டிக்டாக் வீடியோக்கள் வெறும் விளையாட்டு.. விபரீதம்.. எது உண்மை?
சென்னை: டிக்டாக் வீடியோக்கள் வெறும் விளையாட்டாக கடந்து போக வைக்கிறதா. இல்லை விபரீதம் ஏற்படுத்துகிறதா? இது பற்றிய விவாதம்தான் இந்த வாரம் ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில்.
அதோடு ஜாதிய பெருமைகளை பேச சமூக வலைத்தளங்கள் எளிதாக வழியமைத்து கொடுக்கிறதா? போன்ற ஒரு அனல் பறக்கும் விவாதங்கள் பல..
எல்லாத்தையும் சமூக வளைத் தளத்தில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பகிர்ந்துக் கொள்ள முடிகிறது. இந்த சுதந்திரம் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

ஜெயிலுக்கு போறேன்
நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொல்லுவார்.. நானும் ஜெயிலுக்கு போறேன்..நானும் ரவுடிதான் ஜெயிலுக்கு போறேன்னு. இப்படி ஒருத்தர் பிக்பாக்கெட் கேசில் உள்ளே போயிட்டு வந்து நான் ஜெயிலுக்கு போயிட்டு வந்தேன்னு ஒரு டிக்டாக் வீடியோ போட்டு இருந்தார். இதைப் பார்த்த மக்களில் யாருக்காவது ஜெயிலுக்கு போனாத்தான் கெத்து போலன்னு நினைவு வருமா வராதா என்று கேட்டார்.

ஃபாலோ பண்றோமா?
அதற்கு இன்னொரு இளைஞர் சார் இப்போ சினிமா பார்க்கறோம்.. அதை பார்த்து ஃபாலோ பண்றோமா? அது மாதிரி இந்த வீடியோவையும் பார்த்துட்டு கடந்து போக வேண்டியதுதானேன்னு கேட்டார். எந்த மாதிரி டிக்டாக் வீடியோவை நீங்கள் பதிவிடுகிறீர்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கரு.பழனியப்பன் கேட்டார்.

காலில் எத்தி போட்டேன்
ஒண்ணும் இல்லை சார் மழையில் தேங்கி நின்ற தண்ணீரை காலால் எத்தி விடுவது போல ஒரு டிக்டாக் வீடியோ போட்டேன்..இதுல என்னவாகப் போகுதுன்னு சொல்ல, எதிர் திசையில் இருந்து ஆவேசமான ஒரு குரல். சார் இவர் டிக்டாக் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன். அதில் அவர் ஜாதி பெருமையை முன்னிறுத்தி பல வீடியோக்கள்; போட்டு இருக்கார் சார்னு சொன்னார்.

உங்களுக்கே கூச்சம்
பார்த்தீங்களா... எந்த மாதிரி டிக்டாக் வீடியோ போட்டு இருக்கீங்கன்னு நான் கேட்டேன்.. நீங்க மழை.. தண்ணின்னு சொன்னீங்க.உங்களுக்கே நீங்க போட்ட வீடியோ பத்தி இங்கே சொலல் கூச்சமாத்தானே இருக்குன்னு கரு.பழனியப்பன் கேட்டார். இது போல இன்னும் பல பேரின் டிக்டாக் வீடியோ பத்தி தெரிஞ்சுக்க .தமிழா தமிழா ஞாயிறு இரவு 9.30 மணிக்கு பாருங்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications