"சின்ன பொண்ணு அது".. எகிறிய நடிகர் ராதாரவி.. "அந்த காந்தராஜ் இன்னும் என் கண்ணுல மாட்டல.. கேட்ருவேன்"
சென்னை: மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜுக்கு, நடிகர் ராதாரவி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.. என்ன காரணம்?
எம்.ஆர். ராதா நாடக மேடைகளில் வாழ்ந்தவர்... சினிமாவைவிட நாடகங்களை நேசித்தவர்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் நடிக்காதவர்.. முகஸ்துதி விரும்பாதவர்.. முகத்திற்கு எதிராக விமர்சனம் செய்யக் கூடியவர்..
அரிதாரம்: திராவிடர் கழக போர்வாள்.. பெரியாரின் தொண்டர்.. கடைசிவரை எதற்காகவும் தன்னை சமரசம் செய்து கொள்ளாதவர்.. அதிரடி பேச்சுக்கும், துணிச்சல் பேச்சுக்கும் சொந்தக்காரர்.. யாருக்கும் பயப்படாதவர்... சிறைக்கும் சென்றவர்.. ஆனால் இவைகள் எதிலுமே அவர் அரிதாரம் பூசியதில்லை... ராதா, ராதாவாகவே வாழ்ந்து மறைந்தார்..
இப்படி பல்வேறு முத்திரைகளை பதித்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவை பற்றி, பிரபல அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் சில நாட்களுக்கு முன்பு விமர்சித்திருந்தார்..

எம்ஆர் ராதா: அதிலும், தனிப்பட்ட முறையில் ராதாவை விமர்சித்திருந்தார்.. அதாவது 3 மனைவிகளை திருமணம் செய்தாலும் கடைசி காலத்தில் கூட ஒரு சின்ன பெண்ணை கல்யாணம் செய்தவர் எம்ஆர்.ராதா.. ராதாரவி பிறந்ததெல்லாம் ஒரு விபத்துதான்.. ராதாரவி ,ராதிகா இவர்கள் பிறந்தது எல்லாம் வேஸ்ட்.. எம் ஆர் ராதாவை பற்றி பேச ராதாரவிக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை.. ராதாவியை எல்லாம் இதில சேர்க்காதீங்க" என்றெல்லாம் அந்த பேட்டியில் விமர்சனங்களை முன் வைத்திருந்தார் காந்தராஜ்.
டாக்டர் காந்தராஜின் இந்த பேச்சுக்குதான், நடிகர் ராதாரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக ஒரு சேனலுக்கு ராதாரவி அளித்துள்ள பேட்டியில் சொன்னதாவது:
பாஜக: "அவர் எங்களை பெத்துக்கிட்டாரு.. நாங்களா பெத்துக்க சொன்னோம்.. இது ஒரு கண்டுபிடிப்புன்னு என்னை விமர்சிக்கிறாங்க.. நான் பாஜகவில் சேர்ந்துட்டேனாம்.. அதுக்காக இப்படியெல்லாம் பேசறாங்க.. ராஜாராம் ஐயா அமைச்சராக இருந்தாரே, அவருடைய தம்பிதான் இந்த டாக்டர் காந்தராஜ்.. நான் பிறந்தது வேஸ்ட் என்றால், நீயும், உன் பிள்ளையும் பிறந்ததும்தான் வேஸ்ட்..
ராஜாராம் அப்பாவுக்கு, மிகவும் நெருக்கம் என்னுடைய அப்பா.. இன்னும் சொல்லப்போனால், என் அப்பாவின் கம்பெனியில் அவர் நடிகராக இருந்திருக்கிறார்.. நெருக்கம் இருக்கிறது என்பதற்காக, பொய் சொல்லக்கூடாது இல்லை? காந்தராஜுக்கு இப்படியெல்லாம் பேச பணம் தர்றாங்களான்னு தெரியல.. நான் இன்னும் அவரை நேரா பார்க்கல.. பார்த்தா நான் சும்மா விட மாட்டேன்.. யாராக இருந்தால் எனக்கென்ன?
சின்ன பொண்ணு: உண்மையிலேயே ஒருவர் நெருங்கிய நண்பர் என்றால், அவர்களின் விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது.. உன்னை நம்பிதானே எதையாவது அவர் சொல்லியிருப்பார்.. ராதாரவி சின்ன பொண்ணுகூட வந்தார்ன்னு சொல்றார்.. உனக்கென்ன வந்தது?
என்வீட்ல எல்லாரும் சாமி கும்பிடுவாங்கன்னு காந்தராஜே பேட்டியில் சொல்கிறார். அப்பறம் எதுக்கு திராவிடர் கழகம், அதுஇதுன்னு பேசிட்டு இருக்கணும்? உன் மனைவியெல்லாம் சாமி கும்பிட கோயிலுக்கு போறாங்களே.. அதையெல்லாம் நிறுத்த வேண்டியதுதானே? அந்த காந்தராஜ், எனக்கு இன்னும் மாட்டல.. நேரில் பார்த்தால் கண்டிப்பா கேட்டுடுவேன்.. ராஜாராம் தம்பி என்பதால்தான் மரியாதை தருகிறோம்" என்று காட்டமாக பேசியுள்ளார் ராதாரவி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications