Web Series: தனியே தன்னந்தனியே.. தி பாய்ஸ் வெப் சீரீஸ் பாருங்க...!
சென்னை: அமேசான் ப்ரைம் வெளியிட்டு இருக்கும் தி பாய்ஸ் வெப்சீரீஸ் பள்ளி விடுமுறை..லாக்டவுன்..கோவிட் 19 டென்சன் என்று பல காரணங்களால் பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது.
சூப்பர் ஹீரோ அமிதாப், ரஜினிகாந்த், சிரஞ்சீவி என்று ரசித்து வந்தாலும்.. ஸ்பைடர் மேன்...பேட் மேன் இவர்கள் எப்போதும் தேடித் தேடி ரசிக்கப்படுபவர்கள்.
அந்த வகையில் சூப்பர் மேன் என்று ஒருவர் உலகத்தில் இருந்தால்...? அவர் எப்படி இருப்பார்? உடலளவில் பலசாலியா? பலராலும் ரசிக்கப்படும் அந்த சூப்பர் மேன் தனிப்பட்ட ஒரு மனிதனாக எப்படி இருப்பார்?

தி பாய்ஸ் வெப் சீரீஸ்
சூப்பர் மேன் எனப்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கனவுக்கண்ணன் எப்படி இருப்பார்? இவரை கேமிராவுக்கு பின் என்று கற்பனை செய்யப்படும் போது ஏற்படும் ஏமாற்றம்...இதனால் குழந்தைகள் மனதில் கனவுக்கண்ணனாக இருந்த அந்த சூப்பர்மேன் எப்படி சாதாரண மனிதனாக அடிபட்டுப் போகிறார் என்பதை விளக்கும் கதை தி பாய்ஸ் வெப் சீரீஸ்.

நிறைய சர்ப்ரைஸ்
தி பாய்ஸ் வெப் சீரிஸில் நிறைய சர்ப்ரைஸ்.. எதிர்பாராத திருப்பங்கள் என்று நொடிக்கு நொடி சீரிஸ் விறுவிறுப்பாக இருக்கிறது. 7 பாய்ஸ் என்று ஒரு சூப்பர் ஹீரோ குரூப். இதற்கு தலைவராக ஒருத்தர் இருக்கிறார். இந்த குரூப்பில் ஒரு நபர் புதிதாக சேர்க்க வேண்டும்.அந்த வேலைக்கு புதிதாக சேரும் நபர் சூப்பர் மேன் பற்றிய பல்வேறு விதமான கனவுகளுடன் குரூப்பில் சேரும்போது என்ன நடக்கிறது?

கனவுகள் அதிர்ச்சி
புதிதாக சேர்ந்தவன் சூப்பர் மேன் கேமிராவுக்கு பின்னால் பிசிக்கலாக எப்படி இருக்கிறார்கள்.. மென்டலாக எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. எப்படி ஏமாற்றுகிறார்கள்... என்பதை அறிந்து அதிர்ச்சி ஆகிறான். அவனது சூப்பர் மேன் கனவுகள் தகர்ந்து கோபம் பீறிடுகிறது. கூட்டாளி சேர்த்துக்கொண்டு சூப்பர்மேனை பழிவாங்க என்னென்ன செய்கிறான்? இதுதான் தி பாய்ஸ் வெப் சீரீஸ்.கதை.

செம வயலென்ஸ்
தி பாய்ஸ் வெப் சீரிஸ் செம வயலென்ஸில் இருப்பதாகவும், தனியே உட்கார்ந்து பார்த்தால்தான் அந்த பயங்கரத்தை அனுபவித்து பார்க்கமுடியும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.தி பாய்ஸ் வெப் சீரிஸ் 7 எபிசோட் கொண்டது. இந்த கதை முதலில் காமிக்ஸ் புத்தகமாக வந்து , பின்னர் வெப் சீரிஸ் வடிவம் பெற்றுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications