பிரபல நடிகர் விக்னேஷ் ஞாபகமிருக்கா.. "எசகுபிசகா" சிக்கிட்டாரே.. **சாதி வெறி.. ஆதாரத்துடன் வந்த விசிக
சென்னை: பிரபல நடிகர் விக்னேஷை ஞாபகம் இருக்கா? அவரது பேசியதாக, ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைகேட்டு தமிழக மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
90களில் கொடி கட்டி பறந்த ஹீரோக்களில் மிக முக்கியமானவர் விக்னேஷ்.. கிராமத்து கதைகள் என்றாலே, நம் கண் முன்னே வந்துநிற்கும் யதார்த்தமான உருவம்.. மிகைப்படுத்தப்படாத நடிப்பு.. மனதில் வந்து ஒட்டிக்கொள்ளும் இயல்பான தோற்றம்.
இவையெல்லாம்தான் விக்னேஷை சின்னத்தாயி படத்திலேயே தமிழக மக்களின் மனதில், விரைவாய் கொண்டுபோய் சேர்த்தது.. தாய்க்குலங்கள் மத்தியில் பேராதரவினை பெற்றார்...

கிழக்கு சீமையிலே: தொடர்ந்து கிழக்குச்சீமையிலே, நாடோடி மன்னன், மண்ணுக்கு மரியாதை, என்னைத் தாலாட்ட வருவாளா, போன்ற படங்களில் தனக்கான இடத்தையும் எட்டிப்பிடித்துவிட்டார். ஆனால் அதை தக்கவைக்க தவறிவிட்டார்.
திடீரென விக்னேஷ் மாயமானார்.. மறுபடியும் தயாரிப்பாளராக , வில்லனாக சினிமாவிற்குள் என்ட்ரி தந்துள்ளதாக தெரிகிறது.. ஆனால் இவரை பற்றின செய்திகள் மீடியாவில் அவ்வளவாக வராமலேயே இருந்த நிலையில், விக்னேஷை சினிமாவில் காணமுடிவதில்லையே என்ற கேள்வி எழுந்தபோது திடீரென, தொழிலில் ஏற்பட்ட ஏமாற்றம் என்ற புகாருடன் போலீசுக்கு ஓடினார் விக்னேஷ்.. அப்போதுதான் தமிழக மக்களின் கவனத்தை மீண்டும் பெற்றார்.
பரபரப்பு புகார்: "சதுரங்க வேட்டை" பட பாணியில் தாம் ஏமாற்றப்பட்டதாக பகீரை கிளப்பினார்.. இரிடியம் மோசடி கும்பலிடம் தானும், தன்னுடைய நண்பர்களும் ரூ.1.81 கோடி பணத்தை இழந்து விட்டோம் என்றும், அந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனுவையும் தந்தார்.. இதற்கு பிறகு விக்னேஷ் குறித்த செய்திகள் அவ்வளவாக வெளிவரவில்லை.
இந்நிலையில், இவர் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.. சாதி வெறியை உமிழ்ந்ததாக கூறி, விசிக உள்ளிட்ட தரப்பினர் இவரை கடுமையாக சாடி வருகிறார்கள்..
வன்னி அரசு: விசிகவின் வன்னி அரசு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், நடிகர் விக்னேஷ். பல படங்களில் நாயகனாக, துணைப்பாத்திரங்களாக நடித்தவர். இப்போது எந்த படங்களும் இல்லாததால் ஏதோ வணிகம் செய்கிறார் போல. எவ்வளவு சாதி வெறியோடு பேசுகிறார் பாருங்கள். தமிழ்நாடு காவல்துறை" என்று குறிப்பிட்டு தமிழ்நாடு போலீசுக்கும் இந்த ட்வீட்டை டேக் செய்திருக்கிறார்..

ஆடியோ: அத்துடன் விக்னேஷ் பேசியதாக ஒரு ஆடியோவையும் அதில் இணைத்துள்ளார்.. அந்த ஆடியோவில், பிசினஸ் தொடர்பாக, விக்னேஷ் யாரோ ஒருவருடன் பேசுவதாக தெரிகிறது.. அப்போது, ஏற்பட்ட கருத்து மோதலில், குறிப்பிட்ட இனத்தை குறிப்பிட்டு, கொச்சையாக அந்த நபரை இழிவுபடுத்தி திட்டுவதும் அந்த ஆடியோவில் கேட்க முடிகிறது.. இதை பேசியது விக்னேஷ்தானா? என்ற அதிர்ச்சி கேள்வியும் அனைவருக்கும் எழுகிறது.
"சின்னத்தாயி படம் மிஸ் ஆனதும், தற்கொலை செய்ய முடிவு செய்திருந்தேன்" என்று கண்ணீருடன் பலமுறை பேட்டிகளில் சொன்ன விக்னேஷா இப்படியெல்லாம், பேசியது என்ற ஆச்சரியமும் கிளம்புகிறது.. இந்த ஆடியோ இணையத்தில் வைரலாவதுடன், விக்னேஷ் மீதான கடும் எதிர்ப்புகளும் பதிவாகி வருகின்றன..
சாதி வெறி: தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் விக்னேஷை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.. இதே நடிகர் தான் இரிடியம் வாங்குறேன் என்று பல கோடி ரூபாய் ஏமாந்தான், ஜாதி வெறி பேச்சுக்கு மட்டும் கொறச்சல் இல்லை என்றெல்லாம் நெட்டிசன்கள் திரண்டு வந்து கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்..!!!
போராட்டம்: விக்னேஷ்ஷை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது இந்த விவகாரத்தில் கூடுதல் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.. "இன்னும் பாரதி, பெரியார்கள் பிறக்க வேண்டும்.. வெறும் நூறு ரூபா பணத்திற்காக ஒரு ஏழைத் தொழிலாளியை ஜாதியை கூறி இப்படி அவ மரியாதையாக பேசுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்" என்ற கூக்குரல்களும் வெடித்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications