Thamizha Thamizha programme: தாடி வச்சிருக்கறவன் காப்பாத்துவானா?.. என்னடா உலகமிது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போது இளைஞர்கள் சின்னதாக தாடி வைத்து இருப்பது டிரென்டில் உள்ளது. இதை பார்த்து நடுத்தர வயதினர் கூட இப்போது தாடியில்தான் இருக்கிறார்கள்.

தாடி மீசை குத்தும் என்று, குழந்தைக்காக அல்லது மனைவிக்காக என்று க்ளீன் ஷேவில் இருக்கும் ஆண்கள், இப்போது தாடியை எடுப்பதா நோ.. என்று அலறுகிறார்கள்.

இளம் பெண்கள் எல்லாருக்கும் தாடி வைத்த ஆண்களை மிகவும் பிடிக்கிறது என்று சொல்கிறார்கள். இதில் பீடிகை எதுவும் இல்லாமல் நேருக்கு நேர் பேசிவிடலாம் என்று ஜீ தமிழ் டிவி முடிவு எடுத்துள்ளது போலும்!

தமிழா தமிழா

தமிழா தமிழா

ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியை இயக்குநர் கரு. பழனியப்பன் நடத்தி வருகிறார். வாராவாரம் இந்த நிகழ்ச்சி ஞாயிறு இரவு ஒன்பதரை மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. வரும் வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இளம் பெண்களும், ஆண்களும் சேர்ந்து கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் படி பேசி இருக்கும் இந்த ப்ரோமோ நன்றாக இருக்கிறது.

என்னது தயிர்சாதம்

என்னது தயிர்சாதம்

சாக்லேட் பாய் என்றால் தயிர் சாதம் என்கிறீர்கள் தயிர் சாதம் என்றால் என்ன விளக்கம் கொடுங்கள் என்று கேட்கிறார் கரு.பழனியப்பன்.அதற்கு ஒரு இளம்பெண்.. தயிர்சாதம் என்றால் சப்புன்னு இருப்பாங்க சார்னு சொல்றார். நிஜமா பலருக்கும் தெரியாத விஷயம்தான் இது, இப்படியும் அர்த்தம் வருகிறது போலும், தயிர்சாதம் என்பதற்கு.

ஏன் பிடிக்குது

ஏன் பிடிக்குது

தாடி வச்சு இருந்தால் மட்டும்தான் இன்றைய இளைஞர்களை பிடிக்கிறது என்று சொல்கிறீர்கள். தாடியில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார் சின்னதாக தாடி வைத்து இருக்கும் கரு.பழனியப்பன். தாடி இல்லாமல் க்ளீன் ஷேவில் இருக்கும் ஆண்களை ஏன் பிடிக்கலைன்னு கேட்கிறார்.

மொழுக்குன்னு இருக்கும்

மொழுக்குன்னு இருக்கும்

தாடி இல்லைன்னா மொழுக்குன்னு இருக்கும் சார் முகம்.குழந்தை மாதிரிதான் இருக்கும் என்று ஒரு இளம் பெண் சொல்லி சபையை சிரிப்பில் அதிர வைக்கிறார். இன்னொரு பெண், தாடி வச்சவனா இருந்தால் அவன் மேல் ஒரு நம்பிக்கை வருது. எந்த மாதிரி நம்பிக்கை என்றால் ,தன்னை வச்சு காப்பாத்துவான் எனும் அளவுக்கு நம்பிக்கை வருதாம்... என்னடா சோதனை இது?!

பெண்களுக்கு தமிழ் பசங்க

பெண்களுக்கு தமிழ் பசங்க

கேட்க கேட்க சிரிப்பு வருது.. ஆனால்,ஒண்ணு வட மாநிலங்களிலிருந்து இங்கு நடிக்க வந்திருக்கும் பெண்களுக்கு, அல்லது வேலை செய்ய வந்திருக்கும் பெண்களுக்கு தமிழ் நாட்டு ஆண்களைத்தான் பிடிக்கிறது என்று சொல்கிறார்கள். அதுவும் கருப்பாக இருந்தால் ரொம்ப பிடிக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதையும் வைத்து ஒரு ஷோ பண்ணலாமே சார்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+