Azhagu Serial: சுதா ரூட்டை பிடித்துவிட இப்போ பூர்ணாவோட கோல்டன் வார் நடக்குதே!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் பூர்ணா கால் நடக்க முடியாத மாதிரி நடிக்கறான்னு தெரிஞ்சுக்கிட்டு, அவளை திருத்த சரியான ரூட்டை கண்டுபிடிச்சு, இப்போ சுதாவுக்கும், பூர்ணாவுக்கும் கோல்டன் வார் நடக்குது.
எப்போதும் விட்டுக் கொடுத்துப் போகும் சுதாவை, அவரது ரசிகர்கள் எரிச்சலாகப் பார்த்துக்கொண்டு இருக்க, இப்போது சுதாவின் இந்த மாற்றம் ரசிக்கும்படி இருப்பதால், கடந்த மூன்று தினங்களாக ரசிகர்கள் அழகு சீரியலை விரும்பிப் பார்க்கிறார்கள்.
வழக்கம் போல இந்த வாரம் நடிகை ரேவதி மிஸ்ஸிங். இதெல்லாம் புரடக்ஷன் விவகாரம் என்று, விஷயத்தை கிடப்பில் போட்டுவிட வேண்டியதுதான். எப்போது ரேவதி வருகிறாரோ வரட்டும்... அப்போது பார்த்துக்கலாம் என்கிற அலட்சியம் அழகு சீரியல் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வந்துவிட்டது.

பூர்ணாவின் கோவம்தான் அழகு
அழகம்மை மருமகள், சுதாவின் தங்கை பூர்ணாவின் கோவம் மட்டும்தான் அழகு சீரியலின் கதை. கோவத்தில் பூர்ணா என்னென்ன தீமைகள் செய்கிறாள், யாரை எப்படி ஏமாற்றுகிறான்..இதற்கு மற்றவரின் ரியாக்ஷன் என்ன இதுதான் சீரியல் எபிசோட். பூர்ணா எல்லை மீறிய தவறு அல்லது கெடுதல் செய்யும்போது அந்த விஷயம் போலீஸ் வரை போகிறது. இதில் இருந்து பூர்ணாவைக் காப்பாற்ற அம்மாவாக லாயர் சகுந்தலா தேவி ஆதரவு அளிப்பது என்று கதை போகிறது.

கதைக்குத்தான் எடுபடும்
பூர்ணாவின் அனைத்து செயல்களும் கதைக்குத்தான் எடுபடும். ஒரு சுவாரஸ்யமான அக்கா தங்கை சண்டையை மட்டுமே எடுத்துக்கொண்டு அழகு சீரியல் பயணிக்கிறது. இனியும் இதன் உச்சம்தான் கதை. இப்போதுதான் சுதாவுக்கு இயக்குநர் நல்ல பாதையை காண்பித்து இருக்கிறார்.தங்கையுடன் இனி சமரசம் பேசினால் சரி வராது. அவள் போக்கில் சென்று அவளைத் தட்டி வைப்பது மட்டுமே அவள் திருந்த வழி என்று சரியான முடிவு எடுத்து பயணிக்கிறார்.

தேவைக்கேற்ப பட்ஜெட்
சீரியலின் தேவைக்கு ஏற்ப பட்ஜெட்டை கணக்கில் வைத்து சில சமயம் இருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் கூட இல்லாமல் காட்சி நகருது. இது ரேவதி விஷயத்தில் மட்டும் இல்லை, திருநா, அர்ச்சனா, காவ்யா,மதன் என்று கதாபாத்திரங்களின் பட்டியல் நீண்டுகொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக வந்து போகும் கதாபாத்திரங்களான சகுந்தலா தேவி, அவரது கணவர், அவரது உதவியாளர் என்று இந்த கதாபாத்திரங்கள் என்றும் மிஸ் அவதில்லை.

இயக்குநர் சக்ஸஸ்
புரடக்ஷன் கம்பெனிக்குத் தகுந்தவாறு அவர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப எடுத்தாலும், அழகு சீரியல் சக்சஸ்தான். அந்த விதத்தில் இயக்குநருக்கு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்த 6:30 மணி நேர ஸ்லாட் என்பது ஹிட்டாக இதுவரை பார்க்கப்படவில்லை. இப்போது இந்த நேரம் அழகு சீரியலுக்கான நேரமாகி பலரையும் பார்க்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications