எப்படி நடிக்கிறார்னு பார்க்குறேன்.. ஒல்லி நடிகருக்கு எதிராக.. பிஆர் டீமை களமிறக்கிவிட்ட நம்பர் நடிகை
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல நம்பர் நடிகை ஒருவர், சக ஒல்லி நடிகர் பற்றி அவதூறு கருத்துகளைப் பரப்ப PR குழுவை இயக்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகையும், நடிகரும் முன்னர் வெற்றிப் படங்களில் ஒரு காலத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். தற்போது இந்த உறவு தலைகீழாக மாறியுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரைவில் அந்த ஹீரோ மௌனம் கலைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகை - சக நடிகர் குறித்த சர்ச்சைகள்
தமிழ் சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் அவர். தமிழ் சினிமா மட்டுமன்றி ஹாலிவுட், பாலிவுட் படங்களில் கூட அவர் கவனம் பெற்று வருகிறார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். வலுவான நடிப்புத்திறன் மற்றும் ஒரு பெரிய ஹிந்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் தற்போது பெரிய தயாரிப்பாளர்களாலும், இயக்குநர்களாலும் கவனம் பெற்றுள்ளார். அவருக்கு நல்ல பெயர், ரசிகர் பட்டாளம் மற்றும் சர்ச்சைகள் இல்லாத நற்பெயர் இருந்து வந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.
கடந்த சில வாரங்களாக, பாலிவுட் கிசுகிசு பக்கங்கள் மற்றும் செய்தி இணையதளங்கள் அந்த நடிகரின் மனநிலை, முரட்டுத்தனமான நடத்தை மற்றும் கடந்த கால உறவுகள் பற்றி, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நடிகர் ஒரு பெரிய ஹிந்தி படத்தில் முன்னணி நடிகையுடன் ஒப்பந்தம் செய்தவுடனேயே இந்த வதந்திகள் பரவத் தொடங்கின. இது தற்செயலாக நடந்ததா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஒரு நம்பர் நடிகைதான் இந்த வதந்திகளை பிஆர் மூலம் பரப்புவதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் அவர் எப்படி நடிக்கிறார்ன்னு பார்க்கிறேன் என்று கோபத்துடன் இவர் பிஆர் செய்து வருவதாக கூறப்படுகிறது.
பிஆர் செய்யும் நடிகை
அந்த நடிகை மும்பையில் சில PR நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். பிஆர் மூலம் தனது நற்பெயரை நிலைநாட்டிக் கொள்வதில் அவர் பெயர் பெற்றவர். எனவே, அந்த நடிகருக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன.
அந்த நடிகையின் திட்டமிட்ட PR உத்தி இது என்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் கருதுகின்றனர். அவர்கள் ஒன்றாக பணியாற்றியபோது நடிகை பிரபலமானார். தற்போது அந்த நடிகர் தேசிய அளவில் பிரபலமாகி வருவதால், அவரது வெற்றியை அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. முக்கியமாக அந்த நடிகரின் பர்சனல் வாழ்க்கையை பற்றி கடுமையான விமர்சனங்களை வைக்கும் விதமாக PRஐ பரப்பி வருகிறாராம்.
மோதல் உச்சம்
துணிச்சலான, திறமையான மற்றும் வெளிப்படையான அந்த நடிகை, ஒரு காலத்தில் இந்த நடிகருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர். ஒரு திரைப்படத்தில் அவரது நடத்தைக்கு எதிராக இவர் பேசியதாக கூறப்படுகிறது. அப்போதிருந்து, இரண்டு பேருக்கும் ஆகாது என்று கூறப்படுகிறது. அந்த நடிகை சமீபத்தில் காப்பிரைட் விவகாரம் ஒன்றில் எடுத்த நிலைப்பாடு இவரை கடுப்பாக்கி உள்ளதாம். இது மூத்த நடிகருக்கு பிடிக்கவில்லை என்று திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது.
நடிகரின் டீம் மௌனம் காத்து வருகிறது, ஆனால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து, பொய்யான செய்திகளை அம்பலப்படுத்தி அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பெயர்களும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அந்த இரண்டு பிரபலங்கள் யார் என்பது திரையுலகில் அனைவருக்கும் தெரியும்.












Click it and Unblock the Notifications