Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணம் பண்றியா.. இல்லை போலீஸ் ஸ்டேஷன் போகவா.. சமையல்கார நடிகரை.. மிரட்டிய பெண்? அவசர திருமணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் துறையில் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாம் திருமணம் செய்துள்ளார். அவரின் இந்த திருமணத்திற்கு பின் வேறு ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

நடிகரின் இரண்டாம் திருமணம்: சட்ட சிக்கலும் சர்ச்சையும்

நடிகருக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ளனர். சில காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும், இன்னும் விவாகரத்து பெறவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை கூட இவை மனைவியுடன்தான் இருந்துள்ளார். புகைப்படங்களை எல்லாம் கூட எடுத்துள்ளார். ஆனால் திடீரென மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு தனியாக வாழ சென்றுவிட்டார்.

gossips

அதன்பின் மனைவியை பிரிவதாக அவரிடம் கூறிவிட்டு தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், அந்த நடிகர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மேலும், அவரது இரண்டாவது மனைவி திருமணத்தின்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார், அந்த குழந்தை நடிகருடையது என்று கூறப்படுகிறது.

இரண்டாவது திருமணம் சர்ச்சை

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகரை இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது மனைவி, தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியும், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறி, திருமணம் செய்யாவிட்டால் போலீசில் புகார் அளிப்பேன் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது. நீ கல்யாணம் பண்றியா.. இல்லை போலீஸ் ஸ்டேஷன் போகவா என்று அந்த சமையல்காரர் நடிகரை அந்த பெண் மிரட்டி உள்ளார்.

இதனால் நடிகர் வேறு வழியின்றி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது. முதல் திருமணம் இன்னும் முடிவடையாத நிலையில், இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இது நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாகலாம்.

திருமணம் சட்டப்படி செல்லாது

"முதல் திருமணம் இன்னும் செயல்பாட்டில் இருந்தால், இரண்டாவது திருமணம் சட்டப்பூர்வமாக செல்லாது," என்று பிரபலங்களின் வழக்குகளை கையாளுபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் விவாகரத்து செய்யாத காரணத்தால் இந்த திருமணம் செல்லாது. நடிகரின் முதல் மனைவி இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவருக்கு இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் சில முடிவுகளை எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், நடிகர் இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்.

இந்த சம்பவம் திரைத்துறையினரிடையே வெவ்வேறு விதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையை புரிந்துகொள்ள முயல்கின்றனர். பலர், அவர் எடுத்த முடிவு தவறானது என்றும், இதன் காரணமாக அவர் சட்டரீதியாகவும், மனதளவிலும் பாதிக்கப்படலாம் என்றும் கருதுகின்றனர். கோலிவுட் வட்டாரம் இந்த சம்பவத்தை கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகரின் இரண்டாவது திருமணம் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், நடிகரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+