தல படம்... தீபாவளிக்கு... நாலு மணிக்கு.. பிரியா ராமன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்மையில் தல அஜீத் நடித்து பிரமாண்ட வெற்றி பெற்ற படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை ஜீ தமிழ் டிவி தீபாவளி அன்னிக்கு பிற்பகல் 4 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்படித் தவிர்ப்பது தடுப்பது.. எப்படி எதிர்கொள்வது என்பதை முழுவதுமாக விவரிக்கும் அருமையான படம்.

இந்த படத்தில் தல அஜீத் லாயராக நடிச்சு அசத்தி இருக்கார். இவரின் இந்த நடிப்பையும் இவருக்கான புகழையும் பார்த்த போனிகபூரின் பட நிறுவனம் அஜீத்தின் அடுத்த படத்தையும் தயாரித்து படத்தின் பெயரையும் பூஜை போட்டு அறிவித்து விட்டார்கள்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

வருகிற ஞாயிற்று கிழமை தீபாவளி அன்று நேர்கொண்ட பார்வை படத்தை ஜீ தமிழ் டிவி ஒளிபரப்ப உள்ளது.. இதை வெறும் ப்ரோமோவாக மட்டும் போடாமல் தங்களது தொலைக்காட்சியின் செலிபிரிட்டிகளை வச்சு பேச வைத்து படத்தை ப்ரோமோவாக வெளியிட்டு வருகிறது.

நடிகை பிரியா ராமன்

நடிகை பிரியா ராமன்

செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை பிரியா ராமன், நேர்கொண்ட பார்வை படம் சொல்லும் விஷயம் என்ன என்று தெளிவாக சொல்லி படத்தை விளக்குகிறார். பிறப்பில் இருந்து இறக்கும் வரை பெண்ணுக்கு எல்லா விதத்திலும் தனிப்பட்ட உரிமை என்று ஒன்று உண்டு என்று சொல்கிறார்.

தல கோர்ட்டில்

தல கோர்ட்டில்

கோர்ட் சீனில் தல அஜீத் எதிர் வக்கீல் ரங்கராஜ் பாண்டேயின் விவாதத்தின் ஒவ்வொரு பாயிண்ட்டையும் எடுத்து, அதில் இருந்து பெண்கள் இப்படி இருந்தால், இப்படி அர்த்தம் என்று எடுத்துக் கொள்வார்கள்.சோ, இதை பெண்கள் செய்யக் கூடாது என்று பாயிண்ட் எடுப்பது அருமை.

என்னதான் அப்படி

நேர்கொண்ட பார்வை படம் அப்படி என்னதான் சொல்ல வருகிறது? சமூகத்துக்கு ஏற்ற கருத்துக்களை ஏற்ற வகையில் சரியாக சொல்லி இருக்கிறதா என்பதை படம் பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டிய படம். இதில் பிக்பாஸ் அபிராமியும் நடிச்சு இருக்கார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+