பேய் கதை சொல்லும் பிரியங்கா, அபிஷேக்...சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
சென்னை : அடடா கேட்கும்போதே தலையை சுற்றுகிறது என்று ரசிகர்கள் பிரியங்கா, அபிஷேக் கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது இல்லை என்று சொல்கிற மாதிரி போட்டிபோட்டு பேய் கதையை சொல்லி ரசிகர்களையும் போட்டியாளர்களையும் பயமுறுத்தி வருகிறார்கள்.
இவர்கள் இருவரின் ரசிகர்கள் தற்போது உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சியில் தொடங்கிவிட்டார்கள்.

தனித்துவமான பேச்சுத்திறமை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் அனைவருக்கும் டப் கொடுக்கும் போட்டியாளராக பிரியங்கா இருக்கிறார். இவர் இந்த சீசனுக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்தவர். தொகுப்பாளராக பலர் இருந்தாலும் தன்னுடைய பேச்சால் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே ஒரு சிலருடைய முகம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் அதில் இவருடைய முகமும் தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது.

கேமராவும் ரசிக்கும் அழகு
இவர் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இவருடன் இருக்கும் சக போட்டியாளர்கள் கலாய்த்து வந்தாலும் கண்டுகொள்ளாமல், தன்னுடைய கலகலப்பு மாறாமல் அவர்கள் வாயை அடைத்து விடுவதில் வல்லவர். இந்த மாதிரி திறமை எல்லாம் ஒரு சிலருக்கு தான் இருக்கும் என்று சொல்லும் அளவில் இவர் அசத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் கூட அனைத்து இடங்களிலும் இவருடைய பங்களிப்பு இருந்து வருகிறது. திரும்பும் பக்கமெல்லாம் இவர் நின்று கொண்டிருக்கிறாரா??அல்லது இவரை சுற்றி தான் கேமராவே சுற்றி வருகிறதா?? என்று பலரும் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு அறிமுகமாகியிருக்கும் சினிமா பையன் என்று தனக்குத்தானே பெயர் வைத்திருக்கும் அபிஷேக் இவருக்கு சளைத்தவரல்ல என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார்.

இந்தத் திறமை வேற லெவல்
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து பிரியங்கா இவரிடம் அதிகமாக ஒட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், தன்னுடைய வாலண்டரி பேச்சால் இவரை அடிக்கடி வம்பிழுத்து, ஒரு கட்டத்தில் அக்கா என்ற சென்டிமென்ட் போட்டுத்தாக்கி தற்போது அபிஷேக்கும், பிரியங்காவும் ஒன்றுக்குள் ஒன்று என்று ரசிகர்களை கூற வைக்கும் அளவிற்கு ஒரே மாதிரியான சிந்தனைகளை கொண்டிருக்கும் இவர்கள் சொன்ன கதைகள்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ரசிகர்களை கவர்வதற்காக இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் வேற லெவல் வைரலாகி வருகிறது. பலரும் தங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் தெரியாதவர்கள் போல யதார்த்தமாக பேசி வருகின்றனர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video

திரில்லிங்கான பேய் கதை
கதை சொல்லும் டாஸ்க்கில் அபிஷேக் தன்னுடைய தந்தையின் ஆவி, தாயின் உடலுக்குள் சென்றதை பார்த்தேன் என்று சொல்லி இருப்பது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நேரத்தில், பிரியங்கா ஒரு படி மேலே சென்று தன்னுடைய தந்தை இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே எனக்கு கனவில் அது தெரிந்துவிட்டது. அதுபோலவே ட்ரெயினில் நடந்ததை நான் கனவில் பார்த்தேன். அதனை என்னுடைய அம்மாவிடமும் கூறியிருந்தேன். அதற்கு ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் அவருக்கு அதிகநாடகள் வாழ்வார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் நான் கனவில் கண்டது அப்படியே நடந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். இதுதான் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் சொல்லும் பேய் கதையை கேட்பதற்கு ரொம்ப த்ரில்லிங்கா இருக்கிறதே என்று ரசிகர்கள் பலர் கூறிவருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications