Television Channels: ஒரு சீரியல் ஹிட்டாச்சுன்னா போச்சு... கொண்டாடி தீர்த்துடறாங்க!
சென்னை: டிவி சேனல்களில் எதாவது சீரியல் சூப்பர் ஹிட்டாகி விட்டால் போதும், அந்த சீரியலின் நாயகன் நாயகியை அந்த நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி என்று வைத்து கொண்டாடித் தீர்த்து விடுகிறார்கள்.
அவர்களுக்கு சொந்த வாழ்க்கை ஒன்று உள்ளதே என்கிற கவலை அவர்களுக்கு இல்லை. அவர்களை பக்கத்து பக்கத்தில் உட்கார வச்சு சேனல்கள் ரியாலிட்டி ஷோ என்று ஒரு கேம் ஷோ நடத்துகிறார்கள் பாருங்கள் கொடுமை!
கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று ரன் சீரியல் குடும்பத்தை வைத்து சன் டிவி நடத்திய சிறப்பு நிகழ்ச்சி கூட இந்த ரகம்தான்.

சீரியல் ரன்
ரன் சீரியல் சிறப்பு நிகழ்ச்சி சன் டிவியில் நடைப்பெற்ற போது, அந்த சீரியலின் நாயகி சரண்யா, நாயகன் கிருஷ்ணா பங்குபெற்றனர். இதற்கு முந்தைய தெய்வமகள் சீரியலின் நாயகி வாணி போஜன் இதில் சிறப்பு விருந்தினர்.. ஏற்கனவே இவர்கள் இருவரையும் வச்சு பல நிகழ்ச்சிகளை செய்துவிட்ட சன் டிவி, இப்போதும் வாணி போஜனை விட்டு வைக்காமல் சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்து இருந்தது.

கிருஷ்ணா ஹீரோ
ஹீரோ கிருஷ்ணாவுக்கு பிடித்த நிறம் எது என்று இரண்டு நாயகிகளும் சிலேட்டில் எழுத வேண்டுமாம். சிவப்பு என்று வாணி போஜன் சரியாக எழுதி இருந்தார்.அதோடு நடிகர் கிருஷ்ணாவும் அன்று சிவப்பு சட்டை அணிந்து வந்திருக்க, வாணி போஜனும் சிவப்பு சேலை உடுத்தி இருந்தார். இவருக்கு என்ன நிறம் பிடிக்கும் என்பதைத்தான் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்று நினைக்கிறார்களோ...

பிடிச்ச சிவப்பு
சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலருன்னு வாணிபோஜன் சிலேட்டில் எழுதியதுதான் சரி என்று கிருஷ்ணாவும் ஒப்புக்கொண்டார். இதுக்கு நிகழ்ச்சி நடத்திய பார்வதி அஞ்சு வருஷ கெமிஸ்ட்ரி என்று கிண்டல் செய்தார். இதை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் காம்பயரிங் செய்பவர்களிடம் அவாய்ட் பண்ண சொல்லி சொல்லக் கூடாதா?

கதாநாயகி யார்
அடுத்து பிடிச்ச கதாநாயகி யார் என்று இரு நாயகிகளும் எழுத வேண்டுமாம். வாணி போஜன் தனது பெயரையே எழுதி காண்பிக்கிறார்.சரண்யா தெரியவில்லை என்று எழுதி காண்பிக்கிறார். எதுக்குடா வம்புன்னு கிருஷ்ணா தனது மனைவியான சாயாசிங் பெயரையே எழுதி காண்பித்து விட்டார்.

இன்னும் இருக்கு
இது சாம்பிளுக்காக சொன்னதுதான்.. இன்னும் நிறைய சேனல்களில் இது போல சீரியல் நடிகர் நடிகைகளை வச்சு இது போல ஷோ நடத்துகிறார்கள். ஆனாலும் சன் டிவி அளவுக்கு ரீல் ஜோடியை ரியல் ஜோடியாக அளவுக்கு மீறி விஜய் டிவியில் உபயோகப்படுத்திக் கொண்டது இல்லை என்று சொல்லலாம்.
நடிகர் நடிகைகளும் வேறு வழி இல்லாமல் அல்லது பணத்துக்கு என்று, இது போல நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால் மறுக்க முடியாமல் வந்து விடுகிறார்கள், பர்சனல் வாழ்க்கை நிச்சயமாக பாதிக்கப்படும். இதுதான் மனித வாழ்க்கையில் இயல்பு.
எல்லை தாண்ட கூடாது..சினிமா வேறு,சீரியல்கள் வேறு!
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications