thazhamboo serial: விஜய் டிவியின் அதிரடி மாற்றங்களில் தாழம்பூ சீரியல்?
சென்னை: விஜய் டிவியின் அதிரடி மாற்றங்களில் தொலைந்து போனது தாழம்பூ சீரியல்.
தாழம்பூ சீரியல் கிராபிக்ஸ்... நாகலோகம் என்று மர்மங்கள் நிறைந்ததாக இருந்தது.
நாகங்கள் மனிதர் உருவம் எடுத்து வருவது, பாதி மனித உடல், பாதி பாம்பு உடல் இப்படியான கதை.

ஆரம்பத்தில் கிராபிக்ஸ்
ஆரம்பத்தில் தாழம்பூ சீரியலில் அதிகம் கிராபிக்ஸ் என்று இருந்ததில் கொஞ்சம் சலிப்பாக இருந்தாலும், ஆத்ம லிங்கம், இதற்கான வழிபாட்டு முறை என்று இந்திரா சவுந்திரராஜன் கதை போல த்ரில்லிங்காகவும் இருந்தது. இடையில் நாகத்துக்கு எதிரான கருடன் கதையும் இருந்தது.

நம்ப முடியாத
நம்ப முடியாத கதை என்று பேச்சு வந்த போது... அப்படி இப்படி என்று விமர்சனங்கள் வந்தபோது கூட, இது வெறும் கற்பனை கதைதான்.. இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்தே நம்ப முடியாத இது போன்ற கற்பனை கதைகளால் வளர்ந்த நாடு. மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்காக அல்ல.. என்று ஒரு முறை அல்ல சீரியல் ஒளிபரப்பின இடைவேளையின் இரு முறையும் பொறுப்பு துறப்புக்கு பதில் கூறினார்கள். அதோடு, ஸ்கொரோலிங்கிலும் நிகழ்ச்சியைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தெளிவுப் படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

தாழம்பூ பெயர்
தாழம்பூ பெயரே நாகங்களுக்கு பிடித்தது என்று சொல்லப்படும் பூவின் பெயரான தாழம்பூ என்றும், சிவனுக்கு உகந்தது அல்ல என்று சொல்லப்படும் தாழம்பூவின் பெயரையும் வைத்து சீரியல் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டி இருந்தார்கள்.

நல்ல கதை
கதை நன்றாக சென்று கொண்டு சீரியல் ஆர்வலர்களின் எதிர்பார்பைத் தூண்டி, விஜய் டிவியில் இப்படி ஒரு கதையம்சம் கொண்ட வித்தியாசமான சீரியலா என்று எண்ணி இருந்த வேளையில், இப்போது அந்த சீரியல் இல்லை.












Click it and Unblock the Notifications