Katrin Mozhi Serial: எந்த காலத்துல இருக்கீங்க?.. கடுப்பேத்தறார் மை லார்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புது சீரியல்களை அறிவித்து வருகின்றன. அதற்கான ப்ரோமோவையும் ஒளிபரப்பி வருகின்றன.

சன் டிவியின் ராசாத்தி சீரியல் இன்று முதல் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் நடிக்கர் விஜயகுமார், நடிகை விசித்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நாயகியாக நடிகை பாவனி நடிக்கிறார் போலும். முதல் மரியாதை ,பரிவட்டம் என்று கதை முதலில் கோயில் திருவிழாவில் ஆரம்பிக்கிறது..

காற்றின் மொழி

காற்றின் மொழி

விஜய் டிவியில் காற்றின் மொழி என்று ஒரு புது சீரியலை ஒளிபரப்ப உள்ளனர். ப்ரோமோவில் விரைவில் என்றுதான் அறிவித்து வருகிறார்கள். விஜய் டிவியின் ராஜா ராணி புகழ் நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக இந்த சீரியல் நடிக்கிறார். இவர் கதைப்படி அமெரிக்கா ரிட்டர்ன் பாய்.

சரியான வசனமா?

சரியான வசனமா?

இந்த காட்சியை பாருங்க... சஞ்சீவ் முதுகைக் காட்டிக் கொண்டு நிற்கிறார். ஏம்ப்பா அமெரிக்கா தம்பி என்னவோ கதை சொல்றேன்னு சொல்லிட்டு, இப்படி நின்னா எப்படின்னு வயதானவர்கள் கூடி இருக்கும் கூட்டத்தில் ஒருவர் கேட்கிறார். இந்த அமெரிக்கா தம்பி இதைக் கேட்டு உடனே திரும்பி அவர் என்ன சொல்றார் தெரியுமா?

உண்மையா இது?

உண்மையா இது?

கையை குவிச்சு கதாநாயகன் சொல்றார். ஒரு நாள் ராத்திரி நேரம்... தடதடன்னு இடி.. இந்த பக்கம் ஒரு மின்னல், அந்த பக்கம் ஒரு மின்னல். பேய் மழை. அப்போது ஒரு அழகான பொண்ணு ஆற்றங்கரையில் தோணியில் வந்து தனியாக இறங்குகிறார். குளிரில் நடுங்கி நின்ற என்னைப் பார்த்து சைகையில் என்னவோ சொல்கிறார்.

பாட்டி அதற்குள்

பாட்டி அதற்குள்

அதற்குள் பாட்டிகளுக்குள் இருவர் மட்டும் பேசிக்கறாங்க... பாவம் அந்த புள்ளைக்கு பேச்சு வரத்து போலிருக்குன்னு. அதற்கு சஞ்சீவ் சொல்றார் ஏய் கிழவி.. அவளுக்கு பேச்சுத்தான் வராது.. ஆனால், அவ கண்ணு நல்லா பேசும் என்று. அவ கண்ணு பேசட்டும் ,உதடு பேசிட்டும் எது வேணும்னாலும் பேசட்டும்ங்க. அதென்ன ஏய் கிழவின்னு மரியாதை இல்லாம?

கடுப்பாருக்குய்யா

கடுப்பாருக்குய்யா


இளைய தலைமுறையினரை கெடுக்கறீங்களா?வசனத்தில் ஏய் பாட்டின்னு சொன்னால்தான் என்ன. ஐயோ பாட்டி பேச்சு வரலேன்னா என்ன அவ கண்ணு நல்லா பேசுதுன்னு சொன்னால் என்ன? அதெப்படி பந்து மாதிரி கையை குவிச்சு இந்த பக்கம் ஒரு மின்னல், அந்த பக்கம் ஒரு மின்னல்னு மின்னும். இது சரியா? இடி தடதடன்னு இடிக்குமா? புதுசா வசனம் எழுதறேன்னு தமிழ் மொழியை நன்றாக கையாளாமல் விட்டுடாதீங்க!

புதுமைன்னு சொல்லி கடுப்பேத்தறாங்க மை லார்ட்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+