தம்பி வீட்டுக்கு போக முடியலை சார்.. பொண்டாட்டி தொல்லை!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா ரியாலிட்டி ஷோவில் திருமணத்துக்கு பிறகு உண்டான புதிய உறவுகளால் நீங்கள் அனுபவிக்கும் சிக்கல்கள் என்னென்ன என்று கேட்டபோது, ஒருவர் தம்பி வீட்டுக்கு போக முடியலை சார்.. பொண்டாட்டி டார்ச்சர் என்று கூறினார்.
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியை இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். ஞாயிறு தோறும் இரவு 9:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில், கல்யாணத்துக்குப் பிறகான புதிய உறவுகளால் அனுபவித்த சிக்கல்கள் குறித்து ஒரு சாராரும், அடையும் நன்மைகள் கண்களில் தெரியவில்லையா என்று ஒரு சாராரும் விவாதிக்கிறார்கள்.

தம்பி வீட்டுக்கு போக முடியலை
கல்யாணத்துக்கு பிறகான புதிய சொந்தம்.. அதில் அனுபவித்த சிக்கல்கள் குறித்து ஒருவர் பேசும்போது, என் தம்பி வீட்டுக்கு போக முடியலை சார்னு சொன்னார். என் போக முடியலை என்று கேட்டபோது, எல்லாம் மனைவியோட டார்ச்சர்தான் சார். தம்பி வீட்டுக்கு போனா எதுக்கு தம்பி வீட்டுக்கு போனே.. எதுக்கு உன் தம்பிக்கு போன் பண்றே.. இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகள்.

சாப்பாட்டுக்கு போயிடலாம்ல
தங்கச்சிக்கு போன் செய்தால் எதுக்கு போன் பண்றே.. அப்பறம் சாப்பாட்டுக்கு அங்கேயே போயிட வேண்டியதுதானேன்னு மகனை பேசுவது போல சாடை பேசுவா சார். வீட்டில் உட்கார்ந்து போன் பேச முடியாது சார்னு அலுத்துக் கொண்டார். சீர் செய்யறதுன்னு ஒண்ணு இருக்கு சார். நாலு அண்ணனுக்கு ஒரு தங்கச்சியா பொறந்ததுன்னு வச்சுக்கோங்க சார். மச்சினங்களுக்கு செய்து ஓஞ்சடனும் சார் என்று ஒருவர் சொன்னார்.

அவங்க செய்தால்
அந்த நாலு அண்ணனும் உங்க பிள்ளைக்கு சீர் செய்யும்போது அதை என்ன சொல்வீங்க என்று கரு. பழனியப்பன் கேட்டார். ஒவ்வொரு அண்ணனும் நாலு, நாலு பிள்ளை பெத்தா என்ன சார் செய்யமுடியும் என்று அவர் கஷ்டத்தை அவர் சொன்னார்.இதற்கு ஒரு பெண் பதில் அளிக்கையில், உங்களுக்கு யாராவது எதாவது செய்தால், அதை திருப்பி செய்யணும்னு எண்ணத்திலேயே நீங்க இருந்து இருக்கீங்க.

ஹேப்பி மொமெண்ட்
அந்த ஸ்பாட் ஹேப்பி மொமென்ட்டா அதை நீங்க என்ஜாய் பண்ணுங்க அப்போதுதான் ஹேப்பியா இருக்க முடியும் என்று ஒரு பெண் பதில் அளித்தார். இந்த விவாதத்தை பார்க்கையில், எல்லாருமே திருமணம் மூலம் வரும் புது சொந்தத்தை கொண்டாடினாலும், நண்பர் சொந்தகாரர்கள் என்று கூடிவிட்டால், மனைவி வீட்டை குறைச்சு பேசி மார் தட்டிக் கொள்ளும் பெரும்பாலான ஆண்களின் பகட்டான செயல்கள்தான் கண்முன் நிற்கிறது. உள்ளுக்குள் இந்த சொந்த பந்தங்களை விரும்பத்தான் செய்கிறார்கள்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications