‛‛கணவரை என்னுடன் சேர்த்து வையுங்க’’.. 2வது திருமணம் செய்த சின்னத்திரை நடிகை தீபா கோர்ட்டில் மனு
சென்னை: தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனக்கூறி 2வது திருமணம் செய்த பிரபல சின்னத்திரை நடிகையான தீபா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபா. இவர் அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமாகி உள்ளார். இவருக்கு திருமணமான நிலையில கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு தீபா 2வது திருமணம் செய்து கொண்டார். கணேஷ் பாபு என்பவரை அவர் 2வது திருமணம் செய்தார்.
தீபாவும், கணேஷ் பாபுவும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். கணேஷ் பாபுவும் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது அவருக்கும், தீபாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாகி திருமணத்தில் முடிந்தது.
திருமணத்துக்கு பிறகு கணேஷ் பாபுவும், தீபாவும் தனியே வசித்து வந்துள்ளனர். தீபாவின் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் கணஷ் பாபு தற்போது தீபாவை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தீபா சார்பில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அந்த மனுவில், ‛‛நானும், எனது கணவர் கணேஷ் பாபுவும் காதல் திருமணம் செய்தோம். எனது கணவரின் சகோதரர் ராமகிரி வாசன் மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் சாதி ரீதியாக என்னை இழிவுப்படுத்தினர். இதனால் கணவருக்கும், எனக்கும் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது அவர் பிரிந்து போய் உள்ளார். குடும்பத்தினரின் அழுத்தத்தால் பிரிந்துள்ள கணவர் என்னுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறார். இதனால் எங்களை சேர்த்து வைக்க வேண்டும்’’ என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications