Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெத்தலை பாக்கு போடுங்க.. வாழ்க்கை சூப்பரா இருக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிலை போடுவதை கிட்டத்தட்ட ஒரு கெட்ட பழக்கம் போல பார்க்க ஆரம்பித்து ரொம்ப காலமாய்ருச்சு. அதேசமயம், வரிசையில் நின்று மது வாங்குவதை பெருமையாக "மதுப் பிரியர்கள்" என்று சொல்லி சிலாகிக்கும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

தாம்பூலம் என்று சொல்லப்படும் வெற்றிலை பாக்கு போடுவதன் மகத்துவம் இன்றுள்ள தலைமுறையில் எத்தனை பேருக்குத் தெரியும்.. நிச்சயம் 99 சதவீதம் பேருக்கு அதன் அருமை தெரிய வாய்ப்பே இல்லை. காரணம் அவர்களது அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்திருந்தால்தானே.. ஏன் அவர்களே கூட இந்தப் பழக்கத்தை மறந்து விட்டு வேறு ரூட்டில் போய் விட்டார்களே.

Thamboolam an unforgetten habit among the people

முன்பெல்லாம் அசைவம் சாப்பிட்ட பிறகு ஆற அமர உட்கார்ந்து வெற்றிலையை எடுத்து நல்லா நீவி விட்டு, காம்பை கிள்ளி தூரப் போட்டு விட்டு சுண்ணாம்பை மெல்லிசாக தடவி, பாக்கை வைத்து மடக்கி வாய்க்குள் போட்டு அதக்கி வெற்றிலை போடாமல் அந்த நாள் அசைவச் சாப்பாடு முடியாது. இன்று அப்படியா இருக்கிறது.. வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் சாவோம் என்று ஆளாளாக்கு அனல் பறக்க ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ரசித்து உட்கார்ந்து வெற்றிலை போடுவதை கிராமப்புறத்தில்தான் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு நாசமாகிப் போய்க் கிடக்கிறது இன்றைய நாகரீக உலகம். ஆனால் வெற்றிலையில் அத்தனை மகத்துவம் இருக்கிறது.. மருத்துவம் மறைந்து கிடக்கிறது. நிறையப் பேருக்கு அது புரிவதில்லை. ஆமா, யாரு உட்கார்ந்து நீட்டி நிதானமாக வெற்றிலை போடுவது என்று அலுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.

"செரிமான"ப் பிரச்சினை முதல்.. "ஆண் மலட்டுப் பிரச்சினை" வரை.. பல அனுகூலங்கள் இந்த வெற்றிலையில் மறைந்து கிடக்கிறது.. மகத்துவங்கள் கொட்டிக் கிடக்கிறது.. அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும். அப்படிப்பட்ட வெற்றிலையின் மருத்துவம், அதன் மருத்துவ குணம் உள்ளிட்டவற்றை இந்த யூடியூப் சானலில் அழகாக சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் பாருங்க.. நல்லாருக்கு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+