிலுக்கு காட்டாம...!
மும்பை: ஆடுகளம் படத்தின் நாயகி டாப்ஸி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா... இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களான்னு நம்ம தமிழ் படங்களில் கொண்டாடப்பட்டவர்.
இவர் தப்பாட் இந்தி படத்தில் புரட்சியான பெண்ணாக நடித்து இருக்கார். இந்த படம் பிப்ரவரி 28ம் தேதி தியேட்டர்களில் வெளியான அடுத்த சில நாட்களில் கோவிட் 19 தொற்று காரணமாக முதலில் தியேட்டர்கள் லாக்டவுன்.
இதனால் பிப்ரவரியில் வெளியான படங்கள் நிலை கேள்விக்குறியானது...இப்படியான படங்களை ஓடிடி தளங்கள் உரிமம் பெற்று தங்கள் ஆப் மூலம் ஒளிபரப்பு செய்து வருகினறன். அதில் ஒன்றுதான் டாப்ஸி நடித்த தப்பாட்.

தப்பாட் கதை
தப்பாட் படத்தில் நாயகியாக நடித்து இருக்கார் டாப்ஸி. ஆடுகளம் படத்தில் பார்த்ததற்கும். இப்போது பார்ப்பதற்கும் முற்றிலும் வேறு பெண் போல கட்சி தருகிறார் டாப்ஸி. திருமணம் ஆன சில நாளில் கணவர் கை நீட்டி அடித்துவிடுகிறார். இதை எதிர்பார்க்காத ஒரு புத்தம் புது மனைவி எப்படி வெகுண்டெழுந்து உரிமைக்காக போராடுகிறாள் என்பதுதான் கதை.

மே 1ம் தேதி
தப்பாட் படத்தை அமேசான் பிரைம் வீடியோ மே மாதம் 1ம் தேதி தனது ஓடிடி இயங்கு தளத்தில் ஒளிபரப்பு செய்ய அனைத்து உரிமைத்தையும் பெற்று இருக்கிறதாம். இந்த லாக்டவுன் நேரத்தில் மே 1 உழைப்பாளர் தினத்துக்கான பரிசாக இந்த படம் இருக்கும் என்று அமேசான் ப்ரைம் வீடியோ தளம் அறிவித்து இருக்கிறது.

ஆணாதிக்கம் சமூகம்
ஆணாதிக்க சமூகத்தை சார்ந்த ஒருவனை கணவனாக அடைந்து, அதன் மூலம் சொல்ல முடியாத துயரம், கஷ்டம் என்று அனுபவித்து வருகிறார் டாப்ஸி. கயிற்றால் கட்டி போட்டு இம்சை படுத்தும் கணவன்... இவனிடம் இருந்து விவாகரத்து கோரும் டாப்ஸிக்கு விவாகரத்து கிடைத்ததா?

ஆணாதிக்கம் அல்ல சைக்கோ
இப்போது புதிதாக திருமணம் செய்துக்கொண்ட ஆண், தனது மனைவியை இப்படி துன்புறுத்தினால் அவனை யாரும் ஆணாதிக்க சமூகத்தை சார்ந்தவன் என்று சொல்வதில்லை. ஒட்டுமொத்தமாக சேர்த்து ஒரே பெயர் சைக்கோ என்று அழைக்க ஆரம்பித்து விடுவார்கள். படம் வெற்றியா தோல்வியா என்று நிர்ணயிக்க முடியாத நிலையில் லாக்டவுன். அமேசான் பிரைம் வீடியோவில் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications